Home விளையாட்டு கிரிக்கெட் பஞ்சாப்பை பந்தாடி கொல்கத்தா த்ரில் வெற்றி...!

பஞ்சாப்பை பந்தாடி கொல்கத்தா த்ரில் வெற்றி…!

பஞ்சாப் – கொல்கத்தா அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி இரண்டு ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணியை வீழ்த்தி த்ரில் வெற்றியைப் பதிவு செய்தது.

ஐபிஎல் தொடரின் இன்று (அக்.10) நடைபெற்ற 24ஆவது லீக் ஆட்டத்தில் தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, கே.எல்.ராகுல் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை எதிர்கொண்டது.

இதில் முதலில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய கேகேஆர் அணிக்கு ராகுல் திரிபாதி, இயன் மோர்கன், நிதீஷ் ராணா ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறி ஏமாற்றமளித்தனர்.

பின்னர் ஜோடி சேர்ந்த சுப்மன் கில் – தினேஷ் கார்த்திக் இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதன் மூலம் கேகேஆர் அணி 20 ஓவர்கள் முடிவில் ஆறு விக்கெட்டுகளை இழந்து 164 ரன்களைக் குவித்தது. அந்த அணியில் அதிகபட்சமாக தினேஷ் கார்த்திக் 58 ரன்களையும், சுப்மன் கில் 57 ரன்களையும் எடுத்தனர்.

இதையடுத்து வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய பஞ்சாப் அணியின் தொடக்க வீரர்கள் கே.எல்.ராகுல்-மயங்க் அகர்வால் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியை ஸ்கோரை உயர்த்தினர். தொடர்ந்து சிறப்பாக விளையாடிய இருவரும் அரைசதம் கடந்து அசத்தினர்.

இதில் 56 ரன்கள் எடுத்திருந்த நிலையில் மயங்க் அகர்வால் விக்கெட்டை இழந்து வெளியேற, அவரைத் தொடர்ந்து வந்த நிக்கோலஸ் பூரான், சிம்ரான் சிங் ஆகியோரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர். இதனால் ஆட்டத்தில் யார் வெற்றி பெறுவார் என்ற பரபரப்பு தொற்றிக்கொண்டது.

இறுதியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி இரண்டு ரன்கள் வித்தியாசத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை வீழ்த்தி த்ரில் வெற்றியைப் பதிவு செய்தது.

Stay Connected

16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe

Must Read

“தகவல் போதவில்லை…”: கோவாக்சின் தடுப்பூசிக்கு அமெரிக்கா அனுமதி மறுப்பு!

கோவாக்சின் தடுப்பூசிக்கு அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் அவசர கால பயன்பாட்டு ஒப்புதல் அளிக்க மறுப்பு தெரிவித்துள்ளது. கொரோனா தொற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்ள உலகம் முழுவதும் மக்களுக்கு போர்க்கால அடிப்படையில் தடுப்பூசி செலுத்தப்பட்டு...

ஜகமே தந்திரம் கதை இதுதானா?- மதுரை சுருளி Vs லண்டன் தாதா!

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனிஷ் நடிப்பில் ஜூன் 18 ஆம் தேதி வெளியாகும் படம் ஜகமே தந்திரம். இந்த படம் நேரடியாக நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது. ஜகமே தந்திரம் திரைப்படத்தை 17...

கொரோனாவின் ஆட்டம்: சாய்னாவின் ஒலிம்பிக் கனவு பறிபோனது!

கொரோனா பரவல் காரணமாக இந்திய நட்சத்திர வீராங்கனை சாய்னா நேவாலின் டோக்கியோ ஒலிம்பிக் கனவு முற்றிலும் தகர்ந்துள்ளது. 32வது ஒலிம்பிக் போட்டி ஜூலை 23ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 8ம் தேதி வரை ஜப்பான்...

ஒன்றிய அரசா? மத்திய அரசா?: அண்ணா, கருணாநிதியால் முடியாததை செய்து காட்டுவாரா ஸ்டாலின்?

மத்திய அரசை ஒன்றிய அரசு என்று திமுகவினர் குறிப்பிடுவது விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு மு.க.ஸ்டாலின் பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். திராவிடம் மற்றும் சமூக நீதி கொள்கைகளின் அடித்தளத்துடன்,...

Related News

வரிசைக் கட்டும் ஓடிடி வெளியீடு: முக்கிய நடிகர்கள் படங்கள் ஓடிடி வெளியீட்டு தேதி இதோ!

வரிசைக் கட்டும் ஓடிடி வெளியீடு: முக்கிய நடிகர்கள் படங்கள் ஓடிடி வெளியீட்டு தேதி இதோ! கொரோனா பரவல் காரணமாக திரையரங்குகள் மூடும் நிலை ஏற்பட்டுள்ளது. திரையரங்குகள் திறக்கப்பட்டாலும் மக்கள் திரையரங்கு சென்று படம் பார்ப்பதில்...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here