Home விளையாட்டு கிரிக்கெட் ஐயயோ 15 கோடி போச்சே: மேட்ச்ச விடுங்க அவரு கமெண்ட்ரிய கேளுங்க- பிச்சு ஒதரும் ஆர்ஜே!

ஐயயோ 15 கோடி போச்சே: மேட்ச்ச விடுங்க அவரு கமெண்ட்ரிய கேளுங்க- பிச்சு ஒதரும் ஆர்ஜே!

கொரோனா தாக்கத்துக்கு மத்தியில் ஐபிஎல் விறுவிறுப்புக்கு சற்று பஞ்சமில்லாமல் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த ஐபிஎல் தொடரில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக பார்வையாளர்கள் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

மைதானத்தில் பார்வையாளர்கள் இல்லாமல் வீரர்களே சக வீரர்களை கைத்தட்டி உற்சாகப்படுத்தி வருகின்றனர். இந்த மந்தநிலையை நேரடி ஒளிபரப்பில் போக்குவதற்கு ரசிகர்களின் ஆரவாரக் குரல் ரெக்கார்டிங் முறையில் பின்னணியில் ஒலிக்கப்பட்டு வருகிறு.

ரசிகர்கள் இல்லாமல் நடைபெறும் ஐபிஎல் 2020-ன் முதல் ஆட்டத்தில் பார்வையாளர்கள் சற்று வித்தியாசத்தை கண்டாலும் அடுத்தடுத்த ஆட்டத்தில் அதை பொருட்படுத்தவில்லை என்பதே உண்மை. குறிப்பாக ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ் தொலைக்காட்சி பார்க்கும் ரசிகர்கள். இதற்கு முக்கிய காரணம் ஐபிஎல் தமிழ் கமெண்ட்ரி.

Iyo 15 crore Poche: Let the match, listen to his commentary- RJ who is a bitch!

சக நண்பரை போல் காமெடி செய்யும் ஆர்ஜே பாலாஜி

பல திரைப்படங்களில் முன்னணி கதாபாத்திரத்தில் ஆர்ஜே பாலாஜி நடித்திருந்தாலும், குறிப்பிட்டு சொல்ல நானும் ரவுடிதான் படத்தை எடுத்துக் கொள்ளலாம். இந்த படத்தில் இவர் பேசும் காமெடி வசனங்கள், அனைவரும் அவர்களது நண்பர்களோடு பேசும் இயல்பான வசனங்களாவே இருக்கும். இவர் நடிக்கும் பெரும்பாலான படத்தில் இவரை சூழ்நிலைக்கேற்ப சரியாக நகைச்சுவை உணர்வோடு பேசி ரசிகர்களை கவர்ந்தார்.

கிரிக்கெட் வர்ணனையாளர் இருக்கையை அலங்கருக்கும் ஆர்ஜே

ஆர்ஜே பணியாற்றிய அனைவரும் இவரை போல் இயல்பாக பேசி உச்சத்தை தொடர்வார்களா என்றால் அது கேள்விதான். தற்போது கிரிக்கெட் தமிழ் வர்ணனையாளராக ஐபிஎல் தொடரை அலங்கரித்து வரும் ஆர்ஜே பாலாஜி, தனக்கே உரிய பாணியில் பேசி வெளுத்துவாங்கி வருகிறார்.

ஐயயோ 15 கோடி போச்சே

நேற்றைய தொடரில் கேகேஆர் அணியும் மும்மை அணியும் மோதியது. இந்த ஆட்டத்தில் மும்பை அணி வெற்றி பெற்றது. இந்த நிலையில் கொல்கத்தா அணியின் பவுலரும், கடந்த ஆண்டு நடைபெற்ற ஏலத்தில் 15.5 கோடி கொடுத்து வாங்கப்பட்டவருமான பேட் கம்மின்ஸ் பந்துவீச்சு ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி ஆழ்த்தியது. அதற்கு காரணம் அவர் எதிரணிக்கு 49 ரன்களை வாரி வழங்கினார்.

ஒரு பந்துக்கு 4 லட்சம்

இதை சற்றும் பொருத்தக் கொள்ள முடியாத ஆர்ஜே பாலாஜி 15 கோடி போச்சே என கமெண்ட்ரியில் புலம்பி தள்ளிவிட்டார். இவர் வீசும் ஒரு பந்துக்கு 4 லட்சம் ரூபாய், இவர் என்ன இப்படி போட்ராறு என மனஉளைச்சலுக்கு சென்றுவிட்டார்.

அது தாடியா இல்லா மாஸ்கா

அதேபோல் பொலார்ட், இவர் தற்போது தாடியை கருப்பு கலரில் ஒரே அளவிலாக வைத்துள்ளார். என்னங்க பொலார்ட் கருப்பு கலர் மாஸ்க் வாய்க்கு கீழ போட்ருக்காரு என பாலாஜி சந்தேகத்துடன் ஆழ்ந்து பார்க்க ஐய்யோ அது மாஸ்க் இல்ல தாடினு சக கமெண்டரி கூறினார்.

மைதானமா இல்ல திருமண மண்டபமா

மைதானத்தின் டாப் பகுதி டிவியில் காட்டும்போது, ஆர்ஜே பாலாஜி ஆஹா மைதானம் டாப் வியூவில் பார்க்கும் போது திருமண மண்டபம் போலவே உள்ளது என ஒப்பிட்டார்.

