Home செய்திகள் உலகம் தமிழ் வம்சாவளியை சேர்ந்த பெண் கமலா ஹாரிஸ்: அமெரிக்க துணை அதிபர் தேர்தலில் போட்டி!

தமிழ் வம்சாவளியை சேர்ந்த பெண் கமலா ஹாரிஸ்: அமெரிக்க துணை அதிபர் தேர்தலில் போட்டி!

அமெரிக்காவை ஆளப்போகும் தமிழ் வம்சாவளி பெண்: துணை அதிபர் தேர்தலில் போட்டி!

அமெரிக்க துணை அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளராக தமிழ் வம்சாவளியை சேர்ந்த கமலா ஹாரிஸ் அறிவிக்கப்பட்டுள்ளார்.

கருப்பின போராட்டம், குடியேற்றத்திற்கு எதிரான கொள்கை உள்ளிட்ட விவகாரங்களுக்கு மத்தியில் அமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பர் 3ம் தேதி நடைபெற உள்ளது. குடியரசுக் கட்சி சார்பில் தற்போதைய அதிபர் டொனால்டு டிரம்ப் போட்டியிடுகிறார். எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சி சார்பில் ஒபாமா ஆட்சியில் துணை அதிபராக இருந்த ஜோ பைடன் களமிறங்குகிறார்.

US Vice Presidential election

அதிபர் தேர்தல் நடைபெறும் நாளிலேயே துணை அதிபரும் தேர்வு செய்யப்பட உள்ளார்.
அமெரிக்காவை பொறுத்தவரை துணை அதிபர் பதவியில் இருப்பவர்கள் அடுத்தடுத்த தேர்தல்களில் அதிபர் பதவிக்கு போட்டியிடுவது வழக்கம். இதனால், அதிபர் தேர்தலை போல், துணை அதிபர் தேர்தலும் மிக முக்கியமானது. குடியரசுக் கட்சி சார்பில் துணை அதிபர் பதவிக்கு தற்போதைய துணை அதிபர் மைக் பென்ஸ் போட்டியிட உள்ள நிலையில், ஜனநாய கட்சியின் வேட்பாளர் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளார்.

துணை அதிபர் பதவிக்கு கலிஃபோர்னியாவை சேர்ந்த செனட் உறுப்பினர் கமலா ஹாரிஸ் போட்டியிடுவார் என்று ஜோ பிடன் அறிவித்துள்ளார். இது தொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் செய்தி பதிவிட்டுள்ள அவர், அச்சமற்ற போராளி, நாட்டின் மிகச்சிறந்த அரசு ஊழியர்களில் ஒருவரான கமலா ஹாரிஸ் எனக்கு துணையாக, துணை அதிபர் தேர்தலில் போட்டியிடுவார். கமலா ஹாரிஸ் அரசு தலைமை வழக்கறிஞராக இருந்த போது, உழைக்கும் வர்க்க மக்களை உயர்த்துவதையும், பெண்கள் மற்றும் குழந்தைகளை பாதுகாப்பதையும் நான் பார்த்துள்ளேன். நான் அப்போது பெருமிதம் அடைந்தேன். அதிபர் தேர்தலில் அவரை எனது துணையாக கொண்டிருப்பதில் இப்போது பெருமைப்படுகிறேன், என்று குறிப்பிட்டுள்ளார்.

55 வயதான கமலா ஹாரிஸின் தாய் தமிழகத்தை சேர்ந்தவர், தந்தை ஜமைக்காவை
சேர்ந்தவர். பெண் ஒபாமா என ஆதரவாளர்களால் அழைக்கப்படும் கமலா ஹாரிஸ், கலிஃபோர்னியாவின் அரசு தலைமை வழக்கறிஞராக தேர்வு செய்யப்பட்ட முதல் கருப்பின பெண், செனட் சபைக்கு தேர்வு செய்யப்பட்ட முதல் தெற்கு ஆசியாவை சேர்ந்த பெண் போன்ற பெருமைகளுக்குரியவர். மேலும், தற்போதைய அறிவிப்பால், அவருக்கு அமெரிக்காவின் துணை அதிபர் வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் கருப்பின பெண் மற்றும் முதல் ஆசிய அமெரிக்கர் போன்ற பெருமைகள் சேர்ந்துள்ளன.

