Home விளையாட்டு கிரிக்கெட் நீங்க நம்புனாலும் நம்பலனாலும் அதான் நெசம்; பஞ்சாப் கடைசி பந்தில் வின் பன்னிடாங்க!

நீங்க நம்புனாலும் நம்பலனாலும் அதான் நெசம்; பஞ்சாப் கடைசி பந்தில் வின் பன்னிடாங்க!

ஐந்து தொடர் தோல்விக்கு பிறகு கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி ஒருவழியாக ஒன்பது விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை வீழ்த்தியது.

இந்த ஐபிஎல் சீசனின் முதல் அணியாக ஐக்கிய அரபு அமீரகத்தில் காலடி எடுத்து வைத்த பஞ்சாப் அணி, தற்போது முதல் அணியாக இந்தியாவுக்கு திரும்பும் நிலையில் உள்ளது. இந்த சீசனில் ஆடிய ஏழு போட்டிகளில் ஒரு வெற்றி, ஆறு தோல்வி என இரண்டு புள்ளிகளுடன் கடைசி இடத்தில் உள்ளது.

இந்த நிலையில் ஷார்ஜாவில் நடைபெற்ற‌ ஐபிஎல் தொடரின் 31ஆவது லீக் போட்டியில் பஞ்சாப் அணி 10 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தில் இருந்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியுடன் மோதியது. பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற வேண்டும் என்றால் பஞ்சாப் அணி இப்போட்டியில் இருந்து அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

இதைத்தொடர்ந்து இப்போட்டியில் டாஸ் வென்ற ஆர்சிபி அணி பேட்டிங் செயய் தீர்மானித்தது. ரசிகர்கள் எதிர்பார்த்தப் படியே இப்போட்டியில் கெயிலுடன் களமிறங்கியது பஞ்சாப். மறுமுனையில் பெங்களூரு அணி எந்தவொரு மாற்றமும் செய்யாமல் அதே 11 வீரர்களுடன் களமிறங்கியது.

முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணியில் தேவ்தத் படிக்கல் (20), ஃபின்ச் (18) அடுத்தடுத்து ஆட்டமிழக்க டி‌ வில்லியர்ஸ் வருவார் என எதிர்பார்க்கப்பட்ட போது வாஷிங்டன் சுந்தர் வந்து 13 ரன்களில் வெளியேறினார். இன்னொரு பக்கம் கோலி ஒருநாள் போட்டியை போல் மெதுவாக ஆடினார்.‌ மறுபக்கம், சிவம் தூபே 23 ரன்களில் கெளம்ப டி வில்லியர்ஸ் 16ஆவது ஓவரில் களமிறங்கினார். இந்த நிலையில் முகமது ஷமியின் 18ஆவது ஓவரில் டி வில்லியர்ஸ் 2, கோலி 48 ரன்னிலும் அவுட்டாகினர்.

இறுதியில் கிறிஸ் மோரிஸ் எட்டு பந்துகளில் 25 ரன்கள் அடிக்க ஆர்சிபி 20 ஓவர்களில் ஆறு விக்கெட்டுகளை இழந்து 171 ரன்களை எடுத்தது. பஞ்சாப் அணி முருகன் அஸ்வின், முகமது ஷமி ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

இதைத்தொடர்ந்து களமிறங்கிய பஞ்சாப் அணியில் தொடக்க வீரர்களாக மயங்க் அகர்வால், கே.எல்.ராகுல் ஆகியோர் களமிறங்கினர். ஆரம்பத்தில் நிதானம் காட்டிய இந்த ஜோடி திடீரென டாப் கியரில் ரன்வேட்டியை தொடங்கியது. இருவரும் மாறி மாறி பவுண்டரி, சிக்சர்களை‌ விளாசி அணியின் ஸ்கோரை உயர்த்தியது.‌

இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 78 ரன்களை சேர்த்த நிலையில் மயங்க் அகர்வால் 25 பந்துகளில் நான்கு பவுண்டரி, மூன்று சிக்சர் என 45 ரன்களில் ஆட்டமிழந்தார். இதைத்தொடர்ந்து கே.எல். ராகுலுடன் யுனிவர்சல் பாஸ் கிறிஸ் கெயில் முதல் 12 பந்துகளில் நான்கு ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார். பின் வாஷிங்டன் சுந்தர் வீசிய 13ஆவது ஓவரில் இரண்டு சிக்சர்களை விளாசி வானவேடிக்கை காட்டினார். மறுமுனையில் கே.எல்.ராகுல் தன்பங்கிற்கு சிக்சர்களை விளாசி தனது நான்காவது அரை சதத்தை அடித்தார்.

