Home விளையாட்டு கிரிக்கெட் ஐந்துக்கு ஐந்து; பஞ்சாப் அட்டகாசமான வெற்றி!

ஐந்துக்கு ஐந்து; பஞ்சாப் அட்டகாசமான வெற்றி!

ஷார்ஜாவில் நடைபெற்ற 46ஆவது லீக் போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி எட்டு விக்கெட்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை வீழ்த்தி தொடர் ஐந்தாவது வெற்றியை பதிவு செய்துள்ளது.

நடப்பு ஐபிஎல் சீசன் 45 நாட்களாக நடைபெற்று வரும் நிலையில் இன்னும் ஒரு அணிக்கூட பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறவில்லை. மும்பை இந்தியன்ஸ், டெல்லி, பெங்களூரு ஆகிய அணிகள் தலா 11 போட்டிகளில் 14 புள்ளிகளுடன் முறையே முதல் மூன்று இடங்களில் உள்ளன.

இந்த நிலையில் 11 போட்டிகளில் 12 புள்ளிகளுடன் நான்காவது இடத்தில் இருந்த கொல்கத்தா அணி, 11 போட்டிகளில் 10 புள்ளிகளுடன் ஐந்தாவது இடத்தில் இருந்த பஞ்சாப்புடன் மோதியது. கொல்கத்தா அணி எஞ்சியுள்ள மூன்று போட்டிகளில் இரண்டில் வெற்றி பெற்றால் பிளே ஆஃப் உறுதி. மறுமுனையில் பஞ்சாப் அணி மூன்றிலும் வெற்றி பெற்றால் பிளே ஆஃப் உறுதி. ஒருவேளை இன்றைய போட்டியில் கொல்கத்தா வென்றால் கூட பஞ்சாப் அணியால் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற முடியும். ஆனால் அது மற்ற அணிகளின் போட்டிகளின் முடிவுகள் பொறுத்தே உள்ளது.

ஷார்ஜாவில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பந்துவீச்சை தீர்மானித்தது. முதலில் பேட்டிங் செய்த கேகேஆர்‌ அணிக்கு ஆரம்பமே சறுக்கலாக இருந்தது. தொடக்க வீரர் நிதீஷ் ரானா ரன் ஏதும் அடிக்காமல் மேக்ஸ்வெல் பந்துவீச்சில் முதல் ஓவரில் நடையைக் கட்டினார். அவரைத் தொடர்ந்து வந்த ராகுல் திரிபாதி ஏழு ரன்களிலும், தினேஷ் கார்த்திக் ரன் ஏதும் அடிக்காமலும் முகமது ஷமி பவுலிங்கிலும் அடுத்தடுத்து ஆட்டமிழக்க கேகேஆர் அணி இரண்டு ஓவர்களின் முடிவில் மூன்று விக்கெட்டுகளை இழந்து 10 ரன்கள் மட்டுமே எடுத்து தடுமாறியது.இந்த சூழலில் மோர்கனுடன் இணைந்த சுப்மன் கில் அதிரடியாக ஆடி தனது விக்கெட்டை டிஃபெண்ட் செய்துக்கொண்டார்.

மோர்கன் – கில் ஜோடி பஞ்சாப் பந்துவீச்சாளர்களை பவுண்டரிகளும் சிக்சர்களும் பறக்கவிட்டனர். இந்த ஜோடி 81 ரன்கள் சேர்த்த நிலையில் மோர்கன் 40 ரன்களில் ஆட்டமிழக்க கேகேஆர்‌ அணியின்‌ விக்கெட்டுகள் சீட்டுக் கட்டாக சரிந்தன. ஒருபக்கம் பொறுப்பாக ஆடி அரைசதம் விளாசிய சுப்மன் கில்லும் 19ஆவது ஓவரில் 57 ரன்களில் அவுட்டாக கொல்கத்தா 20 ஓவர்கள் முடிவில் ஒன்பது விக்கெட்களை இழந்து 149 ரன்களை மட்டுமே எடுத்தது. பஞ்சாப் அணி தரப்பில் முகமது ஷமி மூன்று, கிறிஸ் ஜோர்டான், ரவி பிஷ்னாய் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளும், முருகன் அஸ்வின், மேக்ஸ்வெல் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் எடுத்தனர்.

