Home செய்திகள் உலகம் இஸ்ரேல் - பாலத்தீன மோதல்: இந்திய பெண் பலி; பின்னணி என்ன?

இஸ்ரேல் – பாலத்தீன மோதல்: இந்திய பெண் பலி; பின்னணி என்ன?

இஸ்ரேலில் பாலத்தீன ஹமாஸ் போராளிகள் நடத்திய தாக்குதலில் இந்திய பெண் உட்பட பலர் உயிரிழந்தனர்.

இஸ்ரேல் – பாலத்தீனம் நாடுகளுக்கு இடையே பல ஆண்டுகளாக கசப்பான உறவு இருந்து வருகிறது. கடந்த 1885ம் ஆண்டு, ஐரோப்பாவில் கடும் துன்புறுத்தல்களை அனுபவித்து வந்த யூதர்கள் பாலத்தீனத்தில் குடிபெயரத் தொடங்கினர். குறிப்பாக, கிறிஸ்தவர்கள், யூதர்கள் மற்றும் முஸ்லிம்களின் புனித நகரமான ஜெருசலேத்தை குறிவைத்து, இடம்பெயர்ந்தனர்.

baitul muqaddas history in tamil
கேரளாவின் இடுக்கி மாவட்டத்தை சேர்ந்த சௌமியா சந்தோஷ்

இரண்டாம் உலக போருக்கு பிறகு, ஐநாவின் பிரிவினை திட்டத்தின்படி, ஜெருசலேம் ஒரு சர்வதேச நகரமாக இயங்கும் என பரிந்துரைக்கப்பட்டது. ஆனால், 1948 இஸ்ரேல் – அரபு நாடுகளுக்கு இடையிலான போரில், ஜெருசலேத்தின் மேற்கு பகுதிகளை இஸ்ரேல் கைப்பற்றியது.

இதைத்தொடர்ந்து, கடந்த 1967ம் ஆண்டில் நடந்த இஸ்ரேல் – அரபு நாடுகள் இடையிலான போரில் கிழக்கு ஜெருசலேத்தையும் இஸ்ரேல் வென்றெடுத்தது. இதனால், முழு ஜெருசலேத்தை, தனது தலைநகராக கருதுகிறது இஸ்ரேல். இதை கடந்த டிரம்ப் ஆட்சி காலத்தில் அமெரிக்கா அங்கீகரித்தது.

masjid e aqsa news tamil
israel palestine news Today in tamil

இதனிடையே, இஸ்ரேலின் அடக்குமுறை மற்றும் கட்டாய வெளியேற்றத்தால் அவதிப்பட்டு வரும் பாலத்தீனியர்கள், கிழக்கு ஜெருசலேத்தை பாலத்தீன நாட்டின் தலைநகராக கருதுகின்றனர்.

இதனால், இரு நாடுகளுக்கு இடையே பல தசாப்தங்களாக நிலவி வந்த உரசல்கள், தற்போது பூதாகரமாக வெடித்திருக்கிறது. ரமலான் நோம்பு காலத்தில், ஒவ்வொரு மாலையும் பாலத்தீனியர்கள் இப்தருக்குப் பிறகு டமாஸ்கஸ் கேட்டில் கூட்டங்களை நடந்துவது வழக்கம். இந்தநிலையில, பாலத்தீனியர்களின் மாலை கூட்டங்களை தடுக்கும் வகையில், கடந்த ஏப்ரல் மாத மத்தியில் இஸ்ரேல் காவல்துறையினர் அப்பகுதியில் தடுப்புகளை அமைத்தனர்.

இதனால், ஆத்திரமடைந்த பாலத்தீனியர்கள், இஸ்ரேல் காவல்துறையினருடன் மோதலில் ஈடுபட்டனர். இதனிடையே, பதற்றத்தை மேலும் அதிகரிக்கும் வகையில், ஜெருசலேம் நாள் பேரணிக்கு இஸ்ரேல் அரசு அனுமதி வழங்கியது. முழு ஜெருசலேத்தையும் இஸ்ரேல் கைப்பற்றியதை கொண்டாடும் வகையில் நடத்தப்படும் இந்த பேரணி, பாலத்தீனியர்கள் வசிக்கும் பகுதிகள் வழியாக செல்வது வழக்கம்.

