Home விளையாட்டு கால்பந்து ஆண்களுக்கு நிகராக பெண்களுக்கும் சம ஊதியம்; பாலின வேறுபாட்டுக்கு முற்றுப்புள்ளி வைத்த பிரேசில்!

ஆண்களுக்கு நிகராக பெண்களுக்கும் சம ஊதியம்; பாலின வேறுபாட்டுக்கு முற்றுப்புள்ளி வைத்த பிரேசில்!

பிரேசில் கால்பந்து அணியில் ஆண்களுக்கு வழங்கப்படுவதை போல இனி பெண்களுக்கும் சம ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகம் தற்போது நவீன மயத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. பெண்கள் அனைத்து தொழில்களிலும் களமிறங்கியுள்ளனர். ஆனால் அவர்களுக்கு ஆண்களை போல சம ஊதியம் கிடைக்கிறதா என்றால் நிச்சயம் இல்லை.

இந்த விஷயங்களில் பாலின வேறுபாடு தான் தலைதூக்கி நிற்கிறது. அதிலும் குறிப்பாக விளையாட்டுகளில்! பெண்கள் ஃபிஃபா உலகக் கோப்பையை நான்கு முறை வென்ற அமெரிக்கா கூட இதில் விதிவிலக்கில்லை.

தேசிய அணியில் உள்ள அமெரிக்க வீராங்கனைகள் ஊதியத்தில் பாகுபாடு காட்டப்படுவதாகக் கூறி கடந்த மார்ச் மாதம் தங்கள் கூட்டமைப்புக்கு எதிராக வழக்குத் தொடர்ந்தனர். ஆனால் இதை விசாரித்த பெடரல் நீதிபதி வீராங்கனைகளுக்கு எதிராகவே தீர்ப்பளித்தார். மற்ற நாடுகளுக்கு எல்லாம் நாங்கள் முன்னோடி என மார்தட்டிக்கொள்ளும் அமெரிக்காவின் நிலை இதுதான்.

இதையடுத்து அமெரிக்கா வீராங்கனைகள் இந்த வழக்கை மேல்முறையீடு செய்தனர் என்பது வேறு கதை. கரோனா, லாக் டவுன் என இந்த நியூ நார்மலில் பல விளையாட்டு வாரியங்களும் தங்களது அணி வீரர், வீராங்கனைகளின் ஊதிய குறைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது.

இந்த சூழலில் பிரேசில் கால்பந்து சங்கம், தேசிய அணியில் ஆண்களுக்கு வழங்கப்படுவதைப் போல பெண்களுக்கும் சமமான ஊதியம் வழங்கப்படும் என அறிவித்துள்ளது. பரிசுத்தொகை மற்றும் ஊதியம் ஆண்களுக்கும் பெண்களுக்கும் சமமாகவே வழங்கப்படும். அதனால் இனி வீராங்கனைகளும் வீரர்கள் பெரும் ஊதியத்தை பெறுவார்கள் என்கிறார் பிரேசில் கால்பந்து சங்கத்தின் தலைவர் ரோஜேரியோ கோபாக்லோ‌.

மேலும் இந்த முடிவை கடந்த மார்ச் மாதமே பிரேசில் கால்பந்து அணியின் பயிற்சியாளர் தெரிவிக்கப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார். சர்வதேச மகளிர் அணிகளின் தர வரிசை பட்டியலில் பிரேசில் அணி எட்டாவது இடத்தில் உள்ளது.

பிரேசில் சங்கத்தின் இந்த முடிவு அனைவரைது புருவத்தையும் உயரச் செய்துள்ளது. தற்போது பிரேசிலில் தொடர்ந்து இங்கிலாந்து சங்கமும் வீரர், வீராங்கனைகளுக்கு சம ஊதியம் வழங்க முன்வந்துள்ளதாக அறிவித்துள்ளது. ஆனால் இந்த ஆண்டு ஜனவரியில் இருந்தே தாங்கள் இதை நடைமுறைப்படுத்திவருவதாக தெரிவித்துள்ளது.

இவர்களுக்கு முன்னதாக ஆஸ்திரேலியா, நார்வே, நியூசிலாந்து ஆகிய சங்கங்கள் ஆண்களுக்கும் பெண்களுக்கும் சம ஊதியத்தை வழங்கி வருகிறது குறிப்பிடத்தக்கது.

Stay Connected

16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe

Must Read

“வெற்றிவேல்., வீரவேல்”- மோடி., “ஜல்லிக்கட்டு கதாநாயகன் மோடி”- ஓபிஎஸ்!

தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகிற 6 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான பிரச்சாரத்தில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். தாராபுரம் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் எல்.முருகன் மற்றும் கூட்டணி...

நதியில் பதுக்கிய ஆதாரங்கள் மீட்பு: முகேஷ் அம்பானி மிரட்டல் வழக்கில் அடுத்தடுத்து திருப்பங்கள்!

முகேஷ் அம்பானி வீடு அருகே வெடி பொருட்களுடன் கார் நிறுத்தப்பட்ட வழக்கில், அடுத்தடுத்து பல திருப்பங்கள் நிகழ்ந்து வருகின்றன. மும்பையில் உள்ள பிரபல தொழிலதிபர் மற்றும் ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி வீட்டின்...

சூடுபிடிக்கும் வேட்பு மனு தாக்கல்: வாக்குப்பதிவு நாளன்று விடுமுறையா?

தமிழக சட்டப் பேரவைக்கு வரும் ஏப்ரல் 6ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து, கடந்த 12ம் தேதி முதல் வேட்புமனு தாக்கல் நடைபெற்று வருகிறது. முதல் நாளில் தேர்தல் மன்னன் பத்மநாபன், துணை...

வெற்றி நடை போடுமா தமிழகம்? – அதிமுக கூட்டணியின் பலம் என்ன? பலவீனம் என்ன?

வெற்றி நடை போடுமா தமிழகம்? – அதிமுக கூட்டணியின் பலம் என்ன? பலவீனம் என்ன? தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் 6ம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தலில் ஹாட்ரிக் வெற்றி பெற வேண்டும் என...

Related News

மண்டைக்குள் ஓடிக் கொண்டே இருக்கும் “எஞ்சாய் எஞ்சாமி” பாடல்: சிந்தைனை, பிரமிப்பு, புல்லரிப்பு!

கடந்த காலத்துக்கு சென்று ஒரு அறிவை திருட வேண்டும் என்றால் அதில் இதுவும் ஒரு விஷயமாக இருக்கும். அந்த அளவிற்கு இந்த பாடலில் வீடியோவும், இசையும், வரியும் அமைந்துள்ளது என்றே கூறலாம். சமீப...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here