Home விளையாட்டு கிரிக்கெட் சும்மா கிழி கிழி கிழினு டெல்லியை கிழித்த ஹைதராபாத்!

சும்மா கிழி கிழி கிழினு டெல்லியை கிழித்த ஹைதராபாத்!

துபாயில் நடைபெற்ற ஐபிஎல் தொடரின் 47ஆவது லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 88 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியை வீழ்த்தி பிளே ஆஃப் வாய்ப்பை தக்க வைத்துக்கொண்டுளள்து.

13ஆவது ஐபிஎல் தொடர் அமீரகத்தில் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. ஆனாலும் இன்னும் ஒரு அணிக்கூட பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறவில்லை. இந்த தொடர் எந்தளவிற்கு சிறந்த தொடர் என்பதை சுட்டிக் காட்டுகிறது. இந்த நிலையில் துபாயில் நடைபெற்ற ஐபிஎல் தொடரின் 47ஆவது லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் – டெல்லி கேபிட்டல்ஸ் அணிகள் மோதின.

புள்ளிகள் பட்டியலில் 11 போட்டிகளில் 14 புள்ளிகளுடன் டெல்லி அணி இரண்டாம் இடத்தில் இருந்ததால் இப்போட்டியில் வென்றால் பிளே ஆஃப் உறுதி. மறுபக்கம் ஹைதராபாத் அணி அதே 11 போட்டிகளில் எட்டு புள்ளிகளுடன் இருந்ததால் இப்போட்டியில் வென்றால் மட்டுமே பிளே ஆஃப் வாய்ப்பை தக்க வைத்துக் கொள்ள முடியும்.‌ நேற்று
(அக்.27) வார்னர் பிறந்தநாள் என்பதால் அவர் தனது அணியை அணி வெற்றிப் பாதைக்கு கொண்டுச்செல்வாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்தது.

இதைத்தொடர்ந்து இப்போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி சேஸிங் செய்ய முடிவெடுத்தார். ஹைதராபாத் அணியில் மூன்று மாற்றங்கள். பேர்ஸ்டோ, அபூல் சமாத், கலீல் அஹமத் அகியோருக்கு பதிலாக மீண்டும் வில்லியம்சன், சஹா, ஷபாஸ் நதீம் அணியில திரும்பினர். ஹைதராபாத் அணியின் தொடக்க வீரர்களாக களமிறங்கிய வார்னர், சஹா ஆகியோர் டெல்லி பந்துவீச்சாளர்களை பிரித்துமேய்தனர். ரபாடா, நார்க்யா, அக்ஷர் படேல், அஸ்வின் என யார் பந்துவீசினாலும் பவுண்டரியும், சிக்சர்களும் பறந்துக்கொண்டு இருந்து.

பிறந்தநாள் அன்று அதிரடியாக ஆடிய வார்னர் தன் 25ஆவது பந்தில் அரைசதம் கடந்தார். தொடர்ந்து அதிரடியாக ஆடிய அவர் 34 பந்துகளில் 66 ரன்கள் எடுத்த நிலையில் அஸ்வினிடம் ஆட்டமிழந்தார். அதில் எட்டு பவுண்டரி, இரண்டு சிக்சர் அடங்கும். இதனால் ஹைதராபாத் அணி 9.4 ஓவர்களில் 104 ரன்கள் எடுத்து வலுவான நிலையில் இருந்தது.
வார்னர் ஆடட்மிழந்தாலும் சஹாவின் அதிரடியான ஆட்டத்தை டெல்லி பந்துவீச்சாளர்களால் தடுக்க முடியவில்லை. 27 பந்துகளில் அரைசதம் அடித்த அவர், 45 பந்துகளில் 12 பவுண்டரி, இரண்டு சிக்சர் உட்பட 87 ரன்களில் ஆட்டமிழந்தார்.

இறுதியில் ஹைதராபாத் அணி 20 ஓவர்களில் இரண்டு விக்கெட்டுகளை இழந்து 219 ரன்களை குவித்தது. துபாயில் அடிக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும். மனீஷ் பாண்டே 44 ரன்களுடனும், வில்லியம்சன் 11 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். டெல்லி அணியில் அஸ்வின், அன்ரிச் நார்க்யா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை எடுத்தனர்.

