விரைவில் புதிய கட்சி., சட்டப்பேரவை தேர்தலில் எனது பங்களிப்பு இருக்கும்: மு.க. அழகிரி பரபரப்பு பேட்டி
சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் அரசியல் கட்சிகள் படையெடுப்பு அதிகரித்து வருகிறது. ஆட்சியை தக்கவைக்கும் நோக்கில் அதிமுகவும் கைப்பற்றும் நோக்கில் திமுகவும் முனைப்புடன் செயல்பட்டு வருகின்றன. கூட்டணி பேச்சுவார்த்தை தீவிரமாக நடைபெற்று வருகிறது.
மக்கள் நீதி மய்யம் கட்சியை தொடங்கிய கமல்ஹாசன் பிற கட்சிகளுடன் கூட்டணி வைப்பாரா என்பது கேள்விக்குறியாக உள்ளது. அதேபோல் ரஜினிகாந்த் கட்சி தொடங்கி 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுவோம் என உறுதிப்பட தெரிவித்துள்ளார். அதற்கான பேச்சுவார்த்தையும் தீவிரமடைந்து வருகிறது.
இந்த நிலையில் விரைவில் நிர்வாகிகளை சந்தித்து புதிய கட்சி தொடங்குவது குறித்து ஆலோசனை நடத்துவேன் என முக. அழகிரி தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வரும் 2021 சட்டமன்ற தேர்தலில் எனது பங்களிப்பு இருக்கும் எனவும், புதிய கட்சி தொடங்குவது குறித்த கேள்விக்கு விரைவில் நிர்வாகிகளை ஆலோசித்து எனது முடிவை அறிவிப்பேன் எனவும் முக அழகிரி உறுதிப்பட தெரிவித்துள்ளார். விரைவில் எனது முடிவு தெரியும் எனவும், தயாநிதிக்கு திமுகவில் முக்கியத்துவம் அளிக்கப்படவுள்ளதாக வரும் தகவல் குறித்த கேள்விக்கு அமித்ஷாவை நான் சந்திக்க போவதாக கூறிய வதந்தி போல தான் அந்த செய்தியும் என பதிலளித்தார்.