Home விளையாட்டு கிரிக்கெட் இரண்டு சூப்பர் ஓவர்; பஞ்சாப்புக்கு ஜாக்பாட்! ரசிகர்களை தூங்கவிடாமல் செய்த மேட்ச்

இரண்டு சூப்பர் ஓவர்; பஞ்சாப்புக்கு ஜாக்பாட்! ரசிகர்களை தூங்கவிடாமல் செய்த மேட்ச்

கிங்ஸ் லெவன் பஞ்சாப் – மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி டையானதையடுத்து பஞ்சாப் அணி இரண்டாவது சூப்பர் ஓவர் முறையில் மும்பை இந்தியன்ஸை வீழ்த்தியுள்ளது‌‌.

சூப்பர் சன்டேவுக்கு ஏற்றவாறே இன்றைய (அக்.18) அமைந்தது. முதலில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்- கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி சமரில் முடிந்த நிலையில், கொல்கத்தா அணி சூப்பர் ஓவரில் ஹைதராபாத் அணியை வீழ்த்தியது.

இதைத்தொடர்ந்து துபாயில் நடைபெற்ற 36ஆவது லீக் போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி மும்பை இந்தியன்ஸ் அணியுடன் மோதியது. பஞ்சாப் அணி பிளே ஆஃப் வாய்ப்பை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்றால் இப்போட்டியில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இருந்தது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி 20 ஓவர்களில் ஆறு விக்கெட்டுகளை இழந்து 176 ரன்களை அடித்தது. அந்த அணியில் டி காக். 53 ரன்களில் ஆட்டமிழந்தார். பஞ்சாப் அணி தரப்பில் முகமது ஷமி, அர்ஷ்தீப் சிங் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளும், ஜோர்டான் பிஷ்னாய் தலா ஒரு விக்கெட்டும் எடுத்தனர்.

பின் 177 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் அணியில் மயங்க் அகர்வால் 11 ரன்களிலும், கிறிஸ் கெயில், பூரான் 24 ரன்களிலும், மேக்ஸ்வெல் டக் அவுட் ஆனாலும் மறுபக்கம் கே‌.எல்.ராகுல் மிகச் சிறப்பாக ஆடி இந்த சீசனில் தனது ஐந்தாவது அரை சதத்தை அடித்தார். அவருக்கு ஏற்றாவாறு தீபக் ஹூடா சிங்கிள் எடுத்து ஆடினார். பஞ்சாப் அணியின் 16 பந்துகளில் 24 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் ராகுல் 77 ரன்களுக்க பும்ராவின் துல்லியமான யார்கக்ரால் அவுட்டானார்.

பின் கடைசி ஓவரில் 9 ரன்கள் எடுக்க வேண்டிய நிலையில் போல்ட் வீசிய முதல் ஐந்து பந்துகளில் ஒரு பவுண்டரி உட்பட ஏழு ரன்களை வழங்கினார். கடைசி பந்தில் இரண்டாவது ரன் ஓடும் போது ஜார்டான் ரன் அவுட் ஆக பஞ்சாப்பும் 20 ஓவர்களில் ஆறு விக்கெட்டுகள் இழப்பிற்கு 176 ரன்களை எடுத்தது. மும்பை அணியில் பும்ரா மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

போட்டி சமனில் முடிய வெற்றியாளரை தீர்மானிக்க சூப்பர் ஓவர் கடைபிடிக்கப்பட்டது. இந்த சீசனில் நடக்கும் நான்காவது சூப்பர் ஓவர் இதுவாகும்.

சூப்பர் ஓவரில் முதலில் பேட்டிங் செய்ய பஞ்சாப் அணியில் கே.எல்.ராகுல், நிக்கோலஸ் பூரன் இறங்கினர். மும்பை அணியில் பும்ரா ஓவரை வீசினார்.‌ முதல் பந்தில் ஒரு ரன்னும் அடுத்த பந்திலேயே பூரனை அவுட் செய்தார். பின் மூன்றாவது, நான்காவது பந்தில் ஒரு‌ ரன்னும், ஐந்தாவது பந்தில் இரண்டு ரன்களும் வழங்கிய பும்ரா கடைசி பந்தில் ராகுலை அவுட்டாக்கினார். இதனால் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு சூப்பர் ஓவரில் ஆறு ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

மும்பை அணியில் இந்த இலக்கை எட்ட டி காக், ரோகித் ஷர்மா களமிறங்க, பஞ்சாப் அணியில் முகமது ஷமி பந்துவீசினார். குறைவான இலக்கு என்பதால் மும்பையே வெற்றி பெறும் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் அவர்களது எதிர்பார்ப்பை தவிடு பொடி ஆக்கினர் முகமது ஷமி. துல்லியமான யார்க்கரால் டி காக், ரோஹித் ஷர்மா இருவரையும் பெரிய ஷாட் அடிக்காதவாறு கட்டுப்படுத்தினார். கடைசி பந்தில் இரண்டு ரன்கள் தேவைப்பட்ட நிலையில் டி காக் இரண்டாவது ரன் ஒடமுயன்ற போது ரன் அவுட் ஆக மும்பையும் சூப்பர் ஓவரில் ‌ஐந்து ரன்கள் மட்டுமே எடுத்தது.

