Home செய்திகள் உலகம் ஈரானின் அணு விஞ்ஞானி படுகொலை: தாக்குதல் பின்னணியில் இஸ்ரேல்?

ஈரானின் அணு விஞ்ஞானி படுகொலை: தாக்குதல் பின்னணியில் இஸ்ரேல்?

ஈரானின் அணு விஞ்ஞானி படுகொலை: தாக்குதல் பின்னணியில் இஸ்ரேல்?

ஈரானின் மூத்த அணு விஞ்ஞானி மொஹ்சென் பக்ரிசாதே கொல்லப்பட்ட சம்பவத்தில் இஸ்ரேலுக்கு தொடர்பு இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

ஈரான் தலைநகர் டெஹ்ரானில் நாட்டின் அணு குண்டின் தந்தை என்று வர்ணிக்கப்படும் மொஹ்சென் பக்ரிசாதே சென்ற கார் மீது துப்பாக்கி ஏந்தி வந்த சிலர் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில், படுகாயமடைந்த மொஹ்சென் பக்ரிசாதே மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதைத்தொடர்ந்து, அணு விஞ்ஞானி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் இஸ்ரேலுக்கு தொடர்பு இருப்பதாக ஈரான் பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ளது. கடந்த 10 ஆண்டுகளில், இதுபோன்று 4 ஈரானிய அணு விஞ்ஞானிகள் படுகொலை செய்யப்பட்ட போதும், இஸ்ரேல் மீதே குற்றம்சாட்டப்பட்டது.

மேற்கு ஆசியாவில் சவுதி, ஈரான், இஸ்ரேல் ஆகிய 3 அதிகார மையங்கள் இருப்பது அனைவரும் அறிந்ததே. இதில், சவுதி மற்றும் இஸ்ரேலுடன் அமெரிக்கா தொடர்ச்சியாக நட்பு பாராட்டி வருகிறது. ஒபாமா ஆட்சி காலத்தில் ஈரானுடன் நல்லுறவு அமைக்க அமெரிக்கா முயற்சித்தது.

ஆனால், அதை தலைகீழாக திருப்பினார், அமெரிக்க அதிபர் டிரம்ப். அவரது ஆட்சி காலத்தில் ஈரான் – அமெரிக்கா இடையிலான உறவு மோசமான நிலையை எட்டியது. ஈரான் மீது குற்றச்சாட்டுகளை முன் வைத்த டிரம்ப், அந்நாட்டுடனான அணுசக்தி ஒப்பந்தத்தை ரத்து செய்து தடைகளை விதித்தார்.

Iran nuclear scientist assassination Israel behind attack

ஏற்கனவே, மேற்கு ஆசியாவில் தனித்துவிடப்பட்ட ஈரானுக்கு, இது பேரிடியாக விழுந்தது. இதனிடையே, தனது தேர்தல் தோல்வியை தொடர்ந்து, மேற்கு ஆசியாவில் தான் செய்ய திட்டமிட்டதை எல்லாம் சிறிய காலத்தில் செய்துவிட வேண்டும் என டிரம்ப் தீவிரம் காட்டி வருகிறார்.

ஈரானுடன் மீண்டும் அணுசக்தி ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தையில் அமெரிக்க அதிபராக தேர்வான ஜோ பைடன் ஈடுபட வாய்ப்புள்ளதாக கூறப்படும் நிலையில், இந்த படுகொலையால் அந்த முயற்சிகள் வீணாகலாம் என சொல்லப்படுகிறது. குறிப்பாக, மீண்டும் ஒருமுறை அமெரிக்காவை நம்ப ஈரான் தயாராக இருக்காது என கூறப்படுகிறது.

Stay Connected

16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe

Must Read

“வெற்றிவேல்., வீரவேல்”- மோடி., “ஜல்லிக்கட்டு கதாநாயகன் மோடி”- ஓபிஎஸ்!

தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகிற 6 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான பிரச்சாரத்தில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். தாராபுரம் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் எல்.முருகன் மற்றும் கூட்டணி...

நதியில் பதுக்கிய ஆதாரங்கள் மீட்பு: முகேஷ் அம்பானி மிரட்டல் வழக்கில் அடுத்தடுத்து திருப்பங்கள்!

முகேஷ் அம்பானி வீடு அருகே வெடி பொருட்களுடன் கார் நிறுத்தப்பட்ட வழக்கில், அடுத்தடுத்து பல திருப்பங்கள் நிகழ்ந்து வருகின்றன. மும்பையில் உள்ள பிரபல தொழிலதிபர் மற்றும் ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி வீட்டின்...

சூடுபிடிக்கும் வேட்பு மனு தாக்கல்: வாக்குப்பதிவு நாளன்று விடுமுறையா?

தமிழக சட்டப் பேரவைக்கு வரும் ஏப்ரல் 6ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து, கடந்த 12ம் தேதி முதல் வேட்புமனு தாக்கல் நடைபெற்று வருகிறது. முதல் நாளில் தேர்தல் மன்னன் பத்மநாபன், துணை...

வெற்றி நடை போடுமா தமிழகம்? – அதிமுக கூட்டணியின் பலம் என்ன? பலவீனம் என்ன?

வெற்றி நடை போடுமா தமிழகம்? – அதிமுக கூட்டணியின் பலம் என்ன? பலவீனம் என்ன? தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் 6ம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தலில் ஹாட்ரிக் வெற்றி பெற வேண்டும் என...

Related News

மண்டைக்குள் ஓடிக் கொண்டே இருக்கும் “எஞ்சாய் எஞ்சாமி” பாடல்: சிந்தைனை, பிரமிப்பு, புல்லரிப்பு!

கடந்த காலத்துக்கு சென்று ஒரு அறிவை திருட வேண்டும் என்றால் அதில் இதுவும் ஒரு விஷயமாக இருக்கும். அந்த அளவிற்கு இந்த பாடலில் வீடியோவும், இசையும், வரியும் அமைந்துள்ளது என்றே கூறலாம். சமீப...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here