Home விளையாட்டு கிரிக்கெட் ஐந்தாவது கோப்பை; வரலாற்றை மாற்றி அமைத்த மும்பை!

ஐந்தாவது கோப்பை; வரலாற்றை மாற்றி அமைத்த மும்பை!

2013,2015,2017,2019 என ஒற்றை இலக்கு ஆண்டுகளில் மட்டுமே ஐபிஎல் கோப்பை வென்ற அணி என்ற வரலாற்றை மும்பை இந்தியன்ஸ் அணி இம்முறை கோப்பை (2020ல்) வென்று மாற்றியுள்ளது.

டெல்லிக்கு எதிரான இறுதி போட்டியில் ஐந்து விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று ஐந்தாவது முறையாக ஐபிஎல் கோப்பை வென்று சரித்திர சாதனை படைத்துள்ளது மும்பை இந்தியன்ஸ் அணி!

ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்த இறுதிப்போட்டியில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணி, முதல் முறை இறுதிச் சுற்றுக்கு முன்னேறிய டெல்லி கேபிட்டல்ஸை எதிர்கொண்டது. குவாலிஃபையர் போட்டி உட்பட மூன்று போட்டிகளிலும் டெல்லி மும்மபையிடம் தோல்வி அடைந்துள்ளது. இதனால் மும்பை அணியின் ஆதிக்கம் தொடருமா அல்லது டெல்லி விஸ்வரூபம் எடுத்து சரித்திரம் படைக்குமா என என்ற எதிர்பார்ப்பு எழுந்தது.

துபாயில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற டெல்லி முதலில் பேட்டிங் செய்ய முடிவெடுத்தது. இதைத்தொடர்ந்து முதல் பந்திலேயே டெல்லி அணியின் தொடக்க வீரர் ஸ்டாய்னிஸை வெளியேற்றி மிரட்டினார் போல்ட். பின் மூன்றாவது ஓவரில் ரஹானேவும், நான்காவது ஓவரில் தவானும் அடுத்தடுத்து அவுட் ஆக டெல்லி 3.3 ஓவர்களில் 23 ரன்களுக்கு மூன்று விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

இந்த சூழலில் ரிஷப் பண்ட் – ஸ்ரேயாஸ் ஐயரின் பொறுப்பான ஆட்டத்தால் டெல்லி 156 ரன்களை எடுத்தது. தொடர் முழுவதும் சொதப்பினாலும் இறுதிப் போட்டியில் சிறப்பாக ஆடிய பண்ட் 38 பந்துகளில் நான்கு பவுண்டரி, இரண்டு சிக்சர் என 56 ரன்களில் ஆட்டமிழந்தார். ஸ்ரேயாஸ் ஐயர் 50 பந்துகளில் 65 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். டெல்லி அணியில் போல்ட் மூன்று விக்கெட்டுகளும், குல்டர் நைல் இரண்டு விக்கெட்டுகளும், ஜெயந்த் யாதவ் ஒரு விக்கெட்டை எடுத்தார்.

பின் மும்பை அணியில் தொடக்க வீரர்களாக கேப்டன் ரோகித் ஷர்மா – டி காக் இறங்கினர். ரோகித் சர்மாவுக்கு இது 200வது ஐபிஎல் போட்டியாகும். இந்த சீசனில் சொதப்பலாக ஆடிவந்த அவர் அந்த விமர்சனங்களுக்கு பதிலடி தரும் வகையிலும், இறுதிப்போட்டியில் கேப்டனாக முன்நின்று வழிநடத்த வேண்டும் என்ற எண்ணத்திலும் அதிரடியாக ஆடினார். அதுவும் அஸ்வின் வீசிய முதல் ஓவரிலேயே சிக்சர் அடித்து அமர்களப்படுத்தினார். பின் டி காக் டெல்லி பந்துவீச்சின் முதுகெலும்பான ரபாடா ஓவரில் 4,4,6,4 என 18 ரன்கள் சேர்த்தார்.

