Home செய்திகள் தமிழகம் தமிழகத்திலும் ஓவைசி: திமுகவிற்கு ஆபத்தா?

தமிழகத்திலும் ஓவைசி: திமுகவிற்கு ஆபத்தா?

பீகார் சட்டப்பேரவை தேர்தல் வெற்றியை தொடர்ந்து, தமிழகத்திலும் தடம் பதிக்க ஓவைசியின் ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சி திட்டமிட்டுள்ளது.

தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தை தலைமையிடமாக கொண்டு செயல்படும் மாநில கட்சிதான் ஏ.ஐ.எம்.ஐ.எம். இதன் தலைவரான ஓவைசி, ஐதராபாத் தொகுதி மக்களவை உறுப்பினாரக உள்ளார்.

மக்களவையில் 2 உறுப்பினர்களை கொண்ட இந்த கட்சி, தற்போது, தெலங்கானா மாநிலத்தை தாண்டி, நாடு முழுவதும் பிரபலமடைந்து வருகிறது. மேலும், கட்சியை தேசிய கட்சியாக மாற்ற ஓவைசி தீவிரம் காட்டி வருகிறார்.

Owaisi's AIMIM has decided to make its mark in Tamil Nadu

கடந்த ஆண்டு நடைபெற்ற மகாராஷ்டிர சட்டப்பேரவை தேர்தலில், ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சி 2 இடங்களில் வென்றது. சமீபத்தில், பீகாரில் நடந்த சட்டப்பேரவை தேர்தலில், போட்டியிட்ட 20 இடங்களில், 5ல் வென்று ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. மேலும், அங்கு தேஜஸ்வி யாதவ் ஆட்சி அமைப்பதை தடுத்தது. இதனால், ஓவைசி தனித்து போட்டியிடுவது, பாஜகவிற்கு சாதகமாக அமைவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.

இந்தநிலையில், பீகார் சட்டப்பேரவை தேர்தல் வெற்றியை தொடர்ந்து, தமிழகத்திலும் தடம் பதிக்க ஓவைசியின் ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சி திட்டமிட்டுள்ளது. இது தொடர்பாக தகவல் தெரிவித்த அக்கட்சியின் மாநில தலைவர் வக்கீல் அகமது, “தமிழக சட்டப்பேரவை தேர்தலில் ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சி 25 – 30 தொகுதிகளில் போட்டியிடும். கூட்டணி அமைப்பது குறித்து திமுக பொதுச்செயலாளர் துரைமுருகனுடன் பேசி வருகிறேன். ஆனால், அவர் தரப்பில் இருந்து பதில் வரவில்லை.

இஸ்லாமிய இளைஞர்களின் செல்வாக்கு எங்களுக்கு உள்ளது. கிருஷ்ணகிரி, வேலூர், திருச்சி, மதுரை, புக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் உள்ள தொகுதிகளில் போட்டியிட திட்டமிட்டுள்ளோம். தேர்தலில் தோற்றால், திமுக எங்கள் மேல் பழி போடக்கூடாது. பாஜக எங்கள் எதிரி. அதேசமயம், காங்கிரஸ் எங்கள் முதுகில் குத்துகின்றனர்.” என்று கூறினார்.

திமுக கூட்டணியில் ஏற்கனவே நிறைய கட்சிகள் இருப்பதால், புது கட்சிகளை இணைக்க வாய்ப்பில்லை என்றே கூறப்படுகிறது. மேலும், வட மாநிலங்களில் இஸ்லாமியர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள், தமிழகத்தில் இல்லை என்பதால், அங்கு கிடைக்கும் ஆதரவு ஓவைசிக்கு இங்கு கிடைக்குமா என்பது சந்தேகமே. தமிழகத்தை பொறுத்தவரை ஏற்கனவே இங்கு இருக்கும் இஸ்லாமிய கட்சிகள் இடம்பெறும் கூட்டணிக்கே பெரும்பாலான இஸ்லாமியர்கள் வாக்களிப்பது, குறிப்பிடத்தக்கது.

Stay Connected

16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe

Must Read

“வெற்றிவேல்., வீரவேல்”- மோடி., “ஜல்லிக்கட்டு கதாநாயகன் மோடி”- ஓபிஎஸ்!

தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகிற 6 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான பிரச்சாரத்தில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். தாராபுரம் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் எல்.முருகன் மற்றும் கூட்டணி...

நதியில் பதுக்கிய ஆதாரங்கள் மீட்பு: முகேஷ் அம்பானி மிரட்டல் வழக்கில் அடுத்தடுத்து திருப்பங்கள்!

முகேஷ் அம்பானி வீடு அருகே வெடி பொருட்களுடன் கார் நிறுத்தப்பட்ட வழக்கில், அடுத்தடுத்து பல திருப்பங்கள் நிகழ்ந்து வருகின்றன. மும்பையில் உள்ள பிரபல தொழிலதிபர் மற்றும் ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி வீட்டின்...

சூடுபிடிக்கும் வேட்பு மனு தாக்கல்: வாக்குப்பதிவு நாளன்று விடுமுறையா?

தமிழக சட்டப் பேரவைக்கு வரும் ஏப்ரல் 6ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து, கடந்த 12ம் தேதி முதல் வேட்புமனு தாக்கல் நடைபெற்று வருகிறது. முதல் நாளில் தேர்தல் மன்னன் பத்மநாபன், துணை...

வெற்றி நடை போடுமா தமிழகம்? – அதிமுக கூட்டணியின் பலம் என்ன? பலவீனம் என்ன?

வெற்றி நடை போடுமா தமிழகம்? – அதிமுக கூட்டணியின் பலம் என்ன? பலவீனம் என்ன? தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் 6ம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தலில் ஹாட்ரிக் வெற்றி பெற வேண்டும் என...

Related News

மண்டைக்குள் ஓடிக் கொண்டே இருக்கும் “எஞ்சாய் எஞ்சாமி” பாடல்: சிந்தைனை, பிரமிப்பு, புல்லரிப்பு!

கடந்த காலத்துக்கு சென்று ஒரு அறிவை திருட வேண்டும் என்றால் அதில் இதுவும் ஒரு விஷயமாக இருக்கும். அந்த அளவிற்கு இந்த பாடலில் வீடியோவும், இசையும், வரியும் அமைந்துள்ளது என்றே கூறலாம். சமீப...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here