Home செய்திகள் தமிழகம் பரணி பாயும் தெற்கு சீமை திருநெல்வேலியின் சிறப்பு...!

பரணி பாயும் தெற்கு சீமை திருநெல்வேலியின் சிறப்பு…!

திருவிளையாடற் புராணத்தின் படி வேதசர்மா என்ற ஒரு அந்தணர் தினமும் நெல்லை இடித்து சிவனுக்கு அமுது உண்டாக்கி படைத்து வழிபடுவதை வழக்கமாக கொண்டு இருந்தார். அந்தணரின் பக்தியை சோதிக்க விரும்பிய இறைவன் மழையை பொழிவித்தார். மழையினால் தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு எடுத்து ஓட அந்தணர் அக்கரையில் சிக்கிக் கொண்டார்.

அந்தணரின் எண்ணம் முழுதும் காய்ந்து கொண்டு இருந்த நெல்லின் மேலேயே இருந்தது. இறைவனுக்கு அமுது படைக்க முடியாததை எண்ணி கலக்கமுற்றார். அந்தணரின் பக்திக்கு மனம் இறங்கிய இறைவன் நெல்லுக்கு வேலி அமைத்து மழையில் நனையாமல் காத்து நின்றார். சிவனே நெல்லுக்கு வேலி அமைத்து காத்து நின்றதால் இத்தலம் திருநெல்வேலி என்று அழைக்கப்பெற்றது.

திருநெல்வேலி உருவான வரலாறு

1790 – ல் செப்டம்பர் ஒன்றாம் தேதி கிழக்கு இந்திய கம்பெனியால் திருநெல்வேலி மாவட்டம் உருவாக்கப்பட்டு பின் பிரிட்டிஷ் மகாராணி விக்டோரியாவின் நேரடி கட்டுப்பாட்டிற்குள் வந்தது . ஆற்காடு நவாப்பிடமிருந்து 1801 – ல் பிரிட்டிஷார் இந்த நகரை கையகப்படுத்தி ” Tinnevelly ‘ மாவட்டம் என பெயரிட்டனர் . முதலில் திருநெல்வேலி நகதை அடுத்து அமைந்துள்ள பாளைங்கோட்டையை தலைமையிடமாக கொண்டுதான் இந்த மாவட்டம் ஆரம்பிக்கப்பட்டது . பாளையக்காரர்களுக்கு எதிரான நடவடிக்கைகள் நடைபெற்ற போது பாளையங்கோட்டையைத்தான் பிரிட்டிஷார் தங்களது இராணுவ தலைமையிடமாக வைத்திருந்து செயல்பட்டனர் . பின் காலங்களில் திருநெல்வேலி நகரை தலைமையிடமாக கொண்டு செயல் பட்டதாலும் , திருநெல்வேலி சீமை என நாயக்கர் நவாப் காலங்களில் அழைக்கப்பட்டதாலும் இது தொடர்ந்து ” திருநெல்வேலி மாவட்டம் ” என்ற பெயரில் அழைக்கப்படலாயிற்று . 20-10-1986 முதல் திருநெல்வேலி மாவட்டம் பிரிக்கப்பட்டு தூத்துக்குடி என்ற புதிய மாவட்டம் உதயமானது . இம்மாவட்டதிலுள்ள திருநெல்வேலி , பாளையங்கோட்டை என்ற இரு நகரங்களும் இரட்டை நகரங்கள் என அழைக்கப்பட்டு எல்லாவிதத்திலும் வேகமாக வளர்ந்தன.