பின் களமிறங்கிய பஞ்சாப் அணி தொடக்கத்தில் இருந்தே சிறப்பாக ஆடியது. அணியின் ஸ்கோர் 47 ரன்கள் இருந்த நிலையில் கே.எல்.ராகுல் 28 ரன்களில் வருண் சக்கரவர்த்தி பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து வந்த கிறிஸ் கெயில் அதிரடி காட்ட மறுபக்கம் மந்தீப் சிங் தன்பங்கிற்கு தேவையில்லாத பந்துகளை பவுண்டரி அடித்து ஆங்கர் இன்னிங்ஸ் ஆடி 16ஆவது ஓவரில் அரைசதம் விளாசினார். ஷார்ஜாவில் வானவேடிக்கை காட்டிய கெயிலும் தனது 25ஆவது பந்தில் அரைசதம் கடந்தார். அணியின் வெற்றிக்கு மூன்று ரன்கள் தேவைப்பட்ட நிலையில் கெயில் 51 ரன்களில் ஆட்டமிழந்தாலும் பஞ்சாப் அணி 18.5 ஓவர்களில் 150 ரன்களை எட்டியது.

இதனால் பஞ்சாப் அணி எட்டு விக்கெட்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணியை வீழ்த்தி, கடந்த முறை கேகேஆர்‌ அணியிடம் அடைந்த தோல்விக்கு பழிவாங்கியுள்ளது. இந்த சீசனில் பஞ்சாப் அணிக்கு கிடைத்த தொடர் ஐந்தாவது வெற்றி இதுவாகும். இதனால் ஒருகட்டத்தில் புள்ளிகள் பட்டியலில் கடைசி இடத்தில் இருந்த பஞ்சாப் அணி தற்போது தொடர் ஐந்து வெற்றிகளால் படிப்படியாக 12 புள்ளிகளுடன் நான்காவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

Stay Connected

16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe

Must Read

“தகவல் போதவில்லை…”: கோவாக்சின் தடுப்பூசிக்கு அமெரிக்கா அனுமதி மறுப்பு!

கோவாக்சின் தடுப்பூசிக்கு அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் அவசர கால பயன்பாட்டு ஒப்புதல் அளிக்க மறுப்பு தெரிவித்துள்ளது. கொரோனா தொற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்ள உலகம் முழுவதும் மக்களுக்கு போர்க்கால அடிப்படையில் தடுப்பூசி செலுத்தப்பட்டு...

ஜகமே தந்திரம் கதை இதுதானா?- மதுரை சுருளி Vs லண்டன் தாதா!

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனிஷ் நடிப்பில் ஜூன் 18 ஆம் தேதி வெளியாகும் படம் ஜகமே தந்திரம். இந்த படம் நேரடியாக நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது. ஜகமே தந்திரம் திரைப்படத்தை 17...

கொரோனாவின் ஆட்டம்: சாய்னாவின் ஒலிம்பிக் கனவு பறிபோனது!

கொரோனா பரவல் காரணமாக இந்திய நட்சத்திர வீராங்கனை சாய்னா நேவாலின் டோக்கியோ ஒலிம்பிக் கனவு முற்றிலும் தகர்ந்துள்ளது. 32வது ஒலிம்பிக் போட்டி ஜூலை 23ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 8ம் தேதி வரை ஜப்பான்...

ஒன்றிய அரசா? மத்திய அரசா?: அண்ணா, கருணாநிதியால் முடியாததை செய்து காட்டுவாரா ஸ்டாலின்?

மத்திய அரசை ஒன்றிய அரசு என்று திமுகவினர் குறிப்பிடுவது விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு மு.க.ஸ்டாலின் பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். திராவிடம் மற்றும் சமூக நீதி கொள்கைகளின் அடித்தளத்துடன்,...

Related News

வரிசைக் கட்டும் ஓடிடி வெளியீடு: முக்கிய நடிகர்கள் படங்கள் ஓடிடி வெளியீட்டு தேதி இதோ!

வரிசைக் கட்டும் ஓடிடி வெளியீடு: முக்கிய நடிகர்கள் படங்கள் ஓடிடி வெளியீட்டு தேதி இதோ! கொரோனா பரவல் காரணமாக திரையரங்குகள் மூடும் நிலை ஏற்பட்டுள்ளது. திரையரங்குகள் திறக்கப்பட்டாலும் மக்கள் திரையரங்கு சென்று படம் பார்ப்பதில்...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here