Home விளையாட்டு கிரிக்கெட் கம்பேக்னா இப்படி இருக்கனும்; ஓப்பனிங்கிலேயே பஞ்சாப்பை அழவைத்த சென்னை சூப்பர் கிங்ஸ்

கம்பேக்னா இப்படி இருக்கனும்; ஓப்பனிங்கிலேயே பஞ்சாப்பை அழவைத்த சென்னை சூப்பர் கிங்ஸ்

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை 10 விக்கெட்டுகள் வீழ்த்தி மூன்று தொடர் தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ்.

ஐபிஎல் புள்ளிகள் பட்டியலில் கடைசி இரண்டு இடத்தில் இருந்த சென்னை சூப்பர் கிங்ஸ்– கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதின. சென்னை அணி ஹாட்ரிக் தோல்விகளை சந்தித்ததால் இப்போட்டியில் வெற்றிபெற நிலைக்கு தள்ளப்பட்டது. அணியில் எவ்வித மாற்றமும் இல்லாமல் கடந்த போட்டியில் விளையாடிய அதே 11 வீரர்களுடன் தோனி களமிறங்கியது அனைவருக்கும் ஆச்சரியமாக இருந்தது.

துபாயில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி கேப்டன் கே.எல். ராகுலின் பொறுப்பான அரைசதத்தால் 20 ஓவர்களில் நான்கு விக்கெட்டுகள் இழப்பிற்கு 174 ரன்களை குவித்தது. கே.எல்.ராகுல் 52 பந்துகளில் ஏழு பவுண்டரி, ஒரு சிக்சர் உட்பட 63 ரன்களில் ஆட்டமிழந்தார். சென்னை அணி தரப்பில் ஷர்துல் தாகூர் இரண்டு விக்கெட்டும், ஜடேஜா, பியூஸ் சாவ்லா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் எடுத்தனர்.

இதைத்தொடர்ந்து வாட்சன், டூப்ளசிஸ் சென்னை அணியின் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இதுவரை சிஎஸ்கே பவர்பிளே ஓவர்களில் விக்கெட்டுகளை இழந்து வந்த நிலையில் இன்று விக்கெட் இழப்பின்றி 60 ரன்களை சேர்த்து அதகளப்படுத்தினர். வாட்சன், டூப்ளசிஸ் இருவரும் போட்டிப்போட்டுக் கொண்டு சிறப்பாக ஆடினர். லூஸ் பந்துகளையெல்லாம் பவுண்டரி அடித்தும் மற்ற பந்துகளில் சிங்கிள் ரொடேட் செய்தும் அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.

இதனால் சென்னை அணி 10 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 101 ரன்களை எடுத்திருந்தது. பின் 11ஆவது ஓவரில் வாட்சன், டூப்ளசிஸ் இருவரும் அடுத்தடுத்து தங்களது அரைசதத்தை பூர்த்தி செய்தனர். இந்த இணையை பிரிக்க முடியாமல் பஞ்சாப் பவுலர்கள் திணறினர். தொடக்கத்தில் இருந்தே அபாரமாக ஆடிய இந்த ஜோடி ‌17.4 ஓவர்களில் 181 ரன்களை எட்டி இப்போட்டியில் 10 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் அணியை வீழ்த்தியது. இதன் மூலம் தொடர்ந்து சந்தித்த மூன்று தொடர் தோல்விகளுக்கு மட்டுமில்லாமல் விமர்சனங்களுக்கும் முற்றுப்புள்ளி வைத்துள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. மேலும் புள்ளிகள் பட்டியலில் ஆறாவது இடத்திற்கும் முன்னேறியுள்ளது.

