Home செய்திகள் தமிழகம் 100 நாட்களுக்குள் இது நடக்கும்: முதலமைச்சராக பதவியேற்ற மு.க.ஸ்டாலின் அதிரடி- அமைச்சர்கள் பட்டியல்!

100 நாட்களுக்குள் இது நடக்கும்: முதலமைச்சராக பதவியேற்ற மு.க.ஸ்டாலின் அதிரடி- அமைச்சர்கள் பட்டியல்!

தமிழக முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றார். சென்னை கிண்டியில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஸ்டாலினுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடன் 33 அமைச்சர்கள் பதவி ஏற்றுக் கொண்டனர். கொரோனா பெருந்தொற்றுக்கு மத்தியில் நடக்கும் விழா என்பதால் நீதிபதிகள், எம்எல்ஏக்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட 500-க்கும் குறைவானவர்களே பங்கேற்றனர். இந்த விழாவில் அதிமுக சார்பில் ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொண்டார்.

‘முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான்’ என்று கூறி தமிழக முதலமைச்சராக பதவியேற்றார் மு.க.ஸ்டாலின். தமிழகத்தின் 23-வது முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவியேற்றார்.

list of ministers of tamilnadu 2021 in tamil
list of ministers of tamilnadu 2021 in tamil

மு.க.ஸ்டாலின் முதலமைச்சராக பதவியேற்றவுடன் அவர் முதலாவதாக எதற்கு கையெழுத்து போடுவார் என்ற எதிர்பார்ப்பு அனைவரிடமும் இருந்தது. இந்த நிலையில் முதலமைச்சராக பதவி ஏற்றதும் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையில் 5 கோப்புகளில் மு.க.ஸ்டாலின் கையெழுத்திட்டார்.

1. கொரோனா நிவாரண நிதியாக குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் ரூ.4000 வழங்கப்படும். இதன் முதல் தவணையாக இம்மாதமே ரூ.2000 வழங்கப்படும்.

2. மே 16முதல் ஆவின் பால் லிட்டருக்கு ரூ.3 குறைக்கப்படும்.

3. அனைத்து மகளிருக்கும் நகரப்பேருந்துகளில் கட்டணமில்லா பயணம் நாளைமுதல் அமலுக்கு வருகிறது.

4. தனியார் மருத்துவமனையில் மேற்கொள்ளப்படும் கொரோனா தொற்று சிகிச்சைக்கான கட்டணத்தை அரசு காப்பீடு திட்டம் மூலம் ஏற்கப்படும்.

5. 100 நாட்களில் நிறைவேற்றுவதாக கூறிய வாக்குறுதிகளை நிறைவேற்ற, “உங்கள் தொகுதியில் முதலமைச்சர்” எனும் திட்டம் செயல்படுத்தப்படும்.

அமைச்சர்கள் பட்டியல்:

ஸ்டாலின் – முதலமைச்சர்

துரைமுருகன் – நீர்வளத்துறை அமைச்சர்

கே.என்.நேரு – உள்ளாட்சி நிர்வாகம்

ஐ.பெரியசாமி – கூட்டுறவுத்துறை அமைச்சர்

பொன்முடி – உயர்கல்வித்துறை அமைச்சர்

எ.வ.வேலு – பொதுப்பணித்துறை அமைச்சர்

எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் – வேளாண்மைத்துறை அமைச்சர்

கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் – வருவாய்த்துறை அமைச்சர்

தங்கம் தென்னரசு – தொழில் துறை, தமிழ் ஆட்சி மொழி, தொல்லியல் துறை அமைச்சர்

எஸ்.ரகுபதி – சட்டத்துறை அமைச்சர்

முத்துசாமி – வீட்டுவசதித் துறை அமைச்சர்

பெரியகருப்பன் – ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர்

தா.மோ.அன்பரசன் – ஊரக தொழிற்துறை அமைச்சர்

மு.பெ.சாமிநாதன் – செய்தித்துறை அமைச்சர்

கீதா ஜீவன் – சமூக நலத்துறை அமைச்சர்

அனிதா ராதாகிருஷ்ணன் – மீன்வளத்துறை அமைச்சர்

ராஜகண்ணப்பன் – போக்குவரத்துத் துறை அமைச்சர்

கா.ராமசந்திரன் – வனத்துறை அமைச்சர்

சக்கரபாணி – உணவுத்துறை அமைச்சர்

செந்தில்பாலாஜி – மின்சாரம், மதுவிலக்கு ஆயத்தீர்வை அமைச்சர்

ஆர்.காந்தி – கைத்தறித் துறை அமைச்சர்

மா.சுப்பிரமணியம் – சுகாதாரத்துறை அமைச்சர்

பி.மூர்த்தி – வணிகவரித்துறை அமைச்சர்

எஸ்.எஸ்.சிவசங்கர் – பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர்

சேகர்பாபு – அறநிலையத்துறை அமைச்சர்

பழனிவேல் தியாகராஜன் – நிதித்துறை மற்றும் மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர்

ஆவடி நாசர் -பால்வளத்துறை அமைச்சர்

மஸ்தான் – சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர்

அன்பில் மகேஷ் பொய்யாமொழி – பள்ளிக் கல்வித்துறை அமைச்சர்

மெய்யநாதன் – சுற்றுச்சூழல் துறை அமைச்சர்

சி.வி.கணேசன் – தொழிலாளர் நலத்துறை அமைச்சர்

மனோ தங்கராஜ் – தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர்

மதிவேந்தன் – சுற்றுலாத்துறை அமைச்சர்

கயல்விழி செல்வராஜ் – ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர்

Stay Connected

16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe

Must Read

“தகவல் போதவில்லை…”: கோவாக்சின் தடுப்பூசிக்கு அமெரிக்கா அனுமதி மறுப்பு!

கோவாக்சின் தடுப்பூசிக்கு அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் அவசர கால பயன்பாட்டு ஒப்புதல் அளிக்க மறுப்பு தெரிவித்துள்ளது. கொரோனா தொற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்ள உலகம் முழுவதும் மக்களுக்கு போர்க்கால அடிப்படையில் தடுப்பூசி செலுத்தப்பட்டு...

ஜகமே தந்திரம் கதை இதுதானா?- மதுரை சுருளி Vs லண்டன் தாதா!

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனிஷ் நடிப்பில் ஜூன் 18 ஆம் தேதி வெளியாகும் படம் ஜகமே தந்திரம். இந்த படம் நேரடியாக நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது. ஜகமே தந்திரம் திரைப்படத்தை 17...

கொரோனாவின் ஆட்டம்: சாய்னாவின் ஒலிம்பிக் கனவு பறிபோனது!

கொரோனா பரவல் காரணமாக இந்திய நட்சத்திர வீராங்கனை சாய்னா நேவாலின் டோக்கியோ ஒலிம்பிக் கனவு முற்றிலும் தகர்ந்துள்ளது. 32வது ஒலிம்பிக் போட்டி ஜூலை 23ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 8ம் தேதி வரை ஜப்பான்...

ஒன்றிய அரசா? மத்திய அரசா?: அண்ணா, கருணாநிதியால் முடியாததை செய்து காட்டுவாரா ஸ்டாலின்?

மத்திய அரசை ஒன்றிய அரசு என்று திமுகவினர் குறிப்பிடுவது விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு மு.க.ஸ்டாலின் பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். திராவிடம் மற்றும் சமூக நீதி கொள்கைகளின் அடித்தளத்துடன்,...

Related News

வரிசைக் கட்டும் ஓடிடி வெளியீடு: முக்கிய நடிகர்கள் படங்கள் ஓடிடி வெளியீட்டு தேதி இதோ!

வரிசைக் கட்டும் ஓடிடி வெளியீடு: முக்கிய நடிகர்கள் படங்கள் ஓடிடி வெளியீட்டு தேதி இதோ! கொரோனா பரவல் காரணமாக திரையரங்குகள் மூடும் நிலை ஏற்பட்டுள்ளது. திரையரங்குகள் திறக்கப்பட்டாலும் மக்கள் திரையரங்கு சென்று படம் பார்ப்பதில்...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here