Home விளையாட்டு கிரிக்கெட் சிறந்த நடுவர்கள் குழு பட்டியலை வெளியிட்ட ஐசிசி: இந்திய நடுவருக்கு கிடைத்த பெருமை- யார் தெரியுமா?

சிறந்த நடுவர்கள் குழு பட்டியலை வெளியிட்ட ஐசிசி: இந்திய நடுவருக்கு கிடைத்த பெருமை- யார் தெரியுமா?

ஒரு போட்டியில் போட்டியாளர்கள் எவ்வளவுதான் பிரபலமான அணிகளாக இருந்தாலும் அவர்களுக்கு நடுநிலை அறிவிப்பு என்பது பிரதான ஒன்று. நடுவர்கள் முடிவில் தான் அணியின் நியாயமான வெள்ளி தோல்வி அடங்கியிருக்கும். அப்படி கிரிக்கெட் போட்டியை பார்க்கையில் பெரும்பாலும் நாம் நடுவர்களை பொருட்படுத்துவதில்லை.

அதற்குகாரணம் நடுவர்கள் தேர்ந்தெடுப்பு குழுவின் அதீத திறமையே ஏனென்றால் அவர்கள் பல்வேறு விதிமுறைகளை பின்பற்ற நடுவர்களை தேர்ந்தெடுத்து அவர்களை எந்த விமர்சனங்களுக்கும் உட்படியாமல் தங்களது வேலையை மட்டும் நிருவிச் செல்வார்கள்.

கிரிக்கெட் நடுவர்களில் பெரும்பாலானோர் சந்தேகம் உள்ள விக்கெட்டுகளுக்கு மூன்றாம் அம்பைர்களிடம் கருத்து கேட்பார்கள். சில அனுபவம் வாய்ந்த நடுவர்கள் அதை உற்றுநோக்கி தங்களது முடிவை அறிவிப்பார்கள் அப்போது பேட்ஸ் மேன் சந்தேகமடைந்து மூன்றாம் நடுவரை நாடுவார், அதில் நடுவர் முடிவே சரி என்றிருந்தால் அந்த நடுவர் மீண்டும் கௌரவமாக ஒரு விரலை தூக்கு அவுட் எனக் காண்பிப்பார். சிலர் மன்னிப்பு கேட்பது போல் கையசைத்து நாட்-அவுட் என்பார். இதில் நடுவர்களின் அனுபவம் பிரதிபலிக்கும்.

இரு அணியினருக்கே இடையே மோதல் ஏற்பட்டால் நடுவர் சமரசம் பேசி அனுப்பி வைப்பார். அதேபோல் எதையும் சார்ந்து இல்லாமல் தங்களது முடிவை துல்லியமாக எடுக்கும் சிறந்த நடுவர்கள் குழுவை ஐசிசி அறிவிப்பது வழக்கம்.

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் சிறப்பாக செயல்படும் நடுவர்கள், ஐசிசியின் உயர்மட்ட நடுவர் குழுவில் ஒவ்வொரு ஆண்டும் சேர்க்கப்பட்டு வருவார்கள். இந்தக் குழுவில் சேர்க்கப்படும் நடுவர்கள், களத்தில் தொடர்ந்து சிறந்த செயல்பட்டால் மட்டுமே அவர்களுக்கு அந்த குழுவில் தொடர்ந்து பங்கேற்க வாய்ப்பு இல்லையெனில் நீக்கம்தான்.

தற்போது 2020-21ம் ஆண்டுக்கான ஐசிசி சிறந்த நடுவர்கள் குழு பட்டியலை வெளியிட்டுருக்கிறது. இதில் இந்தியாவை சேர்ந்த நடுவர் நிதின் மேனனும் இணைக்கப்பட்டிருக்கிறார். அவரது சிறந்த முடிவுகளாலும், செயல்பாடுகளாலும் ஐசிசி நடுவர் தேர்வு கமிட்டி அவரை தேர்வு செய்திருக்கிறது. ஐசிசி நடுவர் குழுவில் உள்ள இளம் வயது நடுவர் இவர் என்பது குறிப்பிடத்தக்க ஒன்று.

முன்னதாகவே முன்னாள் கேப்டன் வெங்கட்ராகவன், சுந்தரம் ரவி ஆகியோர் ஐசிசி சிறந்த நடுவர்கள் குழு பட்டியலில் இடம்பெற்றிருந்த நிலையில் தற்போது மூன்றாவது நபராக இந்தியர் நிதின் மேனன் இணைக்கப்பட்டிருக்கிறார். இந்த குழுவில் இலங்கை குமார் தர்மசேனா, பாகிஸ்தான் அலீம் தார் உட்பட 12 பேர் இருக்கின்றனர்.

Stay Connected

16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe

Must Read

“வெற்றிவேல்., வீரவேல்”- மோடி., “ஜல்லிக்கட்டு கதாநாயகன் மோடி”- ஓபிஎஸ்!

தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகிற 6 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான பிரச்சாரத்தில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். தாராபுரம் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் எல்.முருகன் மற்றும் கூட்டணி...

நதியில் பதுக்கிய ஆதாரங்கள் மீட்பு: முகேஷ் அம்பானி மிரட்டல் வழக்கில் அடுத்தடுத்து திருப்பங்கள்!

முகேஷ் அம்பானி வீடு அருகே வெடி பொருட்களுடன் கார் நிறுத்தப்பட்ட வழக்கில், அடுத்தடுத்து பல திருப்பங்கள் நிகழ்ந்து வருகின்றன. மும்பையில் உள்ள பிரபல தொழிலதிபர் மற்றும் ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி வீட்டின்...

சூடுபிடிக்கும் வேட்பு மனு தாக்கல்: வாக்குப்பதிவு நாளன்று விடுமுறையா?

தமிழக சட்டப் பேரவைக்கு வரும் ஏப்ரல் 6ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து, கடந்த 12ம் தேதி முதல் வேட்புமனு தாக்கல் நடைபெற்று வருகிறது. முதல் நாளில் தேர்தல் மன்னன் பத்மநாபன், துணை...

வெற்றி நடை போடுமா தமிழகம்? – அதிமுக கூட்டணியின் பலம் என்ன? பலவீனம் என்ன?

வெற்றி நடை போடுமா தமிழகம்? – அதிமுக கூட்டணியின் பலம் என்ன? பலவீனம் என்ன? தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் 6ம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தலில் ஹாட்ரிக் வெற்றி பெற வேண்டும் என...

Related News

மண்டைக்குள் ஓடிக் கொண்டே இருக்கும் “எஞ்சாய் எஞ்சாமி” பாடல்: சிந்தைனை, பிரமிப்பு, புல்லரிப்பு!

கடந்த காலத்துக்கு சென்று ஒரு அறிவை திருட வேண்டும் என்றால் அதில் இதுவும் ஒரு விஷயமாக இருக்கும். அந்த அளவிற்கு இந்த பாடலில் வீடியோவும், இசையும், வரியும் அமைந்துள்ளது என்றே கூறலாம். சமீப...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here