Home செய்திகள் அரசியல் விடாப்பிடியில் நிற்கும் பொன்முடி: விட்டுக்கொடுக்குமா திமுக?- தொடரும் உட்கட்சி பூசல்!

விடாப்பிடியில் நிற்கும் பொன்முடி: விட்டுக்கொடுக்குமா திமுக?- தொடரும் உட்கட்சி பூசல்!

திமுக பொதுக்குழு கூட்டம் 9 ஆம் தேதி (நாளை) நடைபெற இருக்கிறது. திமுக கட்சியில் காலியாக இருந்து பொதுச் செயலாளர் பதவி, பொருளாளர் பதவிக்கான தேர்வு குறித்து அந்த கூட்டத்தில் விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், கூட்டத்திற்கு முன்னதாகவே பொதுச்செயலாளர் பதவிக்கு துரைமுருகனும், பொருளாளர் பதவிக்கு டிஆர் பாலுவும் போட்டியின்றி தேர்வு செய்தனர்.

திமுக இளைஞரணி தலைவராக ஸ்டாலின் மகன் உதயநிதி ஸ்டாலின் நியமிக்கப்பட்டது, கட்சி விவகாரத்தில் ஐபேக் நிறுவனம் தலையீடு என திமுகவில் உட்கட்சி விவகாரம் பூதாகரமாக வெடிக்கத் தொடங்கியது. அதுமட்டுமின்றி திமுகவில் முக்கிய உறுப்பினர்கள் ஓரங்கட்டப்படுகிறார்கள் போன்ற குற்றச்சாட்டுகள் தொடர்ந்து முன்வைக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் புதிய விவகாரம் ஒன்று திமுகவில் பூதாகரமாக வெடிக்கத் தொடங்கியுள்ளது. திமுகவில் மத்திய மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருப்பவர் முன்னாள் அமைச்சர் பொன்முடி. கட்சிப் பொறுப்பையெல்லாம் தாண்டி விழுப்புரத்தை தனது கோட்டையைாக கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பவர். கண் அசைத்தால் எதுவும் கைவசம் என விழுப்புரத்தின் முடிசூடா நபராக பொன்முடி திகழ்ந்து வருகிறார்.

திமுகவின் மறைந்த தலைவர் கருணாநிதியின் நம்பிக்கை பெற்று அவருக்கு இணக்கமாக இருந்தவர்களின் பொன் முடியும், கே.என் நேருவும் பிரதானமானவர்கள். இருவரும் ஒரே நேரத்தில் அமைச்சராக பதவியேற்று கருணாநிதி அமைச்சரவையில் ஒரே நேரத்தில் பதவி வகித்தவர்கள்.

பொன்முடி, விழுப்புரத்தை தன் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது போல், கே.என் நேரு திருச்சியை தனது கோட்டையாக கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பவர். இருவரும் ஒரே மாதிரியாக பயணிக்கும் நேரத்தில் கே.என் நேருக்கு திமுகவில் உயர் பதவியும், பொன்முடிக்கு சராசரி பதவியும் வழங்கியதாக குற்றம்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

பொன்முடிக்கு திமுகவின் துணைப் பொதுச்செயலாளர் பதவி ஒதுக்கப்பட்டது. ஆனால் இதை நிராகரித்த பொன்முடி, தன்னோடு கட்சியில் வளர்ந்த கே.என் நேருக்கு முதன்மை செயலாளர் பதவி தனக்கு துணை பொதுச்செயலாளர் பதிவியா என கேள்வி எழுப்பியதோடு, முதன்மை செயலாளர் பதவியை இரண்டாக்கி இருவருக்கும் சரிசமமாக பிரித்த வழங்கும்படியான கோரிக்கையை முன்வைத்தார்.

