Home விளையாட்டு கிரிக்கெட் ஐஎஸ்எல் தொடரில் பங்கேற்கும் மூன்றாவது காஷ்மீர் வீரர்!

ஐஎஸ்எல் தொடரில் பங்கேற்கும் மூன்றாவது காஷ்மீர் வீரர்!

2020-2021ஆம் ஆண்டுக்கான இந்தியன் சூப்பர் லீக் தொடரில், 19 வயதே ஆகும் காஷ்மீர் கால்பந்து வீரர் முஹீத் ஷபீர் கான், கேரளா பிளாஸ்டர்ஸ் அணிக்காக ஆடவுள்ளார்.

யு-18 கோல் கீப்பராக காஷ்மீரைச் சேர்ந் முஹீத் ஷபீக் கான் சென்ற ஆண்டு கேரளா பிளாஸ்டர்ஸ் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டார். பின்னர் அந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு முதலில் ரிசர்வ் அணியிலும், தற்போது மெய்ன் கேரளா பிளாஸ்டர்ஸ் அணியிலும் அவர் இடம்பிடித்துள்ளார்.

இந்த ஆண்டுக்கான ஐஎஸ்எல் கால்பந்து தொடர் நவம்பர் முதல் 2021 ஆம் ஆண்டு மார்ச் வரை நடக்கவுள்ளது. கரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கோவாவில் உள்ள மூன்று மைதானங்களிலேயே அனைத்து போட்டிகளும் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளன.

இந்நிலையில், கேரள அணியில் இடம் பிடித்தது பற்றி முஹீத் கூறுகையில், ”கேரளா பிளாஸ்டர்ஸ் மெய்ன் அணியில் இடம்பிடித்தது மகிழ்ச்சியளிக்கிறது. இந்த ஆண்டு ஐஎஸ்எல் சீசனில் பங்கேற்க வேண்டும் என்பதற்காக மிகவும் கடினமாக பயிற்சி மேற்கொண்டேன். ஆனால் அதில் பங்கேற்பதற்கான வேலை இன்னும் முடியவில்லை. அணியில் கோல் கீப்பர் இடத்திற்கு பல வீரர்கள் உள்ளனர்.

அனைவரும் உலகத் தரம் மிக்க கோல் கீப்பர்கள். நிச்சயம் அணியில் இடம்பிடிக்க இன்னும் அதிகமாக உழைக்க வேண்டும்.இந்த ஆண்டு ஐஎஸ்எல் தொடரில் ப்ளேயிங் அணியில் ஆடுவதற்கு வாய்ப்பு கிடைக்கும் என நம்புகிறேன். ஐந்து வருட ஒப்பந்தத்தில் ஒரு வருடத்திலேயே மெய்ன் அணியில் இடம்பிடித்துவிட்டேன். எனது திறன் மீதான நம்பிக்கை, எனது பயிற்சியாளர்கள் மீதான நம்பிக்கைகள் என்னை முன்னகர்த்திச் செல்லும்” என்றார்.முஹீத்திற்கு கால்பந்து மீதான ஆர்வம் தன் தந்தையிடம் இருந்தே வந்துள்ளது. ஜம்மு-காஷ்மீர் தேசிய அணிக்காக பல போட்டிகளில் பங்கேற்றவர் தான் ஷபீர் ஹூசைன்.

சர்வதேச தரத்திலான கோல் கீப்பர் என அவர் இன்றளவும் புகழப்படுகிறார். இந்நிலையில், ஆறு வயதில் தொடங்கிய முஹீத்தின் கால்பந்து ஆட்டம், அவரை கேரளா பிளாஸ்டர்ஸ் வரை கொண்டு வந்துள்ளது.கேரளா பிளாஸ்டர்ஸுக்கான யு-18 அணியில் இடம்கொடுத்தது இஷ்ஃபக் என்பவர் தான். இஷ்ஃபக் மற்றும் மெஹ்ராஜ் ஆகிய இருவர் தான் இதற்கு முன்னதாக காஷ்மீரில் இருந்து ஐஎஸ்எல் தொடரில் பங்கேற்றவர்கள்.இதையடுத்து முஹீத்திற்கு 30 நாள்கள் பயிற்சி வழங்கப்பட்டு தேர்வு நடைபெற்றுள்ளது. அந்தத் தேர்வில் தேர்வாளர்களையும், கோல் கீப்பர்களுக்கான பயிற்சியாளரையும் முஹீத் வெகுவாக ஈர்த்துள்ளார். இந்நிலையில், முஹீத்தை ஐந்து வருடங்களுக்கு அவர்கள் ஒப்பந்தம் செய்துள்ளனர்

Stay Connected

16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe

Must Read

“தகவல் போதவில்லை…”: கோவாக்சின் தடுப்பூசிக்கு அமெரிக்கா அனுமதி மறுப்பு!

கோவாக்சின் தடுப்பூசிக்கு அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் அவசர கால பயன்பாட்டு ஒப்புதல் அளிக்க மறுப்பு தெரிவித்துள்ளது. கொரோனா தொற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்ள உலகம் முழுவதும் மக்களுக்கு போர்க்கால அடிப்படையில் தடுப்பூசி செலுத்தப்பட்டு...

ஜகமே தந்திரம் கதை இதுதானா?- மதுரை சுருளி Vs லண்டன் தாதா!

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனிஷ் நடிப்பில் ஜூன் 18 ஆம் தேதி வெளியாகும் படம் ஜகமே தந்திரம். இந்த படம் நேரடியாக நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது. ஜகமே தந்திரம் திரைப்படத்தை 17...

கொரோனாவின் ஆட்டம்: சாய்னாவின் ஒலிம்பிக் கனவு பறிபோனது!

கொரோனா பரவல் காரணமாக இந்திய நட்சத்திர வீராங்கனை சாய்னா நேவாலின் டோக்கியோ ஒலிம்பிக் கனவு முற்றிலும் தகர்ந்துள்ளது. 32வது ஒலிம்பிக் போட்டி ஜூலை 23ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 8ம் தேதி வரை ஜப்பான்...

ஒன்றிய அரசா? மத்திய அரசா?: அண்ணா, கருணாநிதியால் முடியாததை செய்து காட்டுவாரா ஸ்டாலின்?

மத்திய அரசை ஒன்றிய அரசு என்று திமுகவினர் குறிப்பிடுவது விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு மு.க.ஸ்டாலின் பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். திராவிடம் மற்றும் சமூக நீதி கொள்கைகளின் அடித்தளத்துடன்,...

Related News

வரிசைக் கட்டும் ஓடிடி வெளியீடு: முக்கிய நடிகர்கள் படங்கள் ஓடிடி வெளியீட்டு தேதி இதோ!

வரிசைக் கட்டும் ஓடிடி வெளியீடு: முக்கிய நடிகர்கள் படங்கள் ஓடிடி வெளியீட்டு தேதி இதோ! கொரோனா பரவல் காரணமாக திரையரங்குகள் மூடும் நிலை ஏற்பட்டுள்ளது. திரையரங்குகள் திறக்கப்பட்டாலும் மக்கள் திரையரங்கு சென்று படம் பார்ப்பதில்...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here