220 ரன்கள் என்னும் கடின இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணி ஹைதராபாத் அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 19ஓவர்களில் 131 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அந்த அணியில் அதிகபட்சமாக ரிஷப் பண்ட் 36 ரன்கள் எடுத்தார். அவரைத் தவிர மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தார். ஹைதராபாத் அணி தரப்பில் ரஷீத் கான் தனது நான்கு ஓவர்களில் ஏழு ரன்களை மட்டுமே வழங்கி மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றி அற்புதமாக பந்துவீசினார். சந்தீப் ஷர்மா, நடராஜன் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளை எடுக்க, ஷபாஸ் நதீம், விஜய் சங்கர், ஜேசன் ஹோல்டர் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை எடுத்தனர்.

இதனால் ஹைதராபாத் அணி இப்போட்டியில் 88 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லியிடம் அபார வெற்றி பெற்று புள்ளிகள் பட்டியலில் 10 புள்ளிகளுடன் ஆறாவது இடத்துக்கு முன்னேறியுள்ளது. தொடக்கத்தில் சிறப்பாக ஆடிவந்த டெல்லி அணி தற்போது மூன்றாவது தொடர் தோல்வியை சந்தித்துள்ளது. இதன் விளைவாக அந்த அணி 14 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் இருந்து மூன்றாவது இடத்துக்கு சரிந்துள்ளது.

Stay Connected

16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe

Must Read

“தகவல் போதவில்லை…”: கோவாக்சின் தடுப்பூசிக்கு அமெரிக்கா அனுமதி மறுப்பு!

கோவாக்சின் தடுப்பூசிக்கு அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் அவசர கால பயன்பாட்டு ஒப்புதல் அளிக்க மறுப்பு தெரிவித்துள்ளது. கொரோனா தொற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்ள உலகம் முழுவதும் மக்களுக்கு போர்க்கால அடிப்படையில் தடுப்பூசி செலுத்தப்பட்டு...

ஜகமே தந்திரம் கதை இதுதானா?- மதுரை சுருளி Vs லண்டன் தாதா!

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனிஷ் நடிப்பில் ஜூன் 18 ஆம் தேதி வெளியாகும் படம் ஜகமே தந்திரம். இந்த படம் நேரடியாக நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது. ஜகமே தந்திரம் திரைப்படத்தை 17...

கொரோனாவின் ஆட்டம்: சாய்னாவின் ஒலிம்பிக் கனவு பறிபோனது!

கொரோனா பரவல் காரணமாக இந்திய நட்சத்திர வீராங்கனை சாய்னா நேவாலின் டோக்கியோ ஒலிம்பிக் கனவு முற்றிலும் தகர்ந்துள்ளது. 32வது ஒலிம்பிக் போட்டி ஜூலை 23ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 8ம் தேதி வரை ஜப்பான்...

ஒன்றிய அரசா? மத்திய அரசா?: அண்ணா, கருணாநிதியால் முடியாததை செய்து காட்டுவாரா ஸ்டாலின்?

மத்திய அரசை ஒன்றிய அரசு என்று திமுகவினர் குறிப்பிடுவது விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு மு.க.ஸ்டாலின் பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். திராவிடம் மற்றும் சமூக நீதி கொள்கைகளின் அடித்தளத்துடன்,...

Related News

வரிசைக் கட்டும் ஓடிடி வெளியீடு: முக்கிய நடிகர்கள் படங்கள் ஓடிடி வெளியீட்டு தேதி இதோ!

வரிசைக் கட்டும் ஓடிடி வெளியீடு: முக்கிய நடிகர்கள் படங்கள் ஓடிடி வெளியீட்டு தேதி இதோ! கொரோனா பரவல் காரணமாக திரையரங்குகள் மூடும் நிலை ஏற்பட்டுள்ளது. திரையரங்குகள் திறக்கப்பட்டாலும் மக்கள் திரையரங்கு சென்று படம் பார்ப்பதில்...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here