Home செய்திகள் உலகம் இந்திய கடற்பகுதிக்குள் அமெரிக்க கப்பல்: 1971 போரும், சீனாவிற்கான செய்தியும்!

இந்திய கடற்பகுதிக்குள் அமெரிக்க கப்பல்: 1971 போரும், சீனாவிற்கான செய்தியும்!

இந்திய கடற்பகுதிக்குள் அமெரிக்க கப்பல்: 1971 போரும், சீனாவிற்கான செய்தியும்!

அரபிக் கடலில் பிரத்யேக இந்திய பொருளாதார மண்டல பகுதிக்குள், அமெரிக்க போர்க்கப்பல் அனுமதியின்றி நுழைந்தது, சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

1971 இந்தியா-பாகிஸ்தான் போரை யாராலும் அவ்வளவு எளிதல் மறந்துவிட முடியாது. ஜம்மு-காஷ்மீரை மையப்படுத்தாமல் இரு நாடுகளுக்கு இடையே நடந்த முதல் போர் இது. மேலும், பாகிஸ்தானை இந்தியா முதன்முறையாக வீழ்த்தியதும் இந்த போரில்தான்.

போர் நடந்து முடிந்து அரை நூற்றாண்டு காலம் கடந்துவிட்ட நிலையில், போரின் நினைவுகளை தட்டி எழுப்பும் வகையில், சமீபத்தில் ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது. அரபிக் கடலில், லட்சத்தீவுக்கு அருகே பிரத்யேக இந்திய பொருளாதார மண்டல பகுதிக்குள், அமெரிக்க போர்க்கப்பல் ஒன்று அனுமதியின்றி நுழைந்திருக்கிறது. இதற்கு மத்திய அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

1971 போரும், அமெரிக்க போர்க்கப்பலும்

1971 போர் நடந்த காலத்தில்தான் அமெரிக்கா மற்றும் சோவியத் ஒன்றியம் இடையிலான பனிப்போரும் உச்சத்தில் இருந்தது. அந்த காலக்கட்டத்தில் பாகிஸ்தானுடன் அமெரிக்கா நேரடியான நட்புறவு கொண்டிருந்தது. இதனால், போரின் உச்சத்தில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக வங்காள விரிகுடா கடலில் அமெரிக்க போர்க்கப்பல்கள் நுழைந்தன.

american army base in indian ocean
american army base in indian ocean

ஆனால், போர் மேகங்கள் சூழ தொடங்கிய காலத்திலேயே, அமெரிக்கா மற்றும் பாகிஸ்தான் இடையிலான உறவை நன்கு உணர்ந்த அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி, சாமர்த்தியமான முடிவு ஒன்றை எடுத்தார். ஜவஹர்லால் நேரு காலத்தில் கடைபிடிக்கப்பட்ட அணிசேரா இயக்க கொள்கையில் இருந்து விலகி, சோவியத் ஒன்றியத்துடன் நட்பு மற்றும் ஒத்துழைப்புக்கான ஒப்பந்தத்தை போட்டார்.

இதன் அடிப்படையில், இந்தியாவிற்கு ஆதரவாக, சோவியத் ஒன்றியத்தின் போர்க்கப்பல்கள் அமெரிக்க கப்பல்களை பின் தொடர்ந்தன. இதனால், இந்த போரில் அமெரிக்காவால், பாகிஸ்தானுக்கு எந்தவித உதவியையும் செய்ய முடியாமல் போனது. இந்தியாவும் போரில் வெற்றி பெற்று, வங்கதேசத்திற்கு சுதந்திரம் பெற்று கொடுத்தது.

அப்போதும், இப்போதும் –

காலங்கள் கடக்க கடக்க உலகரங்கில் காட்சிகளும் மாறின. தற்போது, இந்தியா – அமெரிக்கா இடையே வேறுபாடுகளை களையப்பட்டு, நெருங்கிய நட்புறவு நிலவி வருகிறது. இந்த சூழலில், அமெரிக்க போர்க்கப்பல் ஒன்று அனுமதியின்றி இந்திய கடற்பகுதிக்குள் நுழைந்திருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

சீனாவிற்கான செய்தியா?

ஒரு நாட்டின் கடல் எல்லையை பொறுத்தவரை கரையிலிருந்து 12 கடல் மைல் (22.224 கி.மீ.) வரை பிராந்திய நீர் என்று அழைக்கப்படும். பிராந்திய நீர் பகுதியில் இருந்து 200 கடல் மைல் (22.224 கி.மீ. – 370.4 கி.மீ.) வரை பொருளாதார மண்டல பகுதி என்று அழைக்கப்படும்.

