Home விளையாட்டு கிரிக்கெட் இதுக்கு மேல அந்த ராஜஸ்தான் டீம கடவுள்தான் காப்பாத்தனும்!

இதுக்கு மேல அந்த ராஜஸ்தான் டீம கடவுள்தான் காப்பாத்தனும்!

மூன்று போட்டிகளில் தொடர் தோல்வியடைந்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இன்று டெல்லி கேபிட்டல்ஸ் அணிக்கு எதிராக நான்காவது முறையாக தோல்வியடைந்துள்ளது.

ஷார்ஜாவில் நடைபெற்ற ஐபிஎல் தொடரின் 23ஆவது லீக் போட்டியில் புள்ளி பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருந்த டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி, ஏழாவது இடத்தில் இருந்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்கொண்டது. தொடர்ந்து மூன்று போட்டிகளில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தோல்வி அடைந்ததால் இப்போட்டியில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டது.

இதைத் தொடர்ந்து இப்போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி, ஷார்ஜா மைதானம் சிறியது என்பதால் சேவிங் செய்ய முடிவு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களான பிரித்வி ஷா (19), தவான் (5), ஸ்ரேயாயஸ் ஐயர் (22), ரிஷப் பண்ட் (5) ஆகியோர் அடுத்தடுத்து பெவிலியன் திரும்பினர். இருப்பினும் ஹெட்மயர், ஸ்டாய்னிஸ் ஆகியோர் அதிரடியால் டெல்லி அணி எட்டு விக்கெட்களை இழந்து 188 ரன்களை குவித்தது.

ஹெட்மயர் 24 பந்துகளில் ஒரு பவுண்டரி, ஐந்து சிக்சர் என 45 ரன்களிலும், ஸ்டாய்னிஸ் 30 பந்துகளில் 5 சிக்சர்‌ உட்பட. 39 ரன்களில் ஆட்டமிழந்தனர். ராஜஸ்தான் அணி தரப்பில் ஆர்ச்சர் மூன்று, ராகுல் தேவாட்டியா, ஆண்ட்ரூ டை, கார்த்திக் தியாகி ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை எடுத்தனர். ஷார்ஜா மைதானத்தில் 200க்கும் குறைவான ரன்களை கட்டுப்படுத்தி அசத்தியதால் ராஜஸ்தான் அணி இப்போட்டியில் வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் டெல்லி அணியில் துல்லியமான ஸ்பின் + பவுலிங் காம்போவில் அந்த அணியின் விக்கெட்டுகள் சீட்டுக் கட்டாக சரிந்தன. அணியில் ராகுல் தேவாட்டியா 38 ரன்களிலும் , யஷஸ்வி ஜெய்ஸ்வால் 34 ரன்களிலும் அவுட்டாகினர். இவர்களைத் தவிர பட்லர், ஸ்டீவ் ஸ்மித், சஞ்சு சாம்சன், லொம்ரோர் உள்ளிட்ட மற்ற வீரர்கள் வந்த வேகத்திலேயே நடையைக் கட்டினர்.

இறுதியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 19.4 ஓவர்களில் 138 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனதால் டெல்லி கேப்பிடல்ஸ் அணி 46 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. டெல்லி அணியில் ராபாடா மூன்று, அஸ்வின், ஸ்டாய்னிஸ் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.

இந்த வெற்றியின் மூலம் டெல்லி அணி 10 புள்ளிகளுடன் புள்ளிகள் பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறியுள்ளது. அதேசமயம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தொடர்ந்து தோற்கும் நான்காவது போட்டி இதுவாகும். விளையாடிய ஆறு போட்டிகளில் இரண்டு வெற்றிகளை மட்டுமே பதிவு செய்து நான்கு புள்ளிகளுடன் தொடர்ந்து ஏழாவது இடத்தில் உள்ளது. குவாரண்டைனில் இருந்து பென் ஸ்டோக்ஸ் வந்தால் மட்டுமே ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை காப்பாற்ற முடியும்.

Stay Connected

16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe

Must Read

“தகவல் போதவில்லை…”: கோவாக்சின் தடுப்பூசிக்கு அமெரிக்கா அனுமதி மறுப்பு!

கோவாக்சின் தடுப்பூசிக்கு அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் அவசர கால பயன்பாட்டு ஒப்புதல் அளிக்க மறுப்பு தெரிவித்துள்ளது. கொரோனா தொற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்ள உலகம் முழுவதும் மக்களுக்கு போர்க்கால அடிப்படையில் தடுப்பூசி செலுத்தப்பட்டு...

ஜகமே தந்திரம் கதை இதுதானா?- மதுரை சுருளி Vs லண்டன் தாதா!

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனிஷ் நடிப்பில் ஜூன் 18 ஆம் தேதி வெளியாகும் படம் ஜகமே தந்திரம். இந்த படம் நேரடியாக நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது. ஜகமே தந்திரம் திரைப்படத்தை 17...

கொரோனாவின் ஆட்டம்: சாய்னாவின் ஒலிம்பிக் கனவு பறிபோனது!

கொரோனா பரவல் காரணமாக இந்திய நட்சத்திர வீராங்கனை சாய்னா நேவாலின் டோக்கியோ ஒலிம்பிக் கனவு முற்றிலும் தகர்ந்துள்ளது. 32வது ஒலிம்பிக் போட்டி ஜூலை 23ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 8ம் தேதி வரை ஜப்பான்...

ஒன்றிய அரசா? மத்திய அரசா?: அண்ணா, கருணாநிதியால் முடியாததை செய்து காட்டுவாரா ஸ்டாலின்?

மத்திய அரசை ஒன்றிய அரசு என்று திமுகவினர் குறிப்பிடுவது விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு மு.க.ஸ்டாலின் பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். திராவிடம் மற்றும் சமூக நீதி கொள்கைகளின் அடித்தளத்துடன்,...

Related News

வரிசைக் கட்டும் ஓடிடி வெளியீடு: முக்கிய நடிகர்கள் படங்கள் ஓடிடி வெளியீட்டு தேதி இதோ!

வரிசைக் கட்டும் ஓடிடி வெளியீடு: முக்கிய நடிகர்கள் படங்கள் ஓடிடி வெளியீட்டு தேதி இதோ! கொரோனா பரவல் காரணமாக திரையரங்குகள் மூடும் நிலை ஏற்பட்டுள்ளது. திரையரங்குகள் திறக்கப்பட்டாலும் மக்கள் திரையரங்கு சென்று படம் பார்ப்பதில்...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here