Home விளையாட்டு கிரிக்கெட் கைக்கு எட்டிய வெற்றியை கைவிட்ட ராஜஸ்தான்!

கைக்கு எட்டிய வெற்றியை கைவிட்ட ராஜஸ்தான்!

துபாயில் நடைபெற்ற ஐபிஎல் தொடரின் 30ஆவது லீக் போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வீழ்த்தியது.

ஐபிஎல் தொடரின் 13ஆவது சீசன் ஐக்கிய அரபு அமீரகத்தில் பல்வேறு திருப்பங்களுடன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில், துபாயில் நடைபெற்ற 30ஆவது லீக் போட்டியில் இரண்டாம் இடத்தில் இருந்த டெல்லி கேப்பிடல்ஸ் அணி, ஏழாவது இடத்தில் இருந்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்கொண்டது.

இதைத்தொடர்ந்து இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி ஏழு விக்கெட்களை இழந்து 161 ரன்களை எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக ஷிகர் தவான் 57, ஸ்ரேயாஸ் ஐயர் 53 ரன்கள் எடுத்தனர். ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தரப்பில் ஆர்ச்சர் மூன்று விக்கெட்டுகளும், ஜெய்தேவ் உனாத்கட் இரண்டு விக்கெட்டுகளும், கார்த்திக் தியாகி, ஸ்ரேயாஸ் கோபால் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை எடுத்தனர்.

இதைத்தொடர்ந்து களமிறங்கிய ராஜஸ்தான் அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தாலும் ஒருபக்கம் ரன்களும் அடித்தது. சிறப்பாக ஆடிய பென் ஸ்டோக்ஸ் 41 ரன்களில் ஆட்டமிழந்தார். ஒருகட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 15 ஓவரில் ஐந்து விக்கெட்களை இழந்து 123 ரன்களை எடுத்தது. இதனால் கடைசி ஐந்து ஓவரில் 39 ரன்கள் தேவைப்பட்டன. களத்தில் உத்தப்பாவும், ராகுல் தேவாட்டியாவும் இருந்ததால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெற்றி பெற வாய்ப்புகள் எளிதாக இருந்தது.

இந்த நிலையில் ராஜஸ்தான் அணி ரன்களை அடிக்காதவாறு டெல்லி அணி அபாரமாக பந்துவீசியது. ராஜஸ்தான் அணி 16 ஆவது ஓவரில் இரண்டு ரன்களும், 17ஆவது ஓவரில் எட்டு ரன்களும் எடுத்தது. இதையடுத்து ‌18ஆவது ஓவரில் உத்தப்பாவும், 19ஆவது ஓவரில் ஆர்ச்சரும் வெளியேறினர். இதனால் கடைசி ஓவரில் 23 ரன்களும் தேவைப்பட்ட நிலையில் ராகுல் தேவாட்டியா – ஸ்ரேயாஸ் கோபால் எட்டு ரன்களை‌ மட்டுமே எடுத்தனர். இறுதியில் டெல்லி கேபிட்டல்ஸ் அணி 20 ஓவரில் எட்டு விக்கெட்களை இழந்து 148 ரன்கள் மட்டுமே எடுத்தது.

இதனால் டெல்லி கேப்பிடல்ஸ் அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. டெல்லி அணியில் துஷார் தேஷ்பாண்டே, அன்ரிச் நார்க்யா ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளும், அஸ்வின், ரபாடா, அக்ஷர் படேல் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை எடுத்தனர். இந்த வெற்றியின் மூலம் டெல்லி அணி 12 புள்ளிகளுடன் தற்போது புள்ளிகள் பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறியுள்ளது.

Stay Connected

16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe

Must Read

“தகவல் போதவில்லை…”: கோவாக்சின் தடுப்பூசிக்கு அமெரிக்கா அனுமதி மறுப்பு!

கோவாக்சின் தடுப்பூசிக்கு அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் அவசர கால பயன்பாட்டு ஒப்புதல் அளிக்க மறுப்பு தெரிவித்துள்ளது. கொரோனா தொற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்ள உலகம் முழுவதும் மக்களுக்கு போர்க்கால அடிப்படையில் தடுப்பூசி செலுத்தப்பட்டு...

ஜகமே தந்திரம் கதை இதுதானா?- மதுரை சுருளி Vs லண்டன் தாதா!

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனிஷ் நடிப்பில் ஜூன் 18 ஆம் தேதி வெளியாகும் படம் ஜகமே தந்திரம். இந்த படம் நேரடியாக நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது. ஜகமே தந்திரம் திரைப்படத்தை 17...

கொரோனாவின் ஆட்டம்: சாய்னாவின் ஒலிம்பிக் கனவு பறிபோனது!

கொரோனா பரவல் காரணமாக இந்திய நட்சத்திர வீராங்கனை சாய்னா நேவாலின் டோக்கியோ ஒலிம்பிக் கனவு முற்றிலும் தகர்ந்துள்ளது. 32வது ஒலிம்பிக் போட்டி ஜூலை 23ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 8ம் தேதி வரை ஜப்பான்...

ஒன்றிய அரசா? மத்திய அரசா?: அண்ணா, கருணாநிதியால் முடியாததை செய்து காட்டுவாரா ஸ்டாலின்?

மத்திய அரசை ஒன்றிய அரசு என்று திமுகவினர் குறிப்பிடுவது விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு மு.க.ஸ்டாலின் பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். திராவிடம் மற்றும் சமூக நீதி கொள்கைகளின் அடித்தளத்துடன்,...

Related News

வரிசைக் கட்டும் ஓடிடி வெளியீடு: முக்கிய நடிகர்கள் படங்கள் ஓடிடி வெளியீட்டு தேதி இதோ!

வரிசைக் கட்டும் ஓடிடி வெளியீடு: முக்கிய நடிகர்கள் படங்கள் ஓடிடி வெளியீட்டு தேதி இதோ! கொரோனா பரவல் காரணமாக திரையரங்குகள் மூடும் நிலை ஏற்பட்டுள்ளது. திரையரங்குகள் திறக்கப்பட்டாலும் மக்கள் திரையரங்கு சென்று படம் பார்ப்பதில்...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here