Home விளையாட்டு கிரிக்கெட் ராஜஸ்தானை வீட்டுக்கு அனுப்பி வைத்த கொல்கத்தா

ராஜஸ்தானை வீட்டுக்கு அனுப்பி வைத்த கொல்கத்தா

துபாயில் நடைபெற்ற 54ஆவது லீக் போட்டியில் ராஜஸ்தான் அணியை 60 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அவர்களை வீட்டு வழி அனுப்பி வைத்துள்ளது கொல்கத்தா நைட் ரைடர்ஸ்!

அபுதாபியில் நடைபெற்ற 53ஆவது லீக் போட்டியில் சென்னை அணி பஞ்சாப் அணியை வீழ்த்தி அவர்களது பிளே ஆஃப் வாய்ப்புக்கு ஆப்பு வைத்தது. தொடர் இறுதி கட்டத்தில் எட்டிய நிலையில் மும்பையை தவிர வேறு யாரும் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறவில்லை. மூன்று இடங்களுக்கு பெங்களூரு, டெல்லி, கொல்கத்தா, ராஜஸ்தான், ஹைதராபாத் அணி என ஐந்து அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது.

இப்படியான சூழலில் கொல்கத்தா அணி தனது கடைசி லீக் போட்டியில் ராஜஸ்தான் அணியை எதிர்கொண்டது. இரு அணிகளும் தலா 12 புள்ளிகள் எடுத்திருந்தது. வெற்றி பெறும் அணிக்கு பிளே ஆஃப் வாய்ப்பு தோல்வி அடையும் அணி ஊருக்கு டேக் ஆஃப் தான். இந்த நிலையில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் கடந்த இருமுறை சேஸிங்கில் வெற்றிபெற்றதால் இம்முறையும் சேஸிங்கை தேர்வு செய்தார் ஸ்டீவ் ஸ்மித்.

முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தது. ஒருகட்டத்தில் 12.3 ஓவர்களில் 99 ரன்களுக்கு ஐந்து விக்கெட்கள் இழந்து தடுமாறிய கொல்கத்தா அணி மோர்கனின் அதிரடியால் 20 ஓவர்களில் ஏழு விக்கெட்களை இழந்து 191 ரன்களை குவித்தது. மோர்கன் 35 பந்துகளில் ஐந்து பவுண்டரி, ஆறு சிக்சர் என 68 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். ராஜஸ்தான் அணி தரப்பில் ராகுல் தேவாட்டியா மூன்று, கார்த்திக் தியாகி இரண்டு, ஸ்ரேயாஸ் கோபால், ஆர்ச்சர் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை எடுத்தனர்.

தொடர்ந்து களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கொல்கத்தா அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 19 ஓவர்களில் ஒன்பது விக்கெட்களை இழந்து 131 ரன்களை மட்டுமே எடுத்தது. அணியில் பட்லர் (35), தேவாட்டியா (33) தவிர மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். கொல்கத்தா அணி தரப்பில் பாட் கம்மின்ஸ் நான்கு, வருண் சக்கரவர்த்தி, சிவம் மாவி ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

இதனால் கொல்கத்தா அணி இப்போட்டியில் 60 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வீழ்த்தி அவர்களை ஊருக்கு வழி அனுப்பி வைத்துள்ளது. இதுமட்டுமின்றி எட்டாவது இடத்தில் இருந்த கொல்கத்தா அணி இந்த வெற்றியால் தற்போது நான்காவது இடத்துக்கு முன்னேறியுள்ளது. இந்த சீசனின் குரூப் போட்டிகள் முடிய இன்னும் இரண்டு போட்டிகள் மட்டுமே உள்ள நிலையில் மும்பையுடன் பிளே ஆஃப் செல்லப்போகும் மூன்று அணிகள் யார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Stay Connected

16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe

Must Read

“தகவல் போதவில்லை…”: கோவாக்சின் தடுப்பூசிக்கு அமெரிக்கா அனுமதி மறுப்பு!

கோவாக்சின் தடுப்பூசிக்கு அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் அவசர கால பயன்பாட்டு ஒப்புதல் அளிக்க மறுப்பு தெரிவித்துள்ளது. கொரோனா தொற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்ள உலகம் முழுவதும் மக்களுக்கு போர்க்கால அடிப்படையில் தடுப்பூசி செலுத்தப்பட்டு...

ஜகமே தந்திரம் கதை இதுதானா?- மதுரை சுருளி Vs லண்டன் தாதா!

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனிஷ் நடிப்பில் ஜூன் 18 ஆம் தேதி வெளியாகும் படம் ஜகமே தந்திரம். இந்த படம் நேரடியாக நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது. ஜகமே தந்திரம் திரைப்படத்தை 17...

கொரோனாவின் ஆட்டம்: சாய்னாவின் ஒலிம்பிக் கனவு பறிபோனது!

கொரோனா பரவல் காரணமாக இந்திய நட்சத்திர வீராங்கனை சாய்னா நேவாலின் டோக்கியோ ஒலிம்பிக் கனவு முற்றிலும் தகர்ந்துள்ளது. 32வது ஒலிம்பிக் போட்டி ஜூலை 23ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 8ம் தேதி வரை ஜப்பான்...

ஒன்றிய அரசா? மத்திய அரசா?: அண்ணா, கருணாநிதியால் முடியாததை செய்து காட்டுவாரா ஸ்டாலின்?

மத்திய அரசை ஒன்றிய அரசு என்று திமுகவினர் குறிப்பிடுவது விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு மு.க.ஸ்டாலின் பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். திராவிடம் மற்றும் சமூக நீதி கொள்கைகளின் அடித்தளத்துடன்,...

Related News

வரிசைக் கட்டும் ஓடிடி வெளியீடு: முக்கிய நடிகர்கள் படங்கள் ஓடிடி வெளியீட்டு தேதி இதோ!

வரிசைக் கட்டும் ஓடிடி வெளியீடு: முக்கிய நடிகர்கள் படங்கள் ஓடிடி வெளியீட்டு தேதி இதோ! கொரோனா பரவல் காரணமாக திரையரங்குகள் மூடும் நிலை ஏற்பட்டுள்ளது. திரையரங்குகள் திறக்கப்பட்டாலும் மக்கள் திரையரங்கு சென்று படம் பார்ப்பதில்...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here