Home செய்திகள் உலகம் "தகவல் போதவில்லை...": கோவாக்சின் தடுப்பூசிக்கு அமெரிக்கா அனுமதி மறுப்பு!

“தகவல் போதவில்லை…”: கோவாக்சின் தடுப்பூசிக்கு அமெரிக்கா அனுமதி மறுப்பு!

கோவாக்சின் தடுப்பூசிக்கு அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் அவசர கால பயன்பாட்டு ஒப்புதல் அளிக்க மறுப்பு தெரிவித்துள்ளது.

கொரோனா தொற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்ள உலகம் முழுவதும் மக்களுக்கு போர்க்கால அடிப்படையில் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. அனைத்து மக்களுக்கும் விரைவில் தடுப்பூசி சென்று சேரும் வகையில், கொரோனா தடுப்பூசிகளுக்கு அவசர கால பயன்பாட்டு ஒப்புதல் வழங்கப்பட்டு வருகிறது.

இதன்படி, இந்தியாவில் ஐதராபாத்தில் உள்ள பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்துள்ள கோவாக்சின் தடுப்பூசிக்கு கடந்த ஜனவரி மாதம் அவசர கால பயன்பாட்டு ஒப்புதல் அளிக்கப்பட்டது. அப்போது, கோவாக்சின் தடுப்பூசிகள் மூன்றாம் கட்ட பரிசோதனையில் இருந்தது.

FDA refused to approve emergency use of the covaxin vaccine
FDA refused to approve emergency use of the covaxin vaccine

இதைத்தொடர்ந்து, கடந்த மார்ச் மாதம், மூன்றாம் கட்ட பரிசோதனை தொடர்பான இடைக்கால தரவுகளை பாரத் பயோடெக் நிறுவனம் வெளியிட்டது. இருப்பினும், இதுவரை இந்த தடுப்பூசியின் 3வது கட்ட பரிசோதனை முடிவுகள் வெளியிடப்படவில்லை.

மேலும், இந்த தடுப்பூசியை உலக சுகாதார நிறுவனம், அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிர்வாகம், ஐரோப்பாவின் மருந்து கட்டுப்பாட்டு நிறுவனம் ஆகியவை இன்னும் அங்கீகரிக்கவில்லை, இதனால், பல்வேறு நாடுகள் கோவாக்சின் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களை தடுப்பூசி போடாதவர்களாகவே கருதுகின்றன.

இந்த சூழலில், கோவாக்சின் தடுப்பூசிகளை அமெரிக்காவில் விநியோகம் செய்ய பாரத் பயோடெக் நிறுவனத்துடன், ஒகுஜன் நிறுவனம் ஒப்பந்தம் போட்டுக் கொண்டது. தொடர்ந்து, அமெரிக்காவில் கோவாக்சின் தடுப்பூசிக்கு அவசர கால பயன்பாட்டு ஒப்புதல் வழங்கக் கோரி அந்நாட்டின் உணவு மற்றும் மருந்து நிர்வாகத்திடம் விண்ணப்பம் செய்தது.

இந்தநிலையில், கோவாக்சின் தடுப்பூசிகளுக்கு அவசர கால பயன்பாட்டு ஒப்புதல் தர உணவு மற்றும் மருந்து நிர்வாகம் அனுமதி மறுத்துள்ளது. கூடுதல் தரவுகளுடன் முழு ஒப்புதலுக்கு விண்ணப்பம் செய்யுமாறு உணவு மற்றும் மருந்து நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது.

இதையடுத்து, கூடுதல் தகவல்களுடன் மீண்டும் விண்ணப்பிக்க உள்ளதாக ஒகுஜன் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதனிடையே, மூன்றாம் கட்ட பரிசோதனை முடிவுகள் வரும் ஜூலை மாதத்தில் வெளியப்படும் என பாரத் பயோடெக் நிறுவனம் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

Stay Connected

16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe

Must Read

“தகவல் போதவில்லை…”: கோவாக்சின் தடுப்பூசிக்கு அமெரிக்கா அனுமதி மறுப்பு!

கோவாக்சின் தடுப்பூசிக்கு அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் அவசர கால பயன்பாட்டு ஒப்புதல் அளிக்க மறுப்பு தெரிவித்துள்ளது. கொரோனா தொற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்ள உலகம் முழுவதும் மக்களுக்கு போர்க்கால அடிப்படையில் தடுப்பூசி செலுத்தப்பட்டு...

ஜகமே தந்திரம் கதை இதுதானா?- மதுரை சுருளி Vs லண்டன் தாதா!

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனிஷ் நடிப்பில் ஜூன் 18 ஆம் தேதி வெளியாகும் படம் ஜகமே தந்திரம். இந்த படம் நேரடியாக நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது. ஜகமே தந்திரம் திரைப்படத்தை 17...

கொரோனாவின் ஆட்டம்: சாய்னாவின் ஒலிம்பிக் கனவு பறிபோனது!

கொரோனா பரவல் காரணமாக இந்திய நட்சத்திர வீராங்கனை சாய்னா நேவாலின் டோக்கியோ ஒலிம்பிக் கனவு முற்றிலும் தகர்ந்துள்ளது. 32வது ஒலிம்பிக் போட்டி ஜூலை 23ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 8ம் தேதி வரை ஜப்பான்...

ஒன்றிய அரசா? மத்திய அரசா?: அண்ணா, கருணாநிதியால் முடியாததை செய்து காட்டுவாரா ஸ்டாலின்?

மத்திய அரசை ஒன்றிய அரசு என்று திமுகவினர் குறிப்பிடுவது விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு மு.க.ஸ்டாலின் பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். திராவிடம் மற்றும் சமூக நீதி கொள்கைகளின் அடித்தளத்துடன்,...

Related News

வரிசைக் கட்டும் ஓடிடி வெளியீடு: முக்கிய நடிகர்கள் படங்கள் ஓடிடி வெளியீட்டு தேதி இதோ!

வரிசைக் கட்டும் ஓடிடி வெளியீடு: முக்கிய நடிகர்கள் படங்கள் ஓடிடி வெளியீட்டு தேதி இதோ! கொரோனா பரவல் காரணமாக திரையரங்குகள் மூடும் நிலை ஏற்பட்டுள்ளது. திரையரங்குகள் திறக்கப்பட்டாலும் மக்கள் திரையரங்கு சென்று படம் பார்ப்பதில்...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here