Home செய்திகள் தமிழகம் மு.க.ஸ்டாலின் எனும் நான்: அமோக வெற்றியில் திமுக., 2021 தேர்தலில் வரலாறு படைத்த வேட்பாளர் யார்?

மு.க.ஸ்டாலின் எனும் நான்: அமோக வெற்றியில் திமுக., 2021 தேர்தலில் வரலாறு படைத்த வேட்பாளர் யார்?

நடந்து முடிந்த தமிழக சட்டப்பேரவை தேர்தலில் 234 தொகுதிகளில் திமுக கூட்டணி 159 இடங்களில் வெற்றி பெற்றது. தனிப்பெரும்பான்மையுடன் திமுக தமிழகத்தில் 10 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சி அமைக்கிறது. ஆளும் கட்சியாக இருந்த அதிமுக கூட்டணி 75 தொகுதிகளை மட்டுமே கைப்பற்றியது.

இதையடுத்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழகத்தின் முதலமைச்சராக வரும் 7 ஆம் தேதி பொறுப்பேற்க இருக்கிறார். கொரோனா பரவலில் சிக்கித் தவிக்கும் சூழலுக்கு நடுவில் 10 ஆண்டுக்கு பிறகு முதலமைச்சராக மு.க. ஸ்டாலின் பொறுப்பேற்க உள்ளதால் இந்த சூழலை எப்படி கையாள போகிறார் என்ற எதிர்பார்ப்பு அனைவர் இடமும் இருக்கிறது.

who won in tamil nadu election in tamil

திமுக மட்டும் 125 தொகுதிகளை கைப்பற்றியதால் தனிப்பெரும்பானையோடு ஆட்சி அமைக்க இருக்கிறது. அதுமட்டுமின்றி கூட்டணி கட்சிகளான காங்கிரஸ் 18, மதிமுக 4, விசிக 4, சிபிஎம் 2, சிபிஐ 2 , பிற 4 தொகுதிகளை கைப்பற்றி இருக்கிறது.

அதிமுக தனித்து 65 இடங்களையும் அதன் கூட்டணி கட்சிகளான பாஜக பல்வேறு போராட்டத்துக்கு பிறகு 4 எம்எல்ஏக்களை தமிழக சட்டப்பேரவைக்குள் அனுப்ப இருக்கிறது. அதேபோல் பாமக 5 தொகுதிகளை கைப்பற்றி இருக்கிறது.

இதையடுத்து மு.க. ஸ்டாலின் தலைமையில் திமுக எம்எல்ஏக்கள் கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று நடைபெற்றது. இதில் திமுக எம்எல்ஏக்கள் ஒருமனதாக மு.க ஸ்டாலினை முதலமைச்சராக அறிவித்தனர்.

அதேபோல் திமுக துணை பொது செயலாளர் ஐ.பெரியசாமி., ஆத்தூர் தொகுதியில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட பாமக வேட்பாளர் திலகபாமா-வை விட ஒரு லட்சத்து 37 ஆயிரத்து 577 வாக்குகள் கூடுதலாக வாங்கி பாமக வேட்பாளரை டெபாசிட் இழக்கச் செய்துள்ளார். அதுமட்டுமின்றி தன்னை எதிர்த்து போட்டியிட்ட 19 வேட்பாளர்களையும் டெபாசிட் இழக்கச் செய்துள்ளார். 2021 சட்டப்பேரவை தேர்தலில் தமிழகத்தில் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றவர் என்ற பெருமையை திமுக வேட்பாளர் ஐ.பெரியசாமி பெற்றுள்ளார்.

Stay Connected

16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe

Must Read

“தகவல் போதவில்லை…”: கோவாக்சின் தடுப்பூசிக்கு அமெரிக்கா அனுமதி மறுப்பு!

கோவாக்சின் தடுப்பூசிக்கு அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் அவசர கால பயன்பாட்டு ஒப்புதல் அளிக்க மறுப்பு தெரிவித்துள்ளது. கொரோனா தொற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்ள உலகம் முழுவதும் மக்களுக்கு போர்க்கால அடிப்படையில் தடுப்பூசி செலுத்தப்பட்டு...

ஜகமே தந்திரம் கதை இதுதானா?- மதுரை சுருளி Vs லண்டன் தாதா!

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனிஷ் நடிப்பில் ஜூன் 18 ஆம் தேதி வெளியாகும் படம் ஜகமே தந்திரம். இந்த படம் நேரடியாக நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது. ஜகமே தந்திரம் திரைப்படத்தை 17...

கொரோனாவின் ஆட்டம்: சாய்னாவின் ஒலிம்பிக் கனவு பறிபோனது!

கொரோனா பரவல் காரணமாக இந்திய நட்சத்திர வீராங்கனை சாய்னா நேவாலின் டோக்கியோ ஒலிம்பிக் கனவு முற்றிலும் தகர்ந்துள்ளது. 32வது ஒலிம்பிக் போட்டி ஜூலை 23ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 8ம் தேதி வரை ஜப்பான்...

ஒன்றிய அரசா? மத்திய அரசா?: அண்ணா, கருணாநிதியால் முடியாததை செய்து காட்டுவாரா ஸ்டாலின்?

மத்திய அரசை ஒன்றிய அரசு என்று திமுகவினர் குறிப்பிடுவது விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு மு.க.ஸ்டாலின் பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். திராவிடம் மற்றும் சமூக நீதி கொள்கைகளின் அடித்தளத்துடன்,...

Related News

வரிசைக் கட்டும் ஓடிடி வெளியீடு: முக்கிய நடிகர்கள் படங்கள் ஓடிடி வெளியீட்டு தேதி இதோ!

வரிசைக் கட்டும் ஓடிடி வெளியீடு: முக்கிய நடிகர்கள் படங்கள் ஓடிடி வெளியீட்டு தேதி இதோ! கொரோனா பரவல் காரணமாக திரையரங்குகள் மூடும் நிலை ஏற்பட்டுள்ளது. திரையரங்குகள் திறக்கப்பட்டாலும் மக்கள் திரையரங்கு சென்று படம் பார்ப்பதில்...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here