Home செய்திகள் உலகம் கொரோனாவை பயோ வெப்பனாக்க திட்டமிட்டதா சீனா? அதிரவைக்கும் புதிய ரிபோர்ட்!

கொரோனாவை பயோ வெப்பனாக்க திட்டமிட்டதா சீனா? அதிரவைக்கும் புதிய ரிபோர்ட்!

கொரோனா வைரஸை ஆயுதமாக்குவது தொடர்பாக சீன ராணுவத்தின் விஞ்ஞானிகள் 5 ஆண்டுகளுக்கு முன் ஆய்வு செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

சீனாவின் வுஹான் நகரில் பரவ தொடங்கி கொரோனா வைரஸ், உலகம் முழுவதும் பேரழிவு ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவில் உருமாறிய கொரோனா வைரஸ் அதிவேகத்தில் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது.

இந்தநிலையில், 2015ம் ஆண்டில் சீன ராணுவ விஞ்ஞானிகள் எழுதிய கட்டுரை தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனை வீக் எண்ட் ஆஸ்திரேலியன் என்ற ஊடகம் வெளியிட்டுள்ளது. அதில், கொரோனா வைரஸ்கள் புது வகையான பயோ வெப்பன்கள் என்று சீன விஞ்ஞானிகள் குறிப்பிட்டுள்ளனர்.

china biowar covid news in Tamil
china biowar covid news in Tamil

மூன்றாம் உலக போர் பயோ வெப்பன்களால் நடத்தப்படும் என்று கணித்த அமெரிக்க விமானப்படை அதிகாரி மைக்கேல் ஜே. ஐன்ஸ்கோவின் பணியை குறிப்பிட்டுள்ள சீன விஞ்ஞானிகள், இந்த வகை வைரஸ்கள் மூலம் எதிரி நாட்டின் மருத்துவ கட்டமைப்பை சிதைக்க முடியும் எனவும் தெரிவித்துள்ளனர்.

2003 ஆம் ஆண்டில் சீனாவைத் தாக்கிய சார்ஸ் வைரஸ் பயங்கரவாதிகளால் வேண்டுமென்றே கட்டவிழ்த்துவிடப்பட்ட ஒரு மனிதனால் உருவாக்கப்பட்ட பயோ வெப்பனாக இருந்திருக்கலாம் எனவும் சீன விஞ்ஞானிகள் ஆய்வறிக்கையில் கூறியுள்ளனர். இந்த ஆவணத்தை சீனாவின் சிறந்த பொது சுகாதார நபர்களில் சிலர் இணைந்து எழுதியிருக்கின்றனர்.

இது குறித்து பேசிய ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த அதிகாரி பீட்டர் ஜென்னிங்ஸ்,” இந்த ஆவணம் மிகவும் முக்கியமானது. சீன விஞ்ஞானிகள் 5 ஆண்டுகளுக்கு முன்னரே சார்ஸ் கொரோனா வைரஸ்களை ஆயுதமயமாக்குவது பற்றியும், அதை எவ்வாறு பயன்படுத்துவதும் என்பது குறித்தும் ஆலோசித்துள்ளனர். இது ராணுவ பயன்பாட்டிற்காக வைக்கப்பட்டிருந்த கொரோனா வைரஸ் தற்செயலாக விடுவிக்கப்பட்டதற்கான சாத்தியத்தை மேலும் உறுதிப்படுத்துகிறது”, என கூறுனார். இந்தநிலையில், இந்த ஆவணத்தால் உலக நாடுகள் அதிர்ச்சி அடைந்துள்ளன.

Stay Connected

16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe

Must Read

“தகவல் போதவில்லை…”: கோவாக்சின் தடுப்பூசிக்கு அமெரிக்கா அனுமதி மறுப்பு!

கோவாக்சின் தடுப்பூசிக்கு அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் அவசர கால பயன்பாட்டு ஒப்புதல் அளிக்க மறுப்பு தெரிவித்துள்ளது. கொரோனா தொற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்ள உலகம் முழுவதும் மக்களுக்கு போர்க்கால அடிப்படையில் தடுப்பூசி செலுத்தப்பட்டு...

ஜகமே தந்திரம் கதை இதுதானா?- மதுரை சுருளி Vs லண்டன் தாதா!

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனிஷ் நடிப்பில் ஜூன் 18 ஆம் தேதி வெளியாகும் படம் ஜகமே தந்திரம். இந்த படம் நேரடியாக நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது. ஜகமே தந்திரம் திரைப்படத்தை 17...

கொரோனாவின் ஆட்டம்: சாய்னாவின் ஒலிம்பிக் கனவு பறிபோனது!

கொரோனா பரவல் காரணமாக இந்திய நட்சத்திர வீராங்கனை சாய்னா நேவாலின் டோக்கியோ ஒலிம்பிக் கனவு முற்றிலும் தகர்ந்துள்ளது. 32வது ஒலிம்பிக் போட்டி ஜூலை 23ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 8ம் தேதி வரை ஜப்பான்...

ஒன்றிய அரசா? மத்திய அரசா?: அண்ணா, கருணாநிதியால் முடியாததை செய்து காட்டுவாரா ஸ்டாலின்?

மத்திய அரசை ஒன்றிய அரசு என்று திமுகவினர் குறிப்பிடுவது விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு மு.க.ஸ்டாலின் பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். திராவிடம் மற்றும் சமூக நீதி கொள்கைகளின் அடித்தளத்துடன்,...

Related News

வரிசைக் கட்டும் ஓடிடி வெளியீடு: முக்கிய நடிகர்கள் படங்கள் ஓடிடி வெளியீட்டு தேதி இதோ!

வரிசைக் கட்டும் ஓடிடி வெளியீடு: முக்கிய நடிகர்கள் படங்கள் ஓடிடி வெளியீட்டு தேதி இதோ! கொரோனா பரவல் காரணமாக திரையரங்குகள் மூடும் நிலை ஏற்பட்டுள்ளது. திரையரங்குகள் திறக்கப்பட்டாலும் மக்கள் திரையரங்கு சென்று படம் பார்ப்பதில்...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here