Kamala Harris

இந்த அதிபர் தேர்தலில் கருப்பின விவகாரம் பெரும் பங்கு வகிக்கும் என்பதால், கமலா ஹாரிஸின் தேர்வு ஜோ பைடனுக்கு கூடுதல் பலம் சேர்க்கும் என நம்பப்படுகிறது. குறிப்பாக கருப்பின பெண்கள், ஆசிய அமெரிக்கர்களின் வாக்குகளை குவிப்பதில் கமலா ஹாரிஸ் பெரும் பங்கு வகிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், குடியேற்றத்திற்கு எதிரான அதிபர் டிரம்ப்பின் கொள்கையால் அதிருப்தியில் உள்ள பெரு ஐடி நிறுவன முதலாளிகள், குடியேறிய வம்சாவளியை சேர்ந்த கமலா ஹாரிஸுக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் ஆதரவு அளிப்பார்கள் என கூறப்படுகிறது. ஜோ பைடன் – கமலா ஹாரிஸ் ஆகியோர் ஆட்சியை கைப்பற்றினால் குடியேற்றம் தொடர்பான கொள்கையில் மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது. இதனால், அமெரிக்க கனவுடன் சுற்றித் திரியும் இந்திய பட்டதாரி இளைஞர்கள் பெரிதும் பயன் பெறுவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Stay Connected

16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe

Must Read

“தகவல் போதவில்லை…”: கோவாக்சின் தடுப்பூசிக்கு அமெரிக்கா அனுமதி மறுப்பு!

கோவாக்சின் தடுப்பூசிக்கு அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் அவசர கால பயன்பாட்டு ஒப்புதல் அளிக்க மறுப்பு தெரிவித்துள்ளது. கொரோனா தொற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்ள உலகம் முழுவதும் மக்களுக்கு போர்க்கால அடிப்படையில் தடுப்பூசி செலுத்தப்பட்டு...

ஜகமே தந்திரம் கதை இதுதானா?- மதுரை சுருளி Vs லண்டன் தாதா!

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனிஷ் நடிப்பில் ஜூன் 18 ஆம் தேதி வெளியாகும் படம் ஜகமே தந்திரம். இந்த படம் நேரடியாக நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது. ஜகமே தந்திரம் திரைப்படத்தை 17...

கொரோனாவின் ஆட்டம்: சாய்னாவின் ஒலிம்பிக் கனவு பறிபோனது!

கொரோனா பரவல் காரணமாக இந்திய நட்சத்திர வீராங்கனை சாய்னா நேவாலின் டோக்கியோ ஒலிம்பிக் கனவு முற்றிலும் தகர்ந்துள்ளது. 32வது ஒலிம்பிக் போட்டி ஜூலை 23ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 8ம் தேதி வரை ஜப்பான்...

ஒன்றிய அரசா? மத்திய அரசா?: அண்ணா, கருணாநிதியால் முடியாததை செய்து காட்டுவாரா ஸ்டாலின்?

மத்திய அரசை ஒன்றிய அரசு என்று திமுகவினர் குறிப்பிடுவது விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு மு.க.ஸ்டாலின் பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். திராவிடம் மற்றும் சமூக நீதி கொள்கைகளின் அடித்தளத்துடன்,...

Related News

வரிசைக் கட்டும் ஓடிடி வெளியீடு: முக்கிய நடிகர்கள் படங்கள் ஓடிடி வெளியீட்டு தேதி இதோ!

வரிசைக் கட்டும் ஓடிடி வெளியீடு: முக்கிய நடிகர்கள் படங்கள் ஓடிடி வெளியீட்டு தேதி இதோ! கொரோனா பரவல் காரணமாக திரையரங்குகள் மூடும் நிலை ஏற்பட்டுள்ளது. திரையரங்குகள் திறக்கப்பட்டாலும் மக்கள் திரையரங்கு சென்று படம் பார்ப்பதில்...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here