தமிழ்நாடு ஊரக புத்தாக்க திட்டத்தின் மூலம் கொரோனா காலத்தில் ஏற்பட்ட முழு ஊரடங்கால், ஊராட்சி அளவிலான கூட்டமைப்பில் உள்ள சுய உதவிக்குழு உறுப்பினர்கள் மற்றும் உறுப்பினர்களின் குடும்பங்களை சேர்ந்த புலம் பெயர்ந்து மீண்டும் சொந்த ஊர் திரும்பி வந்த இளைஞர்களுக்கு தொழில் தொடங்குவதற்காக கிராம வறுமை ஒழிப்பு சங்கங்கள் மூலம் தலா ரூ.1 லட்சம் வரை நீண்ட கால கடனாக தொழில் திட்டத்தின் அடிப்படையில் வழங்கப்படுகிறது.
யார் எல்லாம் இந்த திட்டத்தின் கீழ் பயன் பெறலாம்:
இந்த நிதியை பெற புலம் பெயர்ந்து சொந்த ஊர் திரும்பிய 18 வயது முதல் 35 வயதுக்குட்பட்ட இளைஞர்கள், 18 முதல் 40 வயது வரை உள்ள பெண்கள் விண்ணப்பிக்கலாம்.
இது குறித்து விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், மாநில சட்டத் துறை அமைச்சர் சி.வி.சண்முகம் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், ஊரக வளர்ச்சித் துறை சாா்பில் ஊரக புத்தாக்கத் திட்டத்தின் கீழ், கிராம வறுமை ஒழிப்பு சங்கத்தின் மூலம் நீண்ட கால கடனுதவியாக கரோனாவால் புலம் பெயர்ந்த இளைஞர்களுக்கு, புதிய தொழில் தொடங்க தலா ரூ.ஒரு லட்சம் வழங்கப்பட்டது.
இதன்படி, விழுப்புரம் மாவட்டத்துக்கு 267 பயனாளிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதில், தற்போது 25 போ் தோ்வு செய்யப்பட்டு, அதில் 15 பேருக்கு புதன்கிழமை கடன் தொகை வழங்கப்பட்டது.