Home விளையாட்டு கிரிக்கெட் விராட் கோலியின் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரூ அணி வெற்றி...!

விராட் கோலியின் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரூ அணி வெற்றி…!

துபாயில் நடைபெற்ற ஹைதராபாத் மற்றும் பெங்களூரு அணிகளுக்கு இடையிலான மூன்றாவது லீக் ஆட்டத்தில் விராட் கோலியின் பெங்களூரு அணி வெற்றி பெற்றுள்ளது.
டாஸை பெங்களூரு அணி இழந்திருந்தாலும் முதல் பத்து ஓவர் முழுவதுமே ஆட்டத்தை தங்கள் கண்ட்ரோலில் வைத்து கொண்டு அபாரமாக பேட் செய்தனர் ஓப்பனிங் பேட்ஸ்மேன்களான படிக்கல் – பின்ச் ஜோடி.

ஹைதராபாத் கேப்டன் வார்னர் தனது பவுலர்கள் அனைவரையும் சுழற்சி முறையில் மாற்றி பெங்களுருவின் மொமண்டமை உடைக்க முயன்றார். ஆனால் அவருக்கு வெறும் ஏமாற்றமே எஞ்சியது. பத்து ஓவர் முடிவில் பெங்களூரு அணி விக்கெட் ஏதும் இழக்காமல் 86 ரன்களை குவித்திருந்தது. அரை சதம் கடந்திருந்த படிக்கல் விஜய் ஷங்கர் வீசிய 11வது ஓவரின் கடைசி பந்தில் 56 ரன்களுக்கு அவுட்டானார்.அடுத்த ஓவரின் முதல் பந்திலேயே பின்ச்சும் அவுட்டானார். கேப்டன் கோலியும், டிவில்லியர்ஸும் களம் கண்டனர்.
எப்படியும் 180 ரன்களுக்கு மேல் பெங்களூரு அணி இலக்கு நிர்ணயிக்கும் என எதிர்பார்த்த நிலையில் 14 ரன்கள் எடுத்திருந்த போது, தமிழக வீரர் நடராஜனின் வேகத்தில் வீழ்ந்தார் கோலி.

கோலி ஆட்டமிழந்த பின்னர் பெங்களூரு அணியின் பாகுபலியாக ஆட்டத்தை தோளில் சுமந்து கொண்டு இறுதி வரை ஆட்டத்தை கொண்டு சென்றார் டிவில்லியர்ஸ். இருப்பினும் அந்த முயற்சியில் ஹைதராபாத் பவுலர்கள் கூட்டு முயற்சியினால் வென்று காட்டினர். பவர்பிளே முடிவில் 53 ரன்களை குவித்திருந்த பெங்களூரு, அதற்கடுத்த 14 ஓவர்களில் வெறும் 110 ரன்களை மட்டுமே எடுத்திருந்தது.
164 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற சுலபமான இலக்கை விரட்டியது ஹைதராபாத். ஒப்பனர்களாக சர்வதேச கிரிக்கெட்டின் அதிரடி பேட்ஸ்மேன்கள் வார்னரும், பேர்ஸ்டோவும் இறங்கினர். ஆறு ரன்களில் ஆட்டத்தின் பத்தாவது பந்திலேயே அவுட்டானார் வார்னர். இந்த தொடர் ஆரம்பிப்பதற்கு முன்னர் ‘என்னை நோக்கி நீங்கள் வேகமாக பந்து வீசினால், அது என் பேட்டில் பட்டு வந்த வேகத்திலேயே பவுண்டரிக்கு செல்லும்’ வார்னர் வார்னிங் கொடுத்திருந்தார்.

ஒன்-டவுனில் இறங்கிய மணீஷ் பாண்டே, பேர்ஸ்டோவுக்கு கம்பெனி கொடுக்க இருவரும் இணைந்து 71 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்திருந்தனர்.
அவர்களது பார்ட்னர்ஷிப்பை உடைக்க கோலி பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டார். பவுலர்கள் கைகொடுத்தாலும் பெங்களூரு அணியின் பீல்டர்கள் சொதப்ப பேர்ஸ்டோ பேட்டில் பட்டு பவுண்டரி லைனுக்குள்ளேயே காற்று வாங்கிய மூன்று கேட்ச்களை டிராப் செய்தனர்.

மணீஷ் பாண்டேவை 12வது ஓவரின் கடைசி பந்தில் வீழ்த்தியிருந்தார் சஹால். இருந்தாலும் ஹைதராபாத் அணி வெல்லும் என எதிர்பார்க்கப்பட்டது.
பேர்ஸ்டோ அடித்து நொறுக்க சஹாலின் சூழலில் சிக்கினார். அடித்த பந்திலேயே விஜய் ஷங்கரும் போல்டாக அதற்கடுத்த பேட்ஸ்மேன்கள் அனைவரும் ஒற்றை இலக்கில் வெளியேற வெறும் 153 ரன்களை மட்டுமே எடுத்து ஆல் அவுட்டானது. அதன் மூலம் பெங்களூரு 10 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

SRH – 153/10 (19.3 ஓவர்கள்)
RCB – 163/5 (20 ஓவர்கள்)

Stay Connected

16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe

Must Read

“வெற்றிவேல்., வீரவேல்”- மோடி., “ஜல்லிக்கட்டு கதாநாயகன் மோடி”- ஓபிஎஸ்!

தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகிற 6 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான பிரச்சாரத்தில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். தாராபுரம் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் எல்.முருகன் மற்றும் கூட்டணி...

நதியில் பதுக்கிய ஆதாரங்கள் மீட்பு: முகேஷ் அம்பானி மிரட்டல் வழக்கில் அடுத்தடுத்து திருப்பங்கள்!

முகேஷ் அம்பானி வீடு அருகே வெடி பொருட்களுடன் கார் நிறுத்தப்பட்ட வழக்கில், அடுத்தடுத்து பல திருப்பங்கள் நிகழ்ந்து வருகின்றன. மும்பையில் உள்ள பிரபல தொழிலதிபர் மற்றும் ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி வீட்டின்...

சூடுபிடிக்கும் வேட்பு மனு தாக்கல்: வாக்குப்பதிவு நாளன்று விடுமுறையா?

தமிழக சட்டப் பேரவைக்கு வரும் ஏப்ரல் 6ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து, கடந்த 12ம் தேதி முதல் வேட்புமனு தாக்கல் நடைபெற்று வருகிறது. முதல் நாளில் தேர்தல் மன்னன் பத்மநாபன், துணை...

வெற்றி நடை போடுமா தமிழகம்? – அதிமுக கூட்டணியின் பலம் என்ன? பலவீனம் என்ன?

வெற்றி நடை போடுமா தமிழகம்? – அதிமுக கூட்டணியின் பலம் என்ன? பலவீனம் என்ன? தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் 6ம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தலில் ஹாட்ரிக் வெற்றி பெற வேண்டும் என...

Related News

மண்டைக்குள் ஓடிக் கொண்டே இருக்கும் “எஞ்சாய் எஞ்சாமி” பாடல்: சிந்தைனை, பிரமிப்பு, புல்லரிப்பு!

கடந்த காலத்துக்கு சென்று ஒரு அறிவை திருட வேண்டும் என்றால் அதில் இதுவும் ஒரு விஷயமாக இருக்கும். அந்த அளவிற்கு இந்த பாடலில் வீடியோவும், இசையும், வரியும் அமைந்துள்ளது என்றே கூறலாம். சமீப...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here