Home செய்திகள் தமிழகம் கொரோனா விவகாரத்தில் மீண்டும் ஒரு 'யூ டர்ன்': அமைச்சருக்கு தொற்று உறுதி!

கொரோனா விவகாரத்தில் மீண்டும் ஒரு ‘யூ டர்ன்’: அமைச்சருக்கு தொற்று உறுதி!

கொரோனா நோய் தொற்றால் தமிழகத்தில் இதுவரை 90 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மஹாராஷ்டிராத்திற்கு அடுத்த அதிக பாதிப்புகள் கொண்ட மாநிலமாக தமிழகம் திகழ்கிறது. ஆரம்ப நிலையில் இறப்பு விகிதம் குறைவாகக் காணப்பட்டாலும் தற்போது ஒரு நாளைக்கு 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து வருகின்றனர். 

இதற்கிடையே மற்ற மாவட்டங்களை ஒப்பிடுகையில் சென்னையில் தான் அதிக பாதிப்புகள் ஏற்பட்டு வருகிறது. இதனை கட்டுப்படுத்த மாநகராட்சி சார்பில் மண்டல வாரியாக  5 அமைச்சர்களை தமிழக அரசு நியமனம் செய்தது. அதன் அடிப்படையில் அடையாறு, சோழிங்கநல்லூர் மற்றும் பெருங்குடி ஆகிய 3 மண்டலங்களை உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகள் பார்வையிட்டு வந்தார்.

இந்நிலையில் கே.பி. அன்பழகனுக்கு நேற்று கொரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் மணப்பாக்கத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல்நிலை தற்போது சீராக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இவர் கடந்த சில நாட்களாக கொரோனா தடுப்புப் பணிகளில் தீவிரமாகச் செயல்பட்டு வந்தார்.

கடந்த வாரம் கே.பி.அன்பழகனுக்கு கொரோனா இருப்பதாக பல்வேறு தகவல்கள் வெளியாகின. இதனையடுத்து ஜூன் 19 ஆம் தேதி மத்திய மனித உரிமைகள் ஆணை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் , தமிழக அமைச்சர் கே.பி.அன்பழகனுக்கு கொரோனா என்று கேள்விப் பட்டேன். அவர் விரைவில் குணமடைய இறைவனைப் பிரார்த்திப்பதாக தனது டிவிட்டர் வலைத்தளத்தில் பதிவிட்டிருந்தார். இதே போல் எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலினும், உயர் கல்வித்துறை அமைச்சர் திரு அன்பழகன் அவர்கள் கோவிட் 19 நோய் தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதை அறிந்து தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு நலம் விசாரித்தாக தனது வலைத்தள பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

Everyone was so wrapped up in making sure everybody

இந்நிலையில் இதற்கு மறுப்பு தெரிவித்த அமைச்சர் கே.பி.அன்பழகன் தனக்கு கொரோனா இல்லை எனக் கூறினார். ஆனால் தற்போது அவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அமைச்சரின் விவகாரத்திலே இவ்வளவு முரண்பாடுகள் இருக்குமேயானால் பொதுமக்களின் நிலை என்ன என எதிர்க்கட்சித் தலைவர்களும் சமூக ஆர்வலர்களும் விமர்சித்து வருகின்றனர்.

Stay Connected

16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe

Must Read

“தகவல் போதவில்லை…”: கோவாக்சின் தடுப்பூசிக்கு அமெரிக்கா அனுமதி மறுப்பு!

கோவாக்சின் தடுப்பூசிக்கு அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் அவசர கால பயன்பாட்டு ஒப்புதல் அளிக்க மறுப்பு தெரிவித்துள்ளது. கொரோனா தொற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்ள உலகம் முழுவதும் மக்களுக்கு போர்க்கால அடிப்படையில் தடுப்பூசி செலுத்தப்பட்டு...

ஜகமே தந்திரம் கதை இதுதானா?- மதுரை சுருளி Vs லண்டன் தாதா!

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனிஷ் நடிப்பில் ஜூன் 18 ஆம் தேதி வெளியாகும் படம் ஜகமே தந்திரம். இந்த படம் நேரடியாக நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது. ஜகமே தந்திரம் திரைப்படத்தை 17...

கொரோனாவின் ஆட்டம்: சாய்னாவின் ஒலிம்பிக் கனவு பறிபோனது!

கொரோனா பரவல் காரணமாக இந்திய நட்சத்திர வீராங்கனை சாய்னா நேவாலின் டோக்கியோ ஒலிம்பிக் கனவு முற்றிலும் தகர்ந்துள்ளது. 32வது ஒலிம்பிக் போட்டி ஜூலை 23ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 8ம் தேதி வரை ஜப்பான்...

ஒன்றிய அரசா? மத்திய அரசா?: அண்ணா, கருணாநிதியால் முடியாததை செய்து காட்டுவாரா ஸ்டாலின்?

மத்திய அரசை ஒன்றிய அரசு என்று திமுகவினர் குறிப்பிடுவது விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு மு.க.ஸ்டாலின் பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். திராவிடம் மற்றும் சமூக நீதி கொள்கைகளின் அடித்தளத்துடன்,...

Related News

வரிசைக் கட்டும் ஓடிடி வெளியீடு: முக்கிய நடிகர்கள் படங்கள் ஓடிடி வெளியீட்டு தேதி இதோ!

வரிசைக் கட்டும் ஓடிடி வெளியீடு: முக்கிய நடிகர்கள் படங்கள் ஓடிடி வெளியீட்டு தேதி இதோ! கொரோனா பரவல் காரணமாக திரையரங்குகள் மூடும் நிலை ஏற்பட்டுள்ளது. திரையரங்குகள் திறக்கப்பட்டாலும் மக்கள் திரையரங்கு சென்று படம் பார்ப்பதில்...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here