வாட்சன் 53 பந்துகளில் 11 பவுண்டரி, மூன்று சிக்சர் என 83 ரன்களுடனும், டூப்ளசிஸ் 53 பந்துகளில் 11 பவுண்டரி, ஒரு சிக்சர் என 87 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.கடந்த நான்கு போட்டிகளில் சொதப்பிய சொதப்பிய வாட்சன் இம்முறை சிறப்பாக ஆடுவேன் என தனது ட்விட்டர் பக்கத்தில் போட்டி தொடங்குவதற்கு முன் தெரித்திவிருந்தார். அதற்கு ஏற்றவாறே அவர் பேட்டிங் செய்து அவர் ஃபார்முக்கு வந்ததுமட்டுமில்லாமல் சென்னை அணியையும் வெற்றி பாதைக்கு கொண்டு வந்துள்ளார்.

181 ரன்களை சேர்த்து 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதன் மூலம், சேஸிங்கில் முதல் விக்கெட்டை இழக்காமல் அதிக ரன்கள் குவித்த ஜோடிகளின் பட்டியலில் வாட்சன்- டூப்ளசிஸ் இணை இரண்டாவது இடத்தைப் பிடித்து சாதனை படைத்துள்ளது. இதுமட்டுமின்றி சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஓப்பனிங்கில் அதிக ரன்களை சேர்த்த ஜோடி என்ற சாதனையையும் இவர்கள் படைத்துள்ளனர்.

ஓப்பனிங்கிலேயே வெற்றி பெற்று அசத்திய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஆட்டத்தைக் கண்ட ரசிகர்கள், கம்பேக் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும், நாங்க திரும்ப வந்துட்டேனு சொல்லு என சமூக வலைதளங்களில் ஸ்டேட்டஸ்களை பறகக்விடுகின்றனர்.

Stay Connected

16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe

Must Read

“வெற்றிவேல்., வீரவேல்”- மோடி., “ஜல்லிக்கட்டு கதாநாயகன் மோடி”- ஓபிஎஸ்!

தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகிற 6 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான பிரச்சாரத்தில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். தாராபுரம் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் எல்.முருகன் மற்றும் கூட்டணி...

நதியில் பதுக்கிய ஆதாரங்கள் மீட்பு: முகேஷ் அம்பானி மிரட்டல் வழக்கில் அடுத்தடுத்து திருப்பங்கள்!

முகேஷ் அம்பானி வீடு அருகே வெடி பொருட்களுடன் கார் நிறுத்தப்பட்ட வழக்கில், அடுத்தடுத்து பல திருப்பங்கள் நிகழ்ந்து வருகின்றன. மும்பையில் உள்ள பிரபல தொழிலதிபர் மற்றும் ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி வீட்டின்...

சூடுபிடிக்கும் வேட்பு மனு தாக்கல்: வாக்குப்பதிவு நாளன்று விடுமுறையா?

தமிழக சட்டப் பேரவைக்கு வரும் ஏப்ரல் 6ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து, கடந்த 12ம் தேதி முதல் வேட்புமனு தாக்கல் நடைபெற்று வருகிறது. முதல் நாளில் தேர்தல் மன்னன் பத்மநாபன், துணை...

வெற்றி நடை போடுமா தமிழகம்? – அதிமுக கூட்டணியின் பலம் என்ன? பலவீனம் என்ன?

வெற்றி நடை போடுமா தமிழகம்? – அதிமுக கூட்டணியின் பலம் என்ன? பலவீனம் என்ன? தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் 6ம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தலில் ஹாட்ரிக் வெற்றி பெற வேண்டும் என...

Related News

மண்டைக்குள் ஓடிக் கொண்டே இருக்கும் “எஞ்சாய் எஞ்சாமி” பாடல்: சிந்தைனை, பிரமிப்பு, புல்லரிப்பு!

கடந்த காலத்துக்கு சென்று ஒரு அறிவை திருட வேண்டும் என்றால் அதில் இதுவும் ஒரு விஷயமாக இருக்கும். அந்த அளவிற்கு இந்த பாடலில் வீடியோவும், இசையும், வரியும் அமைந்துள்ளது என்றே கூறலாம். சமீப...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here