மெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் இல்லாத அளவிற்கு கொரோனா தொற்று பாதித்தோர் எண்ணிக்கை 60 ஆயிரத்தை கடந்துள்ளது. இது வரை அதிகமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 55200 என்ற இருந்த நிலையில் இன்று 60000 கடந்துள்ளது.
குறிப்பாக கலிபோர்னியா டெக்ஸாஸ் போன்ற மாகாணங்களில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவில் பாதிக்கப்பட்டுள்ளனர். உலகளவில் கொரோனா தாக்கம் இருந்தாலும் அமெரிக்கா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையிலும் மரணங்களிலும் தொடர்ந்து
இது வரை அமெரிக்காவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மூன்று மில்லியனை கடந்துள்ளது. அதேபோல் மரணித்தவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 31 ஆயிரத்தை கடந்துள்ளது.
இந்த நிலையில் கொரோனா விவகாரத்தை முன்னிருத்தி உலக சுகாதார அமைப்பில் இருந்து வெளியேறப்போவதாக அமெரிக்கா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் கீழ் இயங்கும் WHO உலக சுகாதார அமைப்பு கொரோனா பரவல் குறித்த எந்த உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்கவில்லை என புகார் அமெரிக்கா சார்பில் முன் வைக்கப்பட்டுள்ளது.
கொரோனா தொடர்பான விவகாரத்தில் சீனாவுக்கு ஆதரவாகவே உலக சுகாதார அமைப்பு செயல்படுகிறது எனவும் கொரோனாவை தடுக்கும் மருந்துகளை கண்டுபிடிக்கும் முயற்சியை விரைவாக உலக சுகாதார அமைப்பு மேற்கொள்ளவில்லை போன்ற அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
இதன் காரணமாக அமெரிக்கா ஐக்கிய நாடுகள் சபையின் கீழ் இயங்கும் உலக சுகாதார அமைப்பில் இருந்து வெளியேறப்போவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.