Home விளையாட்டு கிரிக்கெட் தமிழக வீரர் வருண் சக்ரவர்த்தி சுழலால் சுரண்டது டெல்லி!

தமிழக வீரர் வருண் சக்ரவர்த்தி சுழலால் சுரண்டது டெல்லி!

கொல்கத்தா – டெல்லி அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் கேகேஆர் அணி 59 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

ஐபிஎல் தொடரில் இன்று (அக்.24) நடைபெற்ற 42ஆவது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடரஸ் அணி, டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியுடன் பலப்பரீட்சை நடத்தியது.

இப்போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய கொல்கத்தா அணிக்கு நிதீஷ் ராணா, சுனில் நரைன் ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதம் கடந்து அசத்தினர்.

இதன் மூலம் கேகேஆர் அணி 20 ஓவர்கள் முடிவில் ஆறு விக்கெட்டுகளை இழந்து 194 ரன்களைக் குவித்தது. அந்த அணியில் அதிகபட்சமாக ராணா 81 ரன்களையும், சுனில் நரைன் 63 ரன்களையும் எடுத்தனர்.

இதையடுத்து வெற்றி இலக்கை நோக்கிக் களமிறங்கிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு தொடக்கத்திலேயே அதிர்ச்சியளிக்கும் வகையில், இன்னிங்ஸின் முதல் பந்திலேயே விக்கெட்டை இழந்து ரஹானே பெவிலியன் திரும்பினார். அவரைத் தொடர்ந்து ஷிகர் தவானும் ஆறு ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார்.

இதையடுத்து ஜோடி சேர்ந்த ஸ்ரேயாஸ் ஐயர் – ரிஷப் பந்த் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். தொடர்ந்து, 27 ரன்களில் ரிஷப் பந்த், வருண் சக்ரவர்த்தி வீசிய பந்தில் விக்கெட்டை இழக்க, அவரைத் தொடர்ந்து ஸ்ரேயாஸ் ஐயரும் 47 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார்.

அதனையடுத்து களமிறங்கிய வீரர்கள் வருணின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியன் திரும்பினர். இதனால் டெல்லி அணியின் தோல்வியும் உறுதியானது.

இறுதியில் டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 135 ரன்களை மட்டுமே எடுத்தது. இதன் மூலம் கேகேஆர் அணி 59 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. கேகேஆர் அணி தரப்பில் வருண் சக்ரவர்த்தி ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

Stay Connected

16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe

Must Read

“வெற்றிவேல்., வீரவேல்”- மோடி., “ஜல்லிக்கட்டு கதாநாயகன் மோடி”- ஓபிஎஸ்!

தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகிற 6 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான பிரச்சாரத்தில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். தாராபுரம் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் எல்.முருகன் மற்றும் கூட்டணி...

நதியில் பதுக்கிய ஆதாரங்கள் மீட்பு: முகேஷ் அம்பானி மிரட்டல் வழக்கில் அடுத்தடுத்து திருப்பங்கள்!

முகேஷ் அம்பானி வீடு அருகே வெடி பொருட்களுடன் கார் நிறுத்தப்பட்ட வழக்கில், அடுத்தடுத்து பல திருப்பங்கள் நிகழ்ந்து வருகின்றன. மும்பையில் உள்ள பிரபல தொழிலதிபர் மற்றும் ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி வீட்டின்...

சூடுபிடிக்கும் வேட்பு மனு தாக்கல்: வாக்குப்பதிவு நாளன்று விடுமுறையா?

தமிழக சட்டப் பேரவைக்கு வரும் ஏப்ரல் 6ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து, கடந்த 12ம் தேதி முதல் வேட்புமனு தாக்கல் நடைபெற்று வருகிறது. முதல் நாளில் தேர்தல் மன்னன் பத்மநாபன், துணை...

வெற்றி நடை போடுமா தமிழகம்? – அதிமுக கூட்டணியின் பலம் என்ன? பலவீனம் என்ன?

வெற்றி நடை போடுமா தமிழகம்? – அதிமுக கூட்டணியின் பலம் என்ன? பலவீனம் என்ன? தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் 6ம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தலில் ஹாட்ரிக் வெற்றி பெற வேண்டும் என...

Related News

மண்டைக்குள் ஓடிக் கொண்டே இருக்கும் “எஞ்சாய் எஞ்சாமி” பாடல்: சிந்தைனை, பிரமிப்பு, புல்லரிப்பு!

கடந்த காலத்துக்கு சென்று ஒரு அறிவை திருட வேண்டும் என்றால் அதில் இதுவும் ஒரு விஷயமாக இருக்கும். அந்த அளவிற்கு இந்த பாடலில் வீடியோவும், இசையும், வரியும் அமைந்துள்ளது என்றே கூறலாம். சமீப...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here