ரொம்ப பசிக்குது ஆட்டத்தை முடிங்க தம்பி

ஆட்டத்தின் முதல் பகுதி முடியும் நிலையின்போது, ஏங்க ஆட்டத்த வேகமா முடிங்க பசிக்குது ஐய்யோ இப்போ ஏன்பா வொய்டு போட்ற, ஆட்டத்த முடிங்கயா பசிக்குது அப்டினு ஆர்ஜே பாலாஜி சொல்ல அப்போதுதான் பார்வையாளர்களுக்கே இரவு உணவு நியாபகம் வந்தது என கூறலாம்.

டிக்டிக்டிக் ஜெயம்ரவியை தொட்ட பந்து

ஆட்டத்தின் போது சூர்யகுமார் யாதவ் அடித்த பந்து சற்று உயரத்தில் செல்ல, அடடா இவர் அடித்த பந்து டிக்டிக்டிக் பட ஜெயம்ரவியை தொட்டுவிட்டு வந்துவிட்டது என சகட்டுமேனியாக நகைச்சுவை உணர்வோடு கிண்டல் செய்தார்.

பகடா-னா என்னங்க

அதேபோல் பேட்ஸ்மேன் ரன் ஓடும்போது பகடா, பகடா என கத்த. ஏங்க பகடானா என்னங்க ஓடுனு அர்த்தமா என ஆர்ஜே பாலாஜி சந்தேகத்துடன் சக கமெண்ட்ரியிடம் கேட்கிறார். அதற்கு சக கமெண்ட்ரியர் மௌனம் சாதித்தார். ஒருவேளை அவருக்கும் தெரியாது போல. பகடானா என்னங்க?

ஆண்டி அங்கிள்களுக்கு ஒரு நற்செய்தி

அப்படியே ஆன் தி வே கமெண்ட்ரியில் ஒரு சமூக செய்தியை எடுத்து எரிந்தார். ஆண்டி அங்கிள்கள் சந்தோஷமா இருப்பாங்க ஏன்னா பசங்களுக்கு ஆன்லைன் வகுப்பு எடுக்கக் கூடாதுனு உத்தரவு போட்டாங்க, ஒருவேளை ஏதாவது பள்ளி ஆன்லைன் வகுப்பு எடுத்தாங்கனா அவுங்களா அரசுக்கிட்ட போட்டுவிட்ருங்கனு ஆர்ஜே பாலாஜி அறிவுரை விடுத்தார்.

அத்தியாயம் தொடரும்…

கிரிக்கெட் பார்ப்பவர்களின் முகத்தில் ஆர்வத்தோடு ஆர்ஜே பாலாஜி செய்யும் குறும்பு காமெடி பேச்சால் புன்னகையையும் பார்க்க முடிகிறது. ஆட்டத்தின் விறுவிறுப்பை சற்றும் குறைய விடாமல் துல்லியமான கமெண்ட்ரி வழங்கும் ஆர்ஜே பாலாஜியின் அடுத்த ஆட்ட பேச்சுக்கு அவரது ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

Stay Connected

16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe

Must Read

“வெற்றிவேல்., வீரவேல்”- மோடி., “ஜல்லிக்கட்டு கதாநாயகன் மோடி”- ஓபிஎஸ்!

தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகிற 6 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான பிரச்சாரத்தில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். தாராபுரம் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் எல்.முருகன் மற்றும் கூட்டணி...

நதியில் பதுக்கிய ஆதாரங்கள் மீட்பு: முகேஷ் அம்பானி மிரட்டல் வழக்கில் அடுத்தடுத்து திருப்பங்கள்!

முகேஷ் அம்பானி வீடு அருகே வெடி பொருட்களுடன் கார் நிறுத்தப்பட்ட வழக்கில், அடுத்தடுத்து பல திருப்பங்கள் நிகழ்ந்து வருகின்றன. மும்பையில் உள்ள பிரபல தொழிலதிபர் மற்றும் ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி வீட்டின்...

சூடுபிடிக்கும் வேட்பு மனு தாக்கல்: வாக்குப்பதிவு நாளன்று விடுமுறையா?

தமிழக சட்டப் பேரவைக்கு வரும் ஏப்ரல் 6ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து, கடந்த 12ம் தேதி முதல் வேட்புமனு தாக்கல் நடைபெற்று வருகிறது. முதல் நாளில் தேர்தல் மன்னன் பத்மநாபன், துணை...

வெற்றி நடை போடுமா தமிழகம்? – அதிமுக கூட்டணியின் பலம் என்ன? பலவீனம் என்ன?

வெற்றி நடை போடுமா தமிழகம்? – அதிமுக கூட்டணியின் பலம் என்ன? பலவீனம் என்ன? தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் 6ம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தலில் ஹாட்ரிக் வெற்றி பெற வேண்டும் என...

Related News

மண்டைக்குள் ஓடிக் கொண்டே இருக்கும் “எஞ்சாய் எஞ்சாமி” பாடல்: சிந்தைனை, பிரமிப்பு, புல்லரிப்பு!

கடந்த காலத்துக்கு சென்று ஒரு அறிவை திருட வேண்டும் என்றால் அதில் இதுவும் ஒரு விஷயமாக இருக்கும். அந்த அளவிற்கு இந்த பாடலில் வீடியோவும், இசையும், வரியும் அமைந்துள்ளது என்றே கூறலாம். சமீப...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here