இதனால் சூப்பர் ஓவரும் டையாக, ஐசிசியின் புதிய விதிமுறைப்படி வெற்றியாளரை தீர்மானிக்க மீண்டும் ஒரு சூப்பர் ஓவர் கடைபிடிக்கப்பட்டது. ஐபிஎல்லில்இப்படி ஒரே போட்டியில் இரண்டு சூப்பர் ஓவர் நடைபெறுவது இதுவே முதன்முறையாகும். மேலும் முதல் சூப்பர் ஓவரில் அவுட்டான பேட்ஸ்மேன்களும், பந்துவீசிய பவுலர்களும் இரண்டாவது சூப்பர் ஓவரில் பங்கேற்கக் கூடாது என்பது விதி!

இதன் விளைவாக பேட்டிங் செய்த மும்பை அணியில் ஹர்திக் பாண்டியா, பொல்லார்ட் இறங்க, பஞ்சாப் அணியில் ஜார்டான் பந்துவீசினார். இரண்டு ஒயிட் உட்பட ஒரு ரன் அவுட் உட்பட ஐந்து பந்துகளில் ஒன்பது ரன்களை வழங்கினார். பின் அவர் வீசிய கடைசி பந்தை பொல்லார்ட் மிட் விக்கெட்டுக்கு பறக்க விட, மயங்க் அகர்வால் அதை சிக்சருக்கு செல்லவிடாமல், பவுண்டரி லைனில் பந்தை பிடித்து தூக்கி வீசினார். இதனால் மும்பை அணிக்கு இரண்டு ரன்கள் கிடைக்க பஞ்சாப்புக்கு டார்கெட் 12 ரன்களை செட் செய்தது மும்பை.

பின் பஞ்சாப் அணியில் யூனிவர்சல் பாஸ் கிறிஸ் கெயில், மயங்க் அகர்வால் இறங்க, போல்ட் ஓவரை வீசினார். முதல் பந்தை சிக்சருக்கு அடித்து அதகளப்படுத்தினார் கெயில். அடுத்த பந்தில் சிங்கிள் எடுத்தாலும், மூன்றாவது, நான்காவது பந்தில் மயங்க் அகர்வால் பவுண்டரி அடித்து மேட்சை ஃபினிஷ் செய்தார். இதனால் பஞ்சாப் அணி இரண்டாவது சூப்பர் ஓவரில் மும்பையை வீழ்த்தியது. இந்த வெற்றியின் மூலம் பஞ்சாப் அணி ஆறு புள்ளிகளுடன் கடைசி இடத்தில் இருந்து ஆறாவது இடத்துக்கு முன்னேறியுள்ளது.

சன்டேவில் ஆரம்பித்த இந்த மேட்ச் மன்டே தொடங்கியபின்தான் முடிந்தது.‌கிட்டத்தட்ட ஐந்தரை‌ மணி நேரங்கள் இப்போட்டி நீடித்தது. டி20யின் ஆகச் சிறந்த போட்டியாக இப்போட்டி அமைந்திருந்தாலும் ரசிகர்களின் தூஙக் விடாமல் செய்தது. இதுதான் ஐபிஎல்லின் சிறப்பம்சமே!

Stay Connected

16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe

Must Read

“வெற்றிவேல்., வீரவேல்”- மோடி., “ஜல்லிக்கட்டு கதாநாயகன் மோடி”- ஓபிஎஸ்!

தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகிற 6 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான பிரச்சாரத்தில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். தாராபுரம் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் எல்.முருகன் மற்றும் கூட்டணி...

நதியில் பதுக்கிய ஆதாரங்கள் மீட்பு: முகேஷ் அம்பானி மிரட்டல் வழக்கில் அடுத்தடுத்து திருப்பங்கள்!

முகேஷ் அம்பானி வீடு அருகே வெடி பொருட்களுடன் கார் நிறுத்தப்பட்ட வழக்கில், அடுத்தடுத்து பல திருப்பங்கள் நிகழ்ந்து வருகின்றன. மும்பையில் உள்ள பிரபல தொழிலதிபர் மற்றும் ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி வீட்டின்...

சூடுபிடிக்கும் வேட்பு மனு தாக்கல்: வாக்குப்பதிவு நாளன்று விடுமுறையா?

தமிழக சட்டப் பேரவைக்கு வரும் ஏப்ரல் 6ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து, கடந்த 12ம் தேதி முதல் வேட்புமனு தாக்கல் நடைபெற்று வருகிறது. முதல் நாளில் தேர்தல் மன்னன் பத்மநாபன், துணை...

வெற்றி நடை போடுமா தமிழகம்? – அதிமுக கூட்டணியின் பலம் என்ன? பலவீனம் என்ன?

வெற்றி நடை போடுமா தமிழகம்? – அதிமுக கூட்டணியின் பலம் என்ன? பலவீனம் என்ன? தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் 6ம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தலில் ஹாட்ரிக் வெற்றி பெற வேண்டும் என...

Related News

மண்டைக்குள் ஓடிக் கொண்டே இருக்கும் “எஞ்சாய் எஞ்சாமி” பாடல்: சிந்தைனை, பிரமிப்பு, புல்லரிப்பு!

கடந்த காலத்துக்கு சென்று ஒரு அறிவை திருட வேண்டும் என்றால் அதில் இதுவும் ஒரு விஷயமாக இருக்கும். அந்த அளவிற்கு இந்த பாடலில் வீடியோவும், இசையும், வரியும் அமைந்துள்ளது என்றே கூறலாம். சமீப...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here