Home செய்திகள் உலகம் உலகின் முதல் கொரோனா தடுப்பூசி ரெடி! மார்தட்டிக் கொள்ளும் ரஷ்யா: வெளியான திடுக்கிடும் உண்மைகள்!

உலகின் முதல் கொரோனா தடுப்பூசி ரெடி! மார்தட்டிக் கொள்ளும் ரஷ்யா: வெளியான திடுக்கிடும் உண்மைகள்!

கொரோனாவுக்கு முதலில் மருந்து மற்றும் தடுப்பூசி கண்டுபிடிக்க உலக நாடுகள் போராடி வருகின்றன. உலக சுகாதார நிறுவனத்தின் அறிக்கையின் படி, உலகளவில் 23 தடுப்பூசிகள் மனித சோதனை கட்டங்களில் இருக்கின்றன. இந்தநிலையில், ரஷ்ய தடுப்பூசி மனித சோதனையை வெற்றிகரமாக முடித்துவிட்டதாக, ரஷ்ய அரசின் ஸ்பூட்னிக் செய்தி நிறுவனம் கடந்த 12ம் தேதி ஞாயிற்றுக்கிழமை செய்தி வெளியிட்டது. இந்த தகவலை உறுதி செய்த செக்கினோ ஃபர்ஸ்ட் மாஸ்கோ ஸ்டேட் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் இயக்குநர் வடிம் டராசவு, கமாலய் தேசிய தொற்றுநோய்கள் மற்றும் நுண்ணுயிரியல் ஆராய்ச்சி மையம் இந்த தடுப்பூசியை கண்டுபிடித்தாக தெரிவித்தார். ஜூன் 18ம் தேதி முதல் தன்னார்வலர்கள் மீது சோதனை நடைபெற்றதாகவும், சோதனையில் பங்கேற்ற முதற்கட்ட குழு ஜூலை 15ம் தேதியும், இரண்டாம் கட்ட தன்னார்வலர்கள்குழு ஜூலை 20ம் தேதியும் டிஸ்சார்ஜ் செய்யப்படுவர் எனவும் கூறினார்.

இதற்கு முன்னதாக, கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்ட தன்னார்வலர்களின் உடல்களில் நோய் எதிர்ப்பு சக்தி உருவாகி இருக்கிறது என, ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் செய்தி வெளியிட்டது. உலகின் முதல் தடுப்பூசி கண்டுபிடித்துவிட்டோம் என ரஷ்யா மார்தட்டிக் கொண்ட நிலையில், உலக சுகாதார நிறுவனம் நேற்று தடுப்பூசிகள் தொடர்பான அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில், ரஷ்யாவின் கமாலய் தேசிய தொற்றுநோய்கள் மற்றும் நுண்ணுயிரியல் ஆராய்ச்சி மையம் கண்டுபிடித்த தடுப்பூசி முதல் கட்ட மனித சோதனையில் இருப்பது தெரியவந்தது. வெறும் 38 தன்னார்வலர்கள் மீது இந்த தடுப்பூசி ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது அம்பலமானது. இதனால், கமாலய் தடுப்பூசி இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்ட சோதனைகளில் வெற்றி பெற்று, மக்கள் பயன்பாட்டிற்கு வர 12 முதல் 18 மாதங்கள் ஆகலாம் என உலகளவில் ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

மருத்துவ விதிகளில் உள்ள ஓட்டைகள் வழியாக, சோதனை காலத்தை குறைத்து, தடுப்பூசிகள், மருந்து, மாத்திரைகளை விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர மருத்துவ நிறுவனங்கள் போராடி வருகின்றன. பல நாடு அரசாங்கங்களும் இதற்கு உறுதுணையாக நிற்கின்றன. மருந்து மற்றும் மாத்திரைகள் தொற்று ஏற்பட்டவர்களுக்கு வழங்கப்படுபவை. ஆனால், தடுப்பூசியோ ஆரோக்கியமானவர்களுக்கு வழங்கப்படுகிறது. இதில், முறையான விதிமுறைகள் தவிர்க்கப்பட்டால், மனித குலம் கடும் பின்விளைவுகளை சந்திக்க நேரிடும். ஆனால், தடுப்பூசி விற்பனை மற்றும் ஏற்றுமதியில் கிடைக்கும் பண, மற்றும் அரசியல் லாபத்திற்காக உலக அளவில் ஆராய்ச்சி மற்றும் தயாரிப்பு நிறுவனங்கள் சோதனைகளை துரிதப்படுத்த முயற்சிக்கின்றன. “முதல்” என்ற மாயை பட்டத்தை பிடிக்க உலக நாடுகளும் இதற்கு துணை போவது வருத்தமளிக்கும் உண்மையாகும்.

Stay Connected

16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe

Must Read

“வெற்றிவேல்., வீரவேல்”- மோடி., “ஜல்லிக்கட்டு கதாநாயகன் மோடி”- ஓபிஎஸ்!

தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகிற 6 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான பிரச்சாரத்தில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். தாராபுரம் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் எல்.முருகன் மற்றும் கூட்டணி...

நதியில் பதுக்கிய ஆதாரங்கள் மீட்பு: முகேஷ் அம்பானி மிரட்டல் வழக்கில் அடுத்தடுத்து திருப்பங்கள்!

முகேஷ் அம்பானி வீடு அருகே வெடி பொருட்களுடன் கார் நிறுத்தப்பட்ட வழக்கில், அடுத்தடுத்து பல திருப்பங்கள் நிகழ்ந்து வருகின்றன. மும்பையில் உள்ள பிரபல தொழிலதிபர் மற்றும் ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி வீட்டின்...

சூடுபிடிக்கும் வேட்பு மனு தாக்கல்: வாக்குப்பதிவு நாளன்று விடுமுறையா?

தமிழக சட்டப் பேரவைக்கு வரும் ஏப்ரல் 6ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து, கடந்த 12ம் தேதி முதல் வேட்புமனு தாக்கல் நடைபெற்று வருகிறது. முதல் நாளில் தேர்தல் மன்னன் பத்மநாபன், துணை...

வெற்றி நடை போடுமா தமிழகம்? – அதிமுக கூட்டணியின் பலம் என்ன? பலவீனம் என்ன?

வெற்றி நடை போடுமா தமிழகம்? – அதிமுக கூட்டணியின் பலம் என்ன? பலவீனம் என்ன? தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் 6ம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தலில் ஹாட்ரிக் வெற்றி பெற வேண்டும் என...

Related News

மண்டைக்குள் ஓடிக் கொண்டே இருக்கும் “எஞ்சாய் எஞ்சாமி” பாடல்: சிந்தைனை, பிரமிப்பு, புல்லரிப்பு!

கடந்த காலத்துக்கு சென்று ஒரு அறிவை திருட வேண்டும் என்றால் அதில் இதுவும் ஒரு விஷயமாக இருக்கும். அந்த அளவிற்கு இந்த பாடலில் வீடியோவும், இசையும், வரியும் அமைந்துள்ளது என்றே கூறலாம். சமீப...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here