கொரோனா நோய் தொற்று காரணமாக நாடு முழுவதும் இதுவரையில் 1 கோடிக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் உயிரிழப்பு 6 லட்சத்தை கடந்துள்ளது. இதற்கு தடுப்பூசி மட்டுமே தீர்வு என்ற நிலையில் இந்தியா, ரஷ்யா, அமெரிக்க, இங்கிலாந்து உள்ளிட்ட 140 நாடுகள் தடுப்பூசியை கண்டறிந்து சோதனை முயற்சியில் ஈடுப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு பல்கலைகழகம் கண்டறிந்த ChAdOx1 nCoV-19 என்ற தடுப்பூசியின் கிளினிகள் டெஸ்ட கடந்த ஏப்ரல் மாதம் முதல் தொடங்கப்பட்டது. இந்த தடுப்பூசி 1077 பேருக்கு செலுத்தப்பட்டது. இதில் எந்த ஒரு பாதிப்புமின்றி நல்ல முன்னேற்றங்கள் கண்டறியப்பட்டதாக தெரிகிறது. இதில் சிறப்பு அம்சம் என்னவென்றால் ஆன்டிபாடி மற்றும் டி- சில்லர் செல் அதாவது நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் வைரஸை அழிக்கக் கூடிய திறன் இரண்டுமே இந்த தடுப்பூசியில் இருக்கிறது.
இந்த தடுப்பூசி செலுத்தப்பட்டு 14 நாட்களில் வைரஸை கண்டறிந்து அழிக்கக் கூடிய டி-செல் உருவாகியிருப்பது தெரியவந்தது. மேலும் 28 நாட்களில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வகையில் ஆன்பாடிகள் உற்பத்தி ஆவதும் கண்டறியப்பட்டுள்ளது.
இந்த தடுப்பூசி சோதனையில் முதற்கட்ட வெற்றி அடைந்துள்ளதையடுத்து ஆக்ஸ்போர்டு பழ்கலைகழக ஜென்னர் நிறுவன இயக்குநர் ஆட்ரியன் ஹில் தனது வலைதளப்பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
இந்த தடுப்பூசிக்கு அந்நாட்டு அரசு ஏற்கனவே 200 கோடி ஆர்டர்களை கொடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.