இந்த ஜோடி அதிரடி காட்ட ஐந்தாவது ஓவரில் ஸ்டாய்னிஸ் பந்துவீச்சில் டி காக் 20 ரன்களில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து வந்த சூர்யகுமார் யாதவ் அடுத்த இரு பந்துகளில் பவுண்டரி, சிக்சர் அடித்து டி காக் விக்கெட்டுக்கு பதிலடி தந்தார். இந்த ஜோடியின் அதிரடி ஆட்டத்தை பார்த்தால் போட்டி எப்போது முடியும் என்ற இருந்தது. 10.5 ஓவர்களில் அணியின் ஸ்கோர் 95 ரன்கள் அடைய ரோகித் ஷர்மா தவறால் சூர்யகுமார் யாதவ் தன் விக்கெட்டை தியாகம் செய்தார். அவரைத் தொடர்ந்து ஹிட்மேன் ரோகித் ஷர்மா பேக் டூ பேக் இரண்டு பவுண்டரிகளை விளாசி அரைசதம் அடித்தார்.

பின் இஷான் கிஷனும் அதிரடியாக ஆட கடைசி நான்கு ஓவர்களில் 20 ரன்கள் எடுக்க வேண்டிய நிலையில் ரோகித் ஷர்மா 68 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன் பின் வந்த பொல்லார்ட் இரண்டு பவுண்டரி உட்பட ஒன்பது விக்கெட்களில் அவுட் ஆக மும்பை அணிக்கு 17 பந்துகளில் 10 ரன்கள் தேவை. இறுதியில் மும்பை இந்தியன்ஸ் அணி 18.4 ஓவர்களில் ஐந்து விக்கெட்களை இழந்து 157 ரன்கள் இலக்கை எட்டி ஐந்தாவது முறையாக கோப்பை வென்று சரித்திர சாதனை படைத்துள்ளது‌ மும்பை இந்தியன்ஸ் அணி.

இதுமட்டுமின்றி 2013,2015,2017,2019 என ஒற்றை இலக்கு ஆண்டுகளில் மட்டுமே ஐபிஎல் கோப்பை வென்ற அணி என்ற வரலாற்றை மும்பை இந்தியன்ஸ் அணி இம்முறை கோப்பை (2020ல்) வென்று மாற்றியுள்ளது. இந்த சீசனிலும், ஐபிஎல்லில் அதிக கோப்பைகளை வென்றும் மும்பை இந்தியன்ஸ் செலுத்தும் ஆதிக்கத்தை பார்த்தால் பழைய ஆஸ்திரேலியா அணியாக தெரிகிறது.

Stay Connected

16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe

Must Read

“வெற்றிவேல்., வீரவேல்”- மோடி., “ஜல்லிக்கட்டு கதாநாயகன் மோடி”- ஓபிஎஸ்!

தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகிற 6 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான பிரச்சாரத்தில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். தாராபுரம் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் எல்.முருகன் மற்றும் கூட்டணி...

நதியில் பதுக்கிய ஆதாரங்கள் மீட்பு: முகேஷ் அம்பானி மிரட்டல் வழக்கில் அடுத்தடுத்து திருப்பங்கள்!

முகேஷ் அம்பானி வீடு அருகே வெடி பொருட்களுடன் கார் நிறுத்தப்பட்ட வழக்கில், அடுத்தடுத்து பல திருப்பங்கள் நிகழ்ந்து வருகின்றன. மும்பையில் உள்ள பிரபல தொழிலதிபர் மற்றும் ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி வீட்டின்...

சூடுபிடிக்கும் வேட்பு மனு தாக்கல்: வாக்குப்பதிவு நாளன்று விடுமுறையா?

தமிழக சட்டப் பேரவைக்கு வரும் ஏப்ரல் 6ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து, கடந்த 12ம் தேதி முதல் வேட்புமனு தாக்கல் நடைபெற்று வருகிறது. முதல் நாளில் தேர்தல் மன்னன் பத்மநாபன், துணை...

வெற்றி நடை போடுமா தமிழகம்? – அதிமுக கூட்டணியின் பலம் என்ன? பலவீனம் என்ன?

வெற்றி நடை போடுமா தமிழகம்? – அதிமுக கூட்டணியின் பலம் என்ன? பலவீனம் என்ன? தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் 6ம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தலில் ஹாட்ரிக் வெற்றி பெற வேண்டும் என...

Related News

மண்டைக்குள் ஓடிக் கொண்டே இருக்கும் “எஞ்சாய் எஞ்சாமி” பாடல்: சிந்தைனை, பிரமிப்பு, புல்லரிப்பு!

கடந்த காலத்துக்கு சென்று ஒரு அறிவை திருட வேண்டும் என்றால் அதில் இதுவும் ஒரு விஷயமாக இருக்கும். அந்த அளவிற்கு இந்த பாடலில் வீடியோவும், இசையும், வரியும் அமைந்துள்ளது என்றே கூறலாம். சமீப...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here