இதற்காக, இஸ்லாமியர்களின் 3வது புனித தலமான அல்-அக்ஸா பள்ளிவாசலுக்குள் நுழைந்த இஸ்ரேல் ராணுவத்தினர், ரப்பர் புல்லட்கள், கண்ணீர் புகை குண்டுகளை வீசி அங்கிருந்த பாலத்தீனியர்களை வெளியேற்றினர். இதில், 300க்கும் மேற்பட்ட பாலத்தீனியர்கள் காயமடைந்தனர்.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், ஹமாஸ் போராளிகள், இஸ்ரேல் மீது ராக்கெட்டுகளை ஏவினர். இதில், பலர் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து, காசாவில் ஹமாஸ் அமைப்பின் அரசியல் தலைவர்களின் அடுக்குமாடி கட்டடம் மீது இஸ்ரேல் ராக்கெட்டுகளை ஏவியது. இதில், 30க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

இதையடுத்து, ஹமாஸ் அமைப்பு சுமார் 200 ராக்கெட்டுகளை இஸ்ரேல் நகரங்கள் மீது ஏவின. இத்தாக்குதலில் வாகனங்கள், வீடுகள், கட்டடங்கள் என பல தீக்கிரையாயின. இதில், பலர் பலியாயினர். பலியானவர்களில், கேரளாவைச் சேர்ந்த பெண் சௌமியாவும் ஒருவர்.

கேரளாவின் இடுக்கி மாவட்டத்தை சேர்ந்த சௌமியா சந்தோஷ், இஸ்ரேலின் ஆஷ்கேலோனில் 80 வயது மூதாட்டி ஒருவரை பராமரிக்கும் பணியில் ஈடுபட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

Stay Connected

16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe

Must Read

“தகவல் போதவில்லை…”: கோவாக்சின் தடுப்பூசிக்கு அமெரிக்கா அனுமதி மறுப்பு!

கோவாக்சின் தடுப்பூசிக்கு அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் அவசர கால பயன்பாட்டு ஒப்புதல் அளிக்க மறுப்பு தெரிவித்துள்ளது. கொரோனா தொற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்ள உலகம் முழுவதும் மக்களுக்கு போர்க்கால அடிப்படையில் தடுப்பூசி செலுத்தப்பட்டு...

ஜகமே தந்திரம் கதை இதுதானா?- மதுரை சுருளி Vs லண்டன் தாதா!

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனிஷ் நடிப்பில் ஜூன் 18 ஆம் தேதி வெளியாகும் படம் ஜகமே தந்திரம். இந்த படம் நேரடியாக நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது. ஜகமே தந்திரம் திரைப்படத்தை 17...

கொரோனாவின் ஆட்டம்: சாய்னாவின் ஒலிம்பிக் கனவு பறிபோனது!

கொரோனா பரவல் காரணமாக இந்திய நட்சத்திர வீராங்கனை சாய்னா நேவாலின் டோக்கியோ ஒலிம்பிக் கனவு முற்றிலும் தகர்ந்துள்ளது. 32வது ஒலிம்பிக் போட்டி ஜூலை 23ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 8ம் தேதி வரை ஜப்பான்...

ஒன்றிய அரசா? மத்திய அரசா?: அண்ணா, கருணாநிதியால் முடியாததை செய்து காட்டுவாரா ஸ்டாலின்?

மத்திய அரசை ஒன்றிய அரசு என்று திமுகவினர் குறிப்பிடுவது விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு மு.க.ஸ்டாலின் பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். திராவிடம் மற்றும் சமூக நீதி கொள்கைகளின் அடித்தளத்துடன்,...

Related News

வரிசைக் கட்டும் ஓடிடி வெளியீடு: முக்கிய நடிகர்கள் படங்கள் ஓடிடி வெளியீட்டு தேதி இதோ!

வரிசைக் கட்டும் ஓடிடி வெளியீடு: முக்கிய நடிகர்கள் படங்கள் ஓடிடி வெளியீட்டு தேதி இதோ! கொரோனா பரவல் காரணமாக திரையரங்குகள் மூடும் நிலை ஏற்பட்டுள்ளது. திரையரங்குகள் திறக்கப்பட்டாலும் மக்கள் திரையரங்கு சென்று படம் பார்ப்பதில்...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here