Home செய்திகள் இந்தியா உத்தரபிரதேசத்தை உலுக்கிய பிரபல ரௌடி விகாஸ் துபே கைது !

உத்தரபிரதேசத்தை உலுக்கிய பிரபல ரௌடி விகாஸ் துபே கைது !

உத்திரபிரதேச மாநிலம் கான்பூர் மாவட்டம் பிக்குரு நகரைச் சேர்ந்தவர் விகாஸ் துபே. இவர் பல்வேறு கொலை வழக்குகளில் தேடப்படும் முக்கிய குற்றவாளி ஆவார். இவரை கடந்த வாரம் சோபேபூர் காவல் நிலைய போலீஸார் பிடிக்கச் சென்ற போது, விகாஸ் துபேயின் கூட்டாளிகள் போலீஸார் மீது துப்பாக்கிச் சுடு நடத்தினர். இதில் டிஎஸ்பி உட்பட 8 போலீஸார் சுட்டு கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

இதன் பின்னர் விகாஸ் துபே தலைமறைவானார். பிக்ரு நகரில் உள்ள அவரது வீட்டை காவல் துறையினர் தரைமட்டமாக்கி, அங்குள்ள துப்பாக்கிகள் மற்றும் வெடிப் பொருட்களை பறிமுதல் செய்தனர். இதன் பின் அப்பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட போலீஸார் மற்றும் சிறப்பு அதிரடிப் படையினர் வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை ஒருவர் பின் ஒருவராக கைது செய்து அதிரடி நடவடிக்கை எடுத்து வந்தனர். இதில் விகாஸ் துபேயின் நெருங்கிய கூட்டாளிகள் அமர் துபே உட்பட 2 பேர் போலீஸ் பிடியில் இருந்து தப்பிக்க முயன்ற போது சுட்டுக் கொல்லப்பட்டனர்.

இந்நிலையில் கடந்த ஒரு வார காலமாக தேடப்பட்டு வந்த விகாஸ் துபே இன்று மத்தியபிரதேச மாநிலம் உஜ்ஜயின் மாவட்டத்தில் கைது செய்யப்பட்டார். இது குறித்து பேசிய அம்மாவட்ட ஆட்சியர் ஆஷிஷ் சிங், “விகாஸ் துபே உஜ்ஜைன் மகாகல் கோயிலுக்குச் சென்று கொண்டிருந்தபோது பாதுகாப்புப் படையினரால் அடையாளம் காணப்பட்டார். இதனையடுத்து போலீஸாருக்கு தகவல் சென்றது. அதன்பின் விகாஸிடம் விசாரித்ததில் அவர் தனது அடையாளத்தை ஒப்புக் கொண்டார். இதனையடுத்து அவரை கைது செய்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்” என்று தெரிவித்தார்.

முன்னதாக அவர் ஹரியானாவில் உள்ள தனியார் ஓட்டலில் தங்குவதற்காக அறை பதிவு செய்திருந்தார். இதனை சிசிடிவி காட்சிகள் மூலம் உறுதிப்படுத்திய போலீஸார் அங்கு செல்வதற்குள் அவர் தப்பிச் சென்று விட்டார். இதனையடுத்து அங்குள்ள அவரது கூட்டாளிகளை மட்டுமே போலீஸார் கைது செய்தனர்.

இதற்கிடையே உத்திரபிரதேச அரசு விகாஸ் துபேக்கு ‘பாதுகாப்பு வழங்கியதாக குற்றம்சாட்டிய எதிர்க்கட்சியினர் வழக்கை சிபிஐ விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இருப்பது குறிப்பிடத்தக்கது.

Stay Connected

16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe

Must Read

“வெற்றிவேல்., வீரவேல்”- மோடி., “ஜல்லிக்கட்டு கதாநாயகன் மோடி”- ஓபிஎஸ்!

தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகிற 6 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான பிரச்சாரத்தில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். தாராபுரம் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் எல்.முருகன் மற்றும் கூட்டணி...

நதியில் பதுக்கிய ஆதாரங்கள் மீட்பு: முகேஷ் அம்பானி மிரட்டல் வழக்கில் அடுத்தடுத்து திருப்பங்கள்!

முகேஷ் அம்பானி வீடு அருகே வெடி பொருட்களுடன் கார் நிறுத்தப்பட்ட வழக்கில், அடுத்தடுத்து பல திருப்பங்கள் நிகழ்ந்து வருகின்றன. மும்பையில் உள்ள பிரபல தொழிலதிபர் மற்றும் ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி வீட்டின்...

சூடுபிடிக்கும் வேட்பு மனு தாக்கல்: வாக்குப்பதிவு நாளன்று விடுமுறையா?

தமிழக சட்டப் பேரவைக்கு வரும் ஏப்ரல் 6ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து, கடந்த 12ம் தேதி முதல் வேட்புமனு தாக்கல் நடைபெற்று வருகிறது. முதல் நாளில் தேர்தல் மன்னன் பத்மநாபன், துணை...

வெற்றி நடை போடுமா தமிழகம்? – அதிமுக கூட்டணியின் பலம் என்ன? பலவீனம் என்ன?

வெற்றி நடை போடுமா தமிழகம்? – அதிமுக கூட்டணியின் பலம் என்ன? பலவீனம் என்ன? தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் 6ம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தலில் ஹாட்ரிக் வெற்றி பெற வேண்டும் என...

Related News

மண்டைக்குள் ஓடிக் கொண்டே இருக்கும் “எஞ்சாய் எஞ்சாமி” பாடல்: சிந்தைனை, பிரமிப்பு, புல்லரிப்பு!

கடந்த காலத்துக்கு சென்று ஒரு அறிவை திருட வேண்டும் என்றால் அதில் இதுவும் ஒரு விஷயமாக இருக்கும். அந்த அளவிற்கு இந்த பாடலில் வீடியோவும், இசையும், வரியும் அமைந்துள்ளது என்றே கூறலாம். சமீப...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here