Home செய்திகள் உலகம் அங்கேயும் ஒரு ‘காஷ்மீர்’: நிலத்திற்காக சண்டை., மூளுமா 3ம் உலக போர்?

அங்கேயும் ஒரு ‘காஷ்மீர்’: நிலத்திற்காக சண்டை., மூளுமா 3ம் உலக போர்?

நாகோர்னோ-கராபக் என்ற பிராந்தியத்திற்காக அர்மீனியா, அஜர்பைஜான் நாடுகளுக்கு இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.

உலக வரலாற்றை புரட்டி பார்த்தோமென்றால் மண், பெண், பொன் ஆகிய மூன்று ஆசைகளை சுற்றியே போர்கள் வெடித்திருப்பதை உணர முடியும். ஒரு பேரரசு ஆவதும் அழிவதும் இதனை ஒட்டியே அமைந்திருக்கின்றன. இந்த சூழலில், உலகரங்களில் பெரிதும் பேசப்படாத அர்மீனியா, அஜர்பைஜான் நாடுகளின் மோதலை புரிந்துக் கொள்ள சோவியத் ஒன்றியம் உருவான காலத்திற்கு நாம் பின்னோக்கி செல்ல வேண்டும்.

முதலாம் உலக போர் முடிந்த காலத்தில் சோவியத் ஒன்றியம் உருவானது. அப்போது, அர்மீனியா மற்றும் அஜர்பைஜான் சோவியத்தின் கட்டுப்பாட்டிற்குள் சென்றன. அர்மீனிய இன மக்கள் அதிகம் வசிக்கும் நாகோர்னோ-கராபக் என்ற பிராந்தியத்தியம் தன்னாட்சி அமைப்பாக அஜர்பைஜானின் கீழ் நிர்வகிக்கப்படும் என சோவியத் அறிவித்தது.

சோவியத் ஒன்றியம் வலுவிழக்க ஆரம்பித்த பிறகு, நாகோர்னோ-கராபக் பகுதியில் கிளர்ச்சி வெடித்தது. பிரிவினைவாத அமைப்புகளின் ஆதிக்கத்தால், 1988ம் ஆண்டு நாகோர்னோ-கராபக் சட்டப்பேரவையில் தன்னாட்சி அந்தஸ்தை ரத்து செய்துவிட்டு, அர்மீனியாவுடன் இணைய தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அதுவரை மோதலாக இருந்த நாகோர்னோ-கராபக் பிரச்சனை ,1991ம் ஆண்டில் சோவியத் ஒன்றியம் உடைந்த பிறகு, போராக மாறியது. ரஷ்யாவின் தொடர் மத்தியஸ்தம் மூலம் 1994ம் ஆண்டு போர் முடிவுக்கு வந்தது. இரு நாடுகளுக்கு இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுந்ததானது. இருப்பினும் இந்த போரில், பரப்பளவிலும், மக்கள் தொகையிலும் மிக சிறிய நாடான அர்மீனியாவால் அஜர்பைஜான் தோற்கடிக்கப்பட்டது.

இதனிடையே, நாகோர்னோ-கராபக் பகுதியை ஆட்சாக் குடியரசு என்ற தனி நாடாக அர்மீனியா அறிவித்தது. ஆனால், இதை உலக நாடுகள் இன்றுவரை ஏற்கவில்லை. அஜர்பைஜான் நாட்டின் ஒரு பகுதியாகவே நாகோர்னோ-கராபக் கருதப்படுகிறது.

இது ஒருபுறம் இருக்க போர் நிறுத்த ஒப்பந்ததை மீறி இரு நாடுகளும் பல ஆண்டுகளாகவே தாக்குதல்களை நடத்தி வருகின்றன. அந்த வகையில், ஜூலை மாதத்தில் ஏற்பட்ட அத்துமீறலின் தொடர்ச்சியாக தற்போது இரு நாடுகளுக்கு இடையே கடும் மோதல் உருவாகியுள்ளது.

இஸ்லாமிய பெரும்பான்மை கொண்ட அஜர்பைஜானுக்கு துருக்கி ஆதரவு தெரிவித்துள்ளது. துருக்கியின் கூலிப்படையினர் அஜர்பைஜானுக்கு பக்கபலமாக களத்தில் சண்டையிடுவதாக குற்றம்சாட்டப்படுகிறது. இந்தியாவின் கொல்லைப்புறத்தில் உள்ள பாகிஸ்தானும் துருக்கி வழி சென்று, ராணுவத்தினரை சண்டைக்கு அனுப்பி இருப்பதாக கூறப்படுகிறது. இரு நாடுகளுடனும் நட்புறவாடும் ரஷ்யா, ராணுவ ஒப்பந்தத்தின் காரணத்தால், அர்மீனியா பக்கம் சாயக்கூடும் என சொல்லப்படுகிறது. அணு ஆயுத பலம் கொண்ட நாடுகள் நேரடியாகவும், மறைமுகமாகவும் களத்தில் இறங்கி இருப்பதால், போர் மூளும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

Stay Connected

16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe

Must Read

“வெற்றிவேல்., வீரவேல்”- மோடி., “ஜல்லிக்கட்டு கதாநாயகன் மோடி”- ஓபிஎஸ்!

தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகிற 6 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான பிரச்சாரத்தில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். தாராபுரம் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் எல்.முருகன் மற்றும் கூட்டணி...

நதியில் பதுக்கிய ஆதாரங்கள் மீட்பு: முகேஷ் அம்பானி மிரட்டல் வழக்கில் அடுத்தடுத்து திருப்பங்கள்!

முகேஷ் அம்பானி வீடு அருகே வெடி பொருட்களுடன் கார் நிறுத்தப்பட்ட வழக்கில், அடுத்தடுத்து பல திருப்பங்கள் நிகழ்ந்து வருகின்றன. மும்பையில் உள்ள பிரபல தொழிலதிபர் மற்றும் ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி வீட்டின்...

சூடுபிடிக்கும் வேட்பு மனு தாக்கல்: வாக்குப்பதிவு நாளன்று விடுமுறையா?

தமிழக சட்டப் பேரவைக்கு வரும் ஏப்ரல் 6ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து, கடந்த 12ம் தேதி முதல் வேட்புமனு தாக்கல் நடைபெற்று வருகிறது. முதல் நாளில் தேர்தல் மன்னன் பத்மநாபன், துணை...

வெற்றி நடை போடுமா தமிழகம்? – அதிமுக கூட்டணியின் பலம் என்ன? பலவீனம் என்ன?

வெற்றி நடை போடுமா தமிழகம்? – அதிமுக கூட்டணியின் பலம் என்ன? பலவீனம் என்ன? தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் 6ம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தலில் ஹாட்ரிக் வெற்றி பெற வேண்டும் என...

Related News

மண்டைக்குள் ஓடிக் கொண்டே இருக்கும் “எஞ்சாய் எஞ்சாமி” பாடல்: சிந்தைனை, பிரமிப்பு, புல்லரிப்பு!

கடந்த காலத்துக்கு சென்று ஒரு அறிவை திருட வேண்டும் என்றால் அதில் இதுவும் ஒரு விஷயமாக இருக்கும். அந்த அளவிற்கு இந்த பாடலில் வீடியோவும், இசையும், வரியும் அமைந்துள்ளது என்றே கூறலாம். சமீப...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here