Home செய்திகள் தமிழகம் தமிழ் கடவுள் புராணம் அவமதிப்பு: கந்த சஷ்டி விவகாரத்தில் கறுப்பர் கூட்டத்தை சேர்ந்த ஒருவர் சரண்!

தமிழ் கடவுள் புராணம் அவமதிப்பு: கந்த சஷ்டி விவகாரத்தில் கறுப்பர் கூட்டத்தை சேர்ந்த ஒருவர் சரண்!

கருப்பு நிறத்தின் அடையாளமாகவும் திராவிட உதயத்தின் அடையாளமாகவும் இருக்கும் பெரியார், தாழ்த்தப்பட்டவர்கள் கோவிலுக்குள் நுழைய வேண்டும் என்ற போராட்டம் முன்னிருத்தியதில் பிரதானமான ஒருவர். இன்று அவரின் பெயரையும் ஒரு காரணமாக முன்னிருத்தி பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.

இந்துமத கடவுள்களை ஆபாசமாக கறுப்பர் கூட்டம் என்ற யூடியூப் சேனல் சித்தரித்து வருகிறது. இதன்காரணமாக இந்த சேனல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்து அமைப்புகள் காவல்துறையில் புகார் அளித்தனர்.

அதேபோல் சிவசேனா கட்சியின் மாநில செயலாளர் சுந்தர வடிவேலன் நாகப்பட்டினம் எஸ்பிக்கு ஆன்லைன் மூலமாக புகார் அளித்து இருந்தார். அதில், தமிழகத்தில் மத மோதல்களை உருவாக்கும் உள்நோக்கத்துடன் கறுப்பர் கூட்டம் சேனலில் இந்து கடவுள்கள் ஆபாசமாக சித்தரிக்கப்பட்டிருப்பதால் நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.

இந்த புகாரின்பேரில் ஜாதி, மத, இன மொழி ரீதியில் மோதலை ஏற்படுத்தும் விதமாக கறுப்பர் கூட்டம் இணையதளத்தின் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்து சமஸ்கிருத புறானங்களின் மீது சொல்லப்பட்டிருக்கும் வாக்கியங்களை ஆபாச கருத்துகளாக சித்தரித்ததும், இந்த வாசகங்கள் பெரியார் காலம் முதல் பல பேர் இது குறித்து பேசியதின் தொடர்ச்சியே, இது தமிழக மக்களின் மனதை புன்படுத்தும் விதமாக உள்ளது கறுப்பர் கூட்டம் சேனலுக்கு வருத்தமளிக்கிறது எனவும் இதையடுத்து இந்த வீடியோவை நீக்குகிறோம் எனவும் அந்த சேனல் தரப்பில் தெரிவித்துள்ளது.

மேலும் கறுப்பர் கூட்டத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர் ஓர் இஸ்லாமியர் என்றும் கிறித்துவர் என்றும் பொய்யான பிரச்சாரத்தை இந்துத்துவ அமைப்புகள் உள்ளிட்ட பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். மத கலவரத்தை தூண்டும் விதமாக உள்ளது என இந்த வீடியோவுக்கு பலரும் கருத்துகள் தெரிவித்து வன்மையான கண்டனத்தையும் வருத்தத்தையும் தெரிவித்து வந்தனர்.

இந்த நிலையில் இந்து மதம் குறிப்பாக தமிழ் கடவுள் என்று போற்றப்படும் முருகனின் கந்த சஷ்டி கவசத்தை அவமதித்த கறுப்பர் கூட்டம் யூடியூப் சேனலைச் சேர்ந்த செந்தில் வாசன் என்பவர் கைது செய்யப்பட்டார். மற்றொரு நபரான சுரேந்திரன் முன்ஜாமீன் கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

மறுபுறம் சுரேந்திரன் புதுச்சேரி அரியாங்குப்பம் காவல் நிலையத்தில் சரண் அடைந்தார். அவரை சென்னை அழைத்து வருவதற்காக தமிழக போலீசார் புதுச்சேரி விரைந்திருக்கின்றனர்.

Stay Connected

16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe

Must Read

“வெற்றிவேல்., வீரவேல்”- மோடி., “ஜல்லிக்கட்டு கதாநாயகன் மோடி”- ஓபிஎஸ்!

தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகிற 6 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான பிரச்சாரத்தில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். தாராபுரம் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் எல்.முருகன் மற்றும் கூட்டணி...

நதியில் பதுக்கிய ஆதாரங்கள் மீட்பு: முகேஷ் அம்பானி மிரட்டல் வழக்கில் அடுத்தடுத்து திருப்பங்கள்!

முகேஷ் அம்பானி வீடு அருகே வெடி பொருட்களுடன் கார் நிறுத்தப்பட்ட வழக்கில், அடுத்தடுத்து பல திருப்பங்கள் நிகழ்ந்து வருகின்றன. மும்பையில் உள்ள பிரபல தொழிலதிபர் மற்றும் ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி வீட்டின்...

சூடுபிடிக்கும் வேட்பு மனு தாக்கல்: வாக்குப்பதிவு நாளன்று விடுமுறையா?

தமிழக சட்டப் பேரவைக்கு வரும் ஏப்ரல் 6ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து, கடந்த 12ம் தேதி முதல் வேட்புமனு தாக்கல் நடைபெற்று வருகிறது. முதல் நாளில் தேர்தல் மன்னன் பத்மநாபன், துணை...

வெற்றி நடை போடுமா தமிழகம்? – அதிமுக கூட்டணியின் பலம் என்ன? பலவீனம் என்ன?

வெற்றி நடை போடுமா தமிழகம்? – அதிமுக கூட்டணியின் பலம் என்ன? பலவீனம் என்ன? தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் 6ம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தலில் ஹாட்ரிக் வெற்றி பெற வேண்டும் என...

Related News

மண்டைக்குள் ஓடிக் கொண்டே இருக்கும் “எஞ்சாய் எஞ்சாமி” பாடல்: சிந்தைனை, பிரமிப்பு, புல்லரிப்பு!

கடந்த காலத்துக்கு சென்று ஒரு அறிவை திருட வேண்டும் என்றால் அதில் இதுவும் ஒரு விஷயமாக இருக்கும். அந்த அளவிற்கு இந்த பாடலில் வீடியோவும், இசையும், வரியும் அமைந்துள்ளது என்றே கூறலாம். சமீப...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here