பின் நான்கு ஓவர்களில் 26 ரன்கள் எடுக்க வேண்டிய சூழலில் கெயில் 17ஆவது ஓவரில் இரண்டு சிக்சர்களை விளாசி அரைசதம் அடித்தார். இந்த சீசனில் அவர் அடிக்கும் முதல் அரை சதம் இதுவாகும். கடைசி மூன்று ஓவரில் 11 ரன்கள்‌ மட்டுமே தேவை என்பதால் 18ஆவது ஓவரிலேயே ஆட்டம் முடிந்துவிடும் என ரசிகர்கள் நினைத்தனர். ஆனால் ஆட்டம் கடைசி ஓவர் கடைசி பந்து வரை சென்றது.

கடைசி ஓவரில் இரண்டு ரன்கள் தேவை! பெங்களூரு அணி தரப்பில் கடைசி ஓவரை வீசிய சாஹல், முதல் இரண்டு பந்துகளில் ரன் வழங்காமல் மூன்றாவது பந்தில் ஒரு ரன் மட்டுமே வழங்கினார்.‌பின் நான்காவது பந்தை வீணடித்து விரக்தியில், ஐந்தாவது பந்தில் சிங்கிள் எடுக்க முயற்சித்த போது கெயில் 53 ரன்களில் ரன் அவுட் ஆனார்.

பின் கடைசி பந்தில் நிக்கோலஸ் பூரன் இறங்கி வந்தி சிக்சர் அடித்து மேட்ச்சை ஃபினிஷ் செய்தார். இதனால் பஞ்சாப் அணி ஒன்பது விக்கெட்கள் வித்தியாசத்தில் பெங்களூரு அணியிடம் த்ரில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் பஞ்சாப் அணி நான்கு புள்ளிகளுடன் தொடர்ந்து கடைசி இடத்தில் நீடிக்கிறது.

Stay Connected

16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe

Must Read

“வெற்றிவேல்., வீரவேல்”- மோடி., “ஜல்லிக்கட்டு கதாநாயகன் மோடி”- ஓபிஎஸ்!

தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகிற 6 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான பிரச்சாரத்தில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். தாராபுரம் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் எல்.முருகன் மற்றும் கூட்டணி...

நதியில் பதுக்கிய ஆதாரங்கள் மீட்பு: முகேஷ் அம்பானி மிரட்டல் வழக்கில் அடுத்தடுத்து திருப்பங்கள்!

முகேஷ் அம்பானி வீடு அருகே வெடி பொருட்களுடன் கார் நிறுத்தப்பட்ட வழக்கில், அடுத்தடுத்து பல திருப்பங்கள் நிகழ்ந்து வருகின்றன. மும்பையில் உள்ள பிரபல தொழிலதிபர் மற்றும் ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி வீட்டின்...

சூடுபிடிக்கும் வேட்பு மனு தாக்கல்: வாக்குப்பதிவு நாளன்று விடுமுறையா?

தமிழக சட்டப் பேரவைக்கு வரும் ஏப்ரல் 6ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து, கடந்த 12ம் தேதி முதல் வேட்புமனு தாக்கல் நடைபெற்று வருகிறது. முதல் நாளில் தேர்தல் மன்னன் பத்மநாபன், துணை...

வெற்றி நடை போடுமா தமிழகம்? – அதிமுக கூட்டணியின் பலம் என்ன? பலவீனம் என்ன?

வெற்றி நடை போடுமா தமிழகம்? – அதிமுக கூட்டணியின் பலம் என்ன? பலவீனம் என்ன? தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் 6ம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தலில் ஹாட்ரிக் வெற்றி பெற வேண்டும் என...

Related News

மண்டைக்குள் ஓடிக் கொண்டே இருக்கும் “எஞ்சாய் எஞ்சாமி” பாடல்: சிந்தைனை, பிரமிப்பு, புல்லரிப்பு!

கடந்த காலத்துக்கு சென்று ஒரு அறிவை திருட வேண்டும் என்றால் அதில் இதுவும் ஒரு விஷயமாக இருக்கும். அந்த அளவிற்கு இந்த பாடலில் வீடியோவும், இசையும், வரியும் அமைந்துள்ளது என்றே கூறலாம். சமீப...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here