Home விளையாட்டு கிரிக்கெட் சிஎஸ்கே வெற்றி; தல தோனியின் 100வது வெற்றி!

சிஎஸ்கே வெற்றி; தல தோனியின் 100வது வெற்றி!

அபுதாபியில் இன்று நடைபெற்ற நட சீசனுக்கான முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை அணியை வீழ்த்தியது.
ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்த ஐபிஎல் தொடரின் 13வது சீசன் இன்று ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்கியது. அபுதாபியில் நடைபெற்ற முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொண்டது.  437 நாட்களுக்கு பிறகு தல தோனி கிரிக்கெட் மைதானத்தில் களம் இறங்கியதால் அவரது ஆட்டத்தின் மீதான எதிர்பார்ப்பு பல மடங்கு அதிகரித்தது.
இதைத்தொடர்ந்து டாஸ் வென்ற அணியின் சிஎஸ்கே கேப்டன் தோனி
முதலில் பந்து வீச தீர்மானித்தார். சிஎஸ்கே அணியில் வாட்சன், டூப்ளஸிஸ், சாம் கரன், லுங்கி இங்கிடி ஆகிய ஓவர்சீஸ் வீரர்கள் இடம்பிடித்தனர். அதான் எனக்கு பதிலாக முரளி விஜய்யும் ஹர்பஜன் சிங்கிற்கு பதிலாக பியூஷ் சாவ்லாவும் அணியில் தேர்வாகினர்.
இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த மும்பை அணியில் சவுரப் திவாரி (42), டி காக் (30) ஆகியோரை தவிர மற்ற வீரர்கள் அடுத்தடுத்து  ஆட்டமிழந்தனர். இதனால் மும்பை அணி 20 ஓவர்களில் ஒன்பது விக்கெட்களை இழந்து 162 ரன்கள் எடுத்தது.
சென்னை அணியில் லுங்கி இங்கிடி 3 விக்கெட்டுகளும் தீபக் சஹார், ஜடேஜா   தலா 2 விக்கெட்டுகளும், சாம் கரன், பியூஷ் சாவ்லா ஆகியோர்  தலா ஒரு விக்கெட்டும் எடுத்தனர்.
இதைத்தொடர்ந்து 163 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய சென்னை அணிக்கு தொடக்கமே மோசமாக அமைந்தது.  தொடக்க வீரரான வாட்சன் முரளி விஜய் ஆகியோர் அடுத்தடுத்து பெவிலியன் திரும்ப சென்னை அணி 2 ஓவர்களின் முடிவில் 6 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்தது. இந்த இக்கட்டான நிலையில் அம்பத்தி ராயுடு, டூப்ளஸிஸ் ஜோடி சேர்ந்தனர்.
Csk won mi ipl 20
ஒரு பக்கம் டு பிளசிஸ் சிங்கிள் அடித்தும், மறுபக்கம் ராயுடு பவுண்டரி அடித்தும் அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இந்த ஜோடி 115 ரன்கள் சேர்த்த நிலையில்  ராயுடு 48 பந்துகளில் 71 ரன்களில் ஆட்டமிழந்தார்.  அதில் 6 பவுண்டரிகள் 3 சிக்சர்கள் அங்கும். ஆட்டத்தின் கேம் சேஞ்சிங் இன்னிங்ஸாக இது அமைந்தது.
ராயுடுவை தொடர்ந்து வந்த ஜடேஜாவும் 10 ரன்களில் அவுட்டாக 17.1 ஓவர்களில் 134 ரன்களுக்கு நான்கு விக்கெட்டுகளை இழந்தது. அணியின் வெற்றிக்கு 17 பந்துகளில் 29 ரன்கள் எடுக்க வேண்டிய நிலையில் அனைவரும் தோனி களமிறங்குவார் என எதிர்பார்த்தனர். ஆனால் சாம் கரன் களமிறங்கி 5 பந்துகளில் 2 சிக்ஸர் ஒரு பவுண்டரி என  18 ரன்களை சேர்த்து ஆட்டமிழந்தார். இதனால்  10 பந்துகளில் 10 ரன்கள் மட்டுமே எடுக்க வேண்டிய நிலை அமைந்தது.
இந்த தருணத்தில் களமிறங்கிய தோனி முதல் பந்திலேயே அவுட் என அம்பயர் அவுட் என கையை உயர்த்த, மறுகணமே தோனியும் கையை உயர்த்தி ரிவ்யூ கேட்டார். ரீவ்யூவில் நாட் அவுட் என தெரிவிக்கப்பட்டது. பின்னர் கடைசி ஓவரில் டூபிளசிஸ் இரண்டு பவுண்டரி அடித்து மேட்சை ஃபினிஷ் செய்தார். இதனால் சென்னை அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை அணியை வீழ்த்தியது. இந்த வெற்றியின் மூலம் சென்னை அணி மும்பை அணியுடனான 5 தொடர் தோல்விக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது. சென்னை அணியின் கேப்டனாக தல தோனி சந்திக்கும் 100வது வெற்றி இதுவாகும்.
தனது அதிரடியான ஆட்டத்தால் மும்பை இடம் இருந்து சென்னைக்கு ஆட்டத்தை மாற்றிய ராய்டு ஆட்டநாயகன் விருதை வென்றார்

Stay Connected

16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe

Must Read

“வெற்றிவேல்., வீரவேல்”- மோடி., “ஜல்லிக்கட்டு கதாநாயகன் மோடி”- ஓபிஎஸ்!

தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகிற 6 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான பிரச்சாரத்தில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். தாராபுரம் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் எல்.முருகன் மற்றும் கூட்டணி...

நதியில் பதுக்கிய ஆதாரங்கள் மீட்பு: முகேஷ் அம்பானி மிரட்டல் வழக்கில் அடுத்தடுத்து திருப்பங்கள்!

முகேஷ் அம்பானி வீடு அருகே வெடி பொருட்களுடன் கார் நிறுத்தப்பட்ட வழக்கில், அடுத்தடுத்து பல திருப்பங்கள் நிகழ்ந்து வருகின்றன. மும்பையில் உள்ள பிரபல தொழிலதிபர் மற்றும் ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி வீட்டின்...

சூடுபிடிக்கும் வேட்பு மனு தாக்கல்: வாக்குப்பதிவு நாளன்று விடுமுறையா?

தமிழக சட்டப் பேரவைக்கு வரும் ஏப்ரல் 6ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து, கடந்த 12ம் தேதி முதல் வேட்புமனு தாக்கல் நடைபெற்று வருகிறது. முதல் நாளில் தேர்தல் மன்னன் பத்மநாபன், துணை...

வெற்றி நடை போடுமா தமிழகம்? – அதிமுக கூட்டணியின் பலம் என்ன? பலவீனம் என்ன?

வெற்றி நடை போடுமா தமிழகம்? – அதிமுக கூட்டணியின் பலம் என்ன? பலவீனம் என்ன? தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் 6ம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தலில் ஹாட்ரிக் வெற்றி பெற வேண்டும் என...

Related News

மண்டைக்குள் ஓடிக் கொண்டே இருக்கும் “எஞ்சாய் எஞ்சாமி” பாடல்: சிந்தைனை, பிரமிப்பு, புல்லரிப்பு!

கடந்த காலத்துக்கு சென்று ஒரு அறிவை திருட வேண்டும் என்றால் அதில் இதுவும் ஒரு விஷயமாக இருக்கும். அந்த அளவிற்கு இந்த பாடலில் வீடியோவும், இசையும், வரியும் அமைந்துள்ளது என்றே கூறலாம். சமீப...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here