அதோடுவிடாமல் இன்னபிற கோரிக்கைகளையும் பொன்முடி வைத்துள்ளார். அது விழுப்புரம் மாவட்டத்தை இரண்டாக பிரித்து வன்னியர் சமுதாயத்தை சேர்ந்தவர்களுக்கு ஒரு மாவட்ட பொறுப்பாளர் பதவியும், பிற சமுதாயத்தை சேர்ந்தவர்களுக்கு ஒரு மாவட்ட பொறுப்பாளர் பதவியும் வழங்க வேண்டும் என கோரிக்கை முன்வைத்ததோடு மட்டுமில்லாமல் அதில் ஒரு பதவியை தனது மகன் கௌதம சிகாமணிக்கு வழங்க வேண்டும் என கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

இதில் குறிப்பிடத்தகுந்த விஷயம் என்னவென்றால், பொன்முடியில்லாமல் விழுப்புரத்தில் திமுக வெற்றிக் கொடி நாட்டுவது என்பது கேள்விக்குறிதான், எனவே பொன்முடி கோரிக்கையின்படி விழுப்புரம் மாவட்ட பொறுப்பாளர் பதவி இரண்டாக பிரிக்கப்பட்டு ஒன்றை பொன்முடி மகனுக்கு வழங்கப்பட்டால் மற்றொரு பதவியை பொன்முடிக்கு தான் வழங்க வேண்டும்.

பல்வேறு உட்கட்சி பூசலை சமாளித்து வரும் திமுக தலைவர் ஸ்டாலினுக்கு இந்த விவகாரம் கூடுதல் தலைவலியை ஏற்படுத்தியிருக்கிறது என்றே கூறலாம். அதேபோல் பொன்முடி தனது கோரிக்கையில் விடாப்படியாக நின்று வருகிறார். இதற்கெல்லாம் ஒரேவழி திமுகவில் கூடுதல் பொறுப்புகளை உருவாக்குவதே ஆகும். எனவே வருகிற சட்டப்பேரவை தேர்தல் பணி முழுவீச்சில் தொடங்குவதற்குள் திமுகவில் புதுப்புது பெயரில் பதவிகள் உருவாக்குவதற்கு அதிவ வாய்ப்புகள் இருக்கிறது என்றே கூறப்படுகிறது.

Stay Connected

16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe

Must Read

“தகவல் போதவில்லை…”: கோவாக்சின் தடுப்பூசிக்கு அமெரிக்கா அனுமதி மறுப்பு!

கோவாக்சின் தடுப்பூசிக்கு அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் அவசர கால பயன்பாட்டு ஒப்புதல் அளிக்க மறுப்பு தெரிவித்துள்ளது. கொரோனா தொற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்ள உலகம் முழுவதும் மக்களுக்கு போர்க்கால அடிப்படையில் தடுப்பூசி செலுத்தப்பட்டு...

ஜகமே தந்திரம் கதை இதுதானா?- மதுரை சுருளி Vs லண்டன் தாதா!

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனிஷ் நடிப்பில் ஜூன் 18 ஆம் தேதி வெளியாகும் படம் ஜகமே தந்திரம். இந்த படம் நேரடியாக நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது. ஜகமே தந்திரம் திரைப்படத்தை 17...

கொரோனாவின் ஆட்டம்: சாய்னாவின் ஒலிம்பிக் கனவு பறிபோனது!

கொரோனா பரவல் காரணமாக இந்திய நட்சத்திர வீராங்கனை சாய்னா நேவாலின் டோக்கியோ ஒலிம்பிக் கனவு முற்றிலும் தகர்ந்துள்ளது. 32வது ஒலிம்பிக் போட்டி ஜூலை 23ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 8ம் தேதி வரை ஜப்பான்...

ஒன்றிய அரசா? மத்திய அரசா?: அண்ணா, கருணாநிதியால் முடியாததை செய்து காட்டுவாரா ஸ்டாலின்?

மத்திய அரசை ஒன்றிய அரசு என்று திமுகவினர் குறிப்பிடுவது விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு மு.க.ஸ்டாலின் பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். திராவிடம் மற்றும் சமூக நீதி கொள்கைகளின் அடித்தளத்துடன்,...

Related News

வரிசைக் கட்டும் ஓடிடி வெளியீடு: முக்கிய நடிகர்கள் படங்கள் ஓடிடி வெளியீட்டு தேதி இதோ!

வரிசைக் கட்டும் ஓடிடி வெளியீடு: முக்கிய நடிகர்கள் படங்கள் ஓடிடி வெளியீட்டு தேதி இதோ! கொரோனா பரவல் காரணமாக திரையரங்குகள் மூடும் நிலை ஏற்பட்டுள்ளது. திரையரங்குகள் திறக்கப்பட்டாலும் மக்கள் திரையரங்கு சென்று படம் பார்ப்பதில்...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here