அல்வா : திருநெல்வேலி அல்வா என்றால் தெரியாதவர்களே இருக்கமுடியாது. மதுரை மல்லிகை போல திருநெல்வேலி அல்வா மிகவும் புகழ் பெற்றதாகும். கோதுமை, சர்க்கரை, நெய் சேர்த்து செய்யப்படும் இந்த இனிப்பு தாமிரபரணி நீரினால் நல்ல சுவையளிக்கிறது. இங்குள்ள இருட்டு கடை அல்வா மிகவும் பிரசித்தி பெற்றது. மேலும் லட்சுமி விலாஸ், சாந்தி ஸ்வீட்ஸ் ஆகியவை அல்வாவிற்கு பெயர் பெற்றவையாகும். நெல்லையப்பர் கோயிலை சுற்றிலும் அல்வா கடைகள் நிறைந்து உள்ளன.

உணவு: நெல்லையில், சொதி, கூட்டாஞ்சோறு, உளுந்து சோறு, எள்ளு துவையல் போன்றவை இங்குள்ள மக்களின் முக்கிய உணவாகும். சொதி என்பது தேங்காய் பால், காய்கறிகளை சேர்த்து செய்வதாகும்.

தொழில் வளர்ச்சி: நெல்லையில் சிமென்ட் தொழிற்சாலை, பஞ்சாலை, நூற்பாலை போன்ற தொழிற்சாலைகள் உள்ளன. மேலும் பீடி கம்பெனிகள், ஸ்டீல் தயாரிக்கும் நிறுவனங்களும் உள்ளன. சிறிய அளவிலான தொழிற்சாலைகள் இங்கு நிறைந்து காணப்படுகிறது.

Stay Connected

16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe

Must Read

“தகவல் போதவில்லை…”: கோவாக்சின் தடுப்பூசிக்கு அமெரிக்கா அனுமதி மறுப்பு!

கோவாக்சின் தடுப்பூசிக்கு அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் அவசர கால பயன்பாட்டு ஒப்புதல் அளிக்க மறுப்பு தெரிவித்துள்ளது. கொரோனா தொற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்ள உலகம் முழுவதும் மக்களுக்கு போர்க்கால அடிப்படையில் தடுப்பூசி செலுத்தப்பட்டு...

ஜகமே தந்திரம் கதை இதுதானா?- மதுரை சுருளி Vs லண்டன் தாதா!

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனிஷ் நடிப்பில் ஜூன் 18 ஆம் தேதி வெளியாகும் படம் ஜகமே தந்திரம். இந்த படம் நேரடியாக நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது. ஜகமே தந்திரம் திரைப்படத்தை 17...

கொரோனாவின் ஆட்டம்: சாய்னாவின் ஒலிம்பிக் கனவு பறிபோனது!

கொரோனா பரவல் காரணமாக இந்திய நட்சத்திர வீராங்கனை சாய்னா நேவாலின் டோக்கியோ ஒலிம்பிக் கனவு முற்றிலும் தகர்ந்துள்ளது. 32வது ஒலிம்பிக் போட்டி ஜூலை 23ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 8ம் தேதி வரை ஜப்பான்...

ஒன்றிய அரசா? மத்திய அரசா?: அண்ணா, கருணாநிதியால் முடியாததை செய்து காட்டுவாரா ஸ்டாலின்?

மத்திய அரசை ஒன்றிய அரசு என்று திமுகவினர் குறிப்பிடுவது விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு மு.க.ஸ்டாலின் பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். திராவிடம் மற்றும் சமூக நீதி கொள்கைகளின் அடித்தளத்துடன்,...

Related News

வரிசைக் கட்டும் ஓடிடி வெளியீடு: முக்கிய நடிகர்கள் படங்கள் ஓடிடி வெளியீட்டு தேதி இதோ!

வரிசைக் கட்டும் ஓடிடி வெளியீடு: முக்கிய நடிகர்கள் படங்கள் ஓடிடி வெளியீட்டு தேதி இதோ! கொரோனா பரவல் காரணமாக திரையரங்குகள் மூடும் நிலை ஏற்பட்டுள்ளது. திரையரங்குகள் திறக்கப்பட்டாலும் மக்கள் திரையரங்கு சென்று படம் பார்ப்பதில்...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here