பேட்டிங் பவுலிங் இரண்டிலும் சிறப்பாக செயல்பட்ட டெல்லி கேப்பிடல் சிட்டி 44 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்தியுள்ளது.
துபாயில் நடைபெற்ற ஐபிஎல் தொடரின் ஏழாவது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி டெல்லி கேப்பிடல்ஸ் அணியை எதிர்கொண்டது. முதல் போட்டியில் வெற்றி பெற்றதைடுத்த ராஜஸ்தானிடம் தோல்வி அடைந்த சிஎஸ்கே இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து இப்போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் தோனி முதலில் பந்து வீச தீர்மானித்தார். சென்னை அணியில் லுங்கி இங்கிடிக்கு பதிலாக ஜோஷ் ஹேசில்வுட் தேர்வு செய்யப்பட்டார். மறுமுனையில் டெல்லி அணியும் அஸ்வின் ரோகித் சர்மாவுக்கு பதிலாக ஆபீஸ் கான் மற்றும் அமித் மிஸ்ரா இடம் பெற்றனர்.
இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணியின் தொடக்க வீரர்களாக ஷிகர் தவன் பிரித்வி ஷா ஆகியோர் களமிறங்கினர். ஒரு பக்கம் தவான் பொறுப்பான ஆட்டத்தையும் மறுபக்கம் ப்ரித்வி ஷா அதிரடி ஆட்டத்தையும் வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 94 ரன்கள் சேர்த்த நிலையில் தவான் 35 ரன்களில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து வந்த ரிஷப் பந்து, ப்ரித்வி ஷா உடன் இணைந்து அதிரடி காட்டினார். தொடர்ந்து அதிரடியாக விளையாடி வந்த பிரித்வி ஷா 64 ரன்களில் ஆட்டமிழந்தார். அதில் 9 பவுண்டரிகள் ஒரு சிக்சர் அடங்கும். அதன்பின் ஸ்ரேயாஸ் ஐயர் 26 ரன்களில் ஆட்டமிழக்க டெல்லி அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 175 ரன்களை எடுத்தது. ரிஷப் பந்த் 37 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். சென்னை அணி தரப்பில் பியூஸ் சாவ்லா 2 விக்கெட்டுகளும் சாம் கரன் ஒரு விக்கெட்டையும் எடுத்தனர்.
இதைத்தொடர்ந்து 176 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் டெல்லி கேப்பிடல் சனியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் சீரான இடைவெளியில் தங்களது விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். இறுதியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 131 ரன்களை மட்டுமே எடுத்தது சென்னை அணியில் அதிகபட்சமாக டுப்ளஸ்ஸிஸ் 43 ரன்களை எடுத்தார்.
அவரை தவிர வேறு எந்த வீரர்களும் பேட்டிங்கில் சோபிக்கவில்லை. டெல்லி அணி தரப்பில் ரபாடா மூன்று விக்கெட்களையும், அன்றிட்ஸ் நோக்கியா 2 விக்கெட்களையும் அக்ஷர் பட்டேல் ஒரு விக்கெட்டையும் எடுத்தனர். இதனால் டெல்லி கேப்பிடல்ஸ் அணி இப்போட்டியில் 44 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்தியது. இதன் மூலம் தனது இரண்டாவது போட்டியிலும் வெற்றி பெற்ற டெல்லி அணி 4 புள்ளிகளுடன் தற்போது புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. மறுமுனையில் சென்னை அணி ஐந்தாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது