Home விளையாட்டு கிரிக்கெட் கொல்கத்தாவிடம் சரண்டரான ராஜஸ்தான்!

கொல்கத்தாவிடம் சரண்டரான ராஜஸ்தான்!

துபாயில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 37 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வீழ்த்தியது.

நடப்பு ஐபிஎல் சீசனில் ஷார்ஜாவில் விளையாடிய 2 போட்டிகளில் வெற்றி பெற்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இன்று துபாயில் கொல்கத்தா அணியுடன் மோதியது. மறுமுனையில் கொல்கத்தா அணியும் அபுதாபியில் இரண்டு ஆட்டங்களில் ஒரு வெற்றி ஒரு தோல்வி என முதல் முறையாக துபாயில் பலப்பரீட்சை நடத்தியது. இதைத்தொடர்ந்து இப்போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதலில் பந்துவீச்சை தீர்மானித்தது.

அதன்படி முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. ஒருகட்டத்தில் 14.2 ஓவர்களில் ஐந்து விக்கெட்கள் இழப்புக்கு 115 ரன்கள் எடுத்திருந்த கே.கே.ஆர்‌ அணி மோர்கனின் பொறுப்பான ஆட்டத்தால் 20 ஓவர்களில் ஆறு விக்கெட்டுகளை இழந்து 174 ரன்களை குவித்தது.

கே.கே.ஆர் அணியில் அதிகபட்சமாக சுப்மன் கில் 47 ரன்களில் ஆட்டமிழந்தார். மோர்கன் 23 பந்துகளில் இரண்டு சிக்சர், ஒரு பவுண்டரி உட்பட 34 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். ராஜஸ்தான் அணி தரப்பில் ஆர்ச்சர் இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

இதைத்தொடர்ந்து களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் விக்கெட்டுகள் சீட்டுக் கட்டாக சரிந்தன. மிகப் பார்ட்னர்ஷிப் வளர்க்ககூட கே.கே.ஆர் அணி பவுலர்கள் இடம்கொடுக்க வில்லை. கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் (3), சஞ்சு சாம்சன் (8), பட்லர் (21), உத்தப்பா (2), ரியான் பராக் (1), ராகுல் தேவாட்டியா (14), ஸ்ரேயாஸ் கோபால் (5), ஆர்ச்சர் (6) ஆகியோர் அடுத்தடுத்து அவுட்டாகினர். இறுதியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவர்களில் ஒன்பது விக்கெட்களை இழந்து 137 ரன்களை மட்டுமே எடுத்தது. இதனால் கே.கே.ஆர் அணி இப்போட்டியில் 37 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வீழ்த்தியது.

தனிஒருவருவாக போராடிய டாம் கரன் 36 பந்துகளில் 56 ரன்களில் நாட் அவுட் பேட்ஸ்மேனாக களத்தில் இருந்தார். கே.கே.ஆர் அணி தரப்பில் சிவம் மாவி, கம்லேஷ் நாகர்கோட்டி, வருண் சக்கரவர்த்தி ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
Attachments area

Stay Connected

16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe

Must Read

“வெற்றிவேல்., வீரவேல்”- மோடி., “ஜல்லிக்கட்டு கதாநாயகன் மோடி”- ஓபிஎஸ்!

தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகிற 6 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான பிரச்சாரத்தில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். தாராபுரம் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் எல்.முருகன் மற்றும் கூட்டணி...

நதியில் பதுக்கிய ஆதாரங்கள் மீட்பு: முகேஷ் அம்பானி மிரட்டல் வழக்கில் அடுத்தடுத்து திருப்பங்கள்!

முகேஷ் அம்பானி வீடு அருகே வெடி பொருட்களுடன் கார் நிறுத்தப்பட்ட வழக்கில், அடுத்தடுத்து பல திருப்பங்கள் நிகழ்ந்து வருகின்றன. மும்பையில் உள்ள பிரபல தொழிலதிபர் மற்றும் ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி வீட்டின்...

சூடுபிடிக்கும் வேட்பு மனு தாக்கல்: வாக்குப்பதிவு நாளன்று விடுமுறையா?

தமிழக சட்டப் பேரவைக்கு வரும் ஏப்ரல் 6ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து, கடந்த 12ம் தேதி முதல் வேட்புமனு தாக்கல் நடைபெற்று வருகிறது. முதல் நாளில் தேர்தல் மன்னன் பத்மநாபன், துணை...

வெற்றி நடை போடுமா தமிழகம்? – அதிமுக கூட்டணியின் பலம் என்ன? பலவீனம் என்ன?

வெற்றி நடை போடுமா தமிழகம்? – அதிமுக கூட்டணியின் பலம் என்ன? பலவீனம் என்ன? தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் 6ம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தலில் ஹாட்ரிக் வெற்றி பெற வேண்டும் என...

Related News

மண்டைக்குள் ஓடிக் கொண்டே இருக்கும் “எஞ்சாய் எஞ்சாமி” பாடல்: சிந்தைனை, பிரமிப்பு, புல்லரிப்பு!

கடந்த காலத்துக்கு சென்று ஒரு அறிவை திருட வேண்டும் என்றால் அதில் இதுவும் ஒரு விஷயமாக இருக்கும். அந்த அளவிற்கு இந்த பாடலில் வீடியோவும், இசையும், வரியும் அமைந்துள்ளது என்றே கூறலாம். சமீப...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here