கடல் குறித்த நாடுகளின் உரிமைகள் தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் கடல் சட்டத்தின்படி, பொருளாதார மண்டல பகுதியில் எந்த நாட்டின் கப்பலும் சுதந்திரமாக பயணிக்கலாம். ஆனால், இந்த சட்டத்தை அங்கீகரித்தபோது, இந்தியா மற்றும் சீனா சில நிபந்தனைகளை விதித்தன. பிரத்யேக பொருளாதார மண்டல பகுதிக்குள் பிற நாட்டு கப்பல்கள் நுழைவதற்கு முன்பு அனுமதி பெற வேண்டும் என நிபந்தனை வைத்தன.

இந்தநிலையில், லட்சத்தீவுக்கு மேற்கே, 130 கடல் மைல் தொலைவில், அமெரிக்காவின், யு.எஸ்.எஸ். ஜான் பால் ஜோன்ஸ் என்ற போர்க்கப்பல், மத்திய அரசின் அனுமதியின்றி நுழைந்தது.

இதை ஒப்புக்கொண்ட அமெரிக்க கடற்படை, “அமெரிக்க போர்க்கப்பல், இந்தியாவின் பிரத்யேக பொருளாதார மண்டல பகுதியில் பயணித்தது. இதற்கு, இந்தியாவின் ஒப்புதலை பெற வேண்டிய அவசியமில்லை. சர்வதேச சட்டங்களுக்கு உட்பட்டு, இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது,” என்று அறிக்கை வெளியிட்டுள்ளது.

இந்தநிலையில், இந்தியாவின் கடல் சார்ந்த கூடுதல் கோரிக்கைகளுக்கு அமெரிக்கா செவி சாய்த்தால், தெற்கு சீன கடல் பகுதியில் சீனாவின் கோரிக்கைகளையும் அமெரிக்கா ஒப்புக்கொள்ள வேண்டிய சூழல் ஏற்படும். இதற்காகவே, அமெரிக்க இத்தகைய நடவடிக்கையை மேற்கொண்டதாக நிபுணர்கள் கூறுகின்றனர்

Stay Connected

16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe

Must Read

Amma unavagam attacked in Tamil: திமுக உறுப்பினர்களால் சூறையாடப்பட்ட அம்மா உணவகமும் உடனடி நடவடிக்கை எடுத்த திமுகவும்!

இது அந்த காலம் இல்ல., 2021: திமுக உறுப்பினர்களால் சூறையாடப்பட்ட அம்மா உணவகமும் உடனடி நடவடிக்கை எடுத்த திமுகவும்! சென்னை முகப்பேர் மேற்கு பத்தாவது பிளாக்கில் உள்ள அம்மா உணவகத்துக்குள் புகுந்து திமுக உறுப்பினர்கள்...

ஸ்தம்பிக்க வைத்த தம்பிகள்., 6.85% வாக்கு சதவீதம் பெற்று 3வது இடம்: தமிழக அரசியலில் தடம் பதித்த நாம் தமிழர் கட்சி!

தமிழகத்தில் அதிமுக, திமுகவிற்கு மாற்றாக 6.85% வாக்குகளை பெற்று, நாம் தமிழர் கட்சி 3வது இடத்தை பிடித்துள்ளது. தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணி அதிக இடங்களை கைப்பற்றியுள்ளது. 159 தொகுதிகளில் திமுக கூட்டணி...

மு.க.ஸ்டாலின் எனும் நான்: அமோக வெற்றியில் திமுக., 2021 தேர்தலில் வரலாறு படைத்த வேட்பாளர் யார்?

நடந்து முடிந்த தமிழக சட்டப்பேரவை தேர்தலில் 234 தொகுதிகளில் திமுக கூட்டணி 159 இடங்களில் வெற்றி பெற்றது. தனிப்பெரும்பான்மையுடன் திமுக தமிழகத்தில் 10 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சி அமைக்கிறது. ஆளும் கட்சியாக இருந்த...

2ம் டோஸ் கொரோனா தடுப்பூசி போட மறந்துட்டீங்களா? பக்கவிளைவுகள் ஏற்படுமா., விளக்கும் மருத்துவர்கள்!

2ம் டோஸ் கொரோனா தடுப்பூசி போட மறந்துட்டீங்களா? பக்கவிளைவுகள் ஏற்படுமா., விளக்கும் மருத்துவர்கள்! இரண்டாம் டோஸ் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளவில்லை என்றால் என்ன ஆகும் என்பது குறித்து இச்செய்தியில் விரிவாக பார்க்கலாம். நாடு முழுவதும்...

Related News

இது நடக்கல அடுத்து ஊரடங்கு நிச்சயம்: தமிழக அரசு எச்சரிக்கை!

இது நடக்கல அடுத்து ஊரடங்கு நிச்சயம்: தமிழக அரசு எச்சரிக்கை! கொரோனா தொற்று நோய் நாடுமுழுவதும் வேகமாக பரவிக் கொண்டிருக்கிறது. எதிர்பாராத அளவிற்கு கொரோனா தொற்று பரவலின் இரண்டாவது அலை அதிகரித்து வருகிறது. முன்னதாக...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here