Home விளையாட்டு கிரிக்கெட் தலைகீழாக மாறிய பாயிண்ட்ஸ் டேபிள்; ஆர்சிபியை துவம்சம் செய்த ஹைதராபாத்!

தலைகீழாக மாறிய பாயிண்ட்ஸ் டேபிள்; ஆர்சிபியை துவம்சம் செய்த ஹைதராபாத்!

ஷார்ஜாவில் நடைபெற்ற ஐபிஎல் தொடரின் 52ஆவது லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ஐந்து விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை வீழ்த்தியது.

SRH beat RCB by 5 wickets

அமீரகத்தில் நடைபெற்று வரும் நடப்பு ஐபிஎல் தொடர் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. ஆனாலும் மும்பை இந்தியன்ஸ் அணி மட்டுமே பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியுள்ளது. இந்த நிலையில் ஷார்ஜாவில் நடைபெற்ற ஐபிஎல் தொடரின் 52ஆவது லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை எதிர்கொண்டது. இதில் பெங்களூரு அணி வென்றால் பிளே ஆஃப்.‌ ஹைதராபாத் அணி வென்றால் பிளே ஆஃப் வாய்ப்பை தக்க வைத்துக் கொள்ள முடியும்.

இதைத்தொடர்ந்து டாஸ் வென்ற ஹைதராபாத் அணியின் கேப்டன் வார்னர் முதலில் பெங்களூரு அணியை பேட்டிங் செய்ய அழைத்தார். தொடரின் தொடக்கத்தில் பவுண்டரி, சிக்சர்கள் மழை பொழிந்த ஷார்ஜாவின் ஆடுகளம் மந்தமாக மாறியுள்ளது.

அதன் காரணமாகவும், ஹைதராபாத் அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாததாலும் பெங்களூரு ஏழு விக்கெட்டுகள் இழப்பிற்கு 120 ரன்களை மட்டுமே எடுத்தது.

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட கோலி ஏழு ரன்களிலும், டி வில்லியர்ஸ் 24 ரன்களிலும் ஆட்டமிழந்து ஏமாற்றினர். அந்த அணியில் அதிகபட்சமாக ஜோஷ்வா ஃபிலிப் 32 ரன்கள் அடித்து அவுட்டானார். ஹைதராபாத் அணித் தரப்பில் பந்துவீசிய அனைவரும் விக்கெட்டுகளை எடுத்தனர். சந்தீப் ஷர்மா, ஜேசன் ஹோல்டர் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளும், நடராஜன், ரஷீத் கான், ஷபாஸ் நதீம் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை எடுத்தனர்.

தொடர்ந்து களமிறங்கிய ஹைதராபாத் அணி 14.1 ஓவர்களில் ஐந்து விக்கெட்களை இழந்து 121 ரன்களை எட்டியது. இதனால் ஹைதராபாத் அணி இப்போட்டியில் ஐந்து விக்கெட்கள் வித்தியாசத்தில் பெங்களூரு அணியை வீழ்த்தி புள்ளிகள் பட்டியலில் 12 புள்ளிகளுடன் ஆறாவது இடத்தில் இருந்து நான்காவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

ஜேசன் ஹோல்டர் 10 பந்துகளில் ஒரு பவுண்டரி, மூன்று சிக்சர் உட்பட 26 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். ஹைதராபாத் அணி தரப்பில் சாஹல் இரண்டு, நவ்தீப் சைனி, வாஷிங்டன் சுந்தர், உதானா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை எடுத்தனர். இப்போட்டியின் தோல்வியால் பெங்களூரு அணி அடுத்து டெல்லி அணியிடம் வென்றால் பிளே ஆஃப் உறுதி. டெல்லிக்கும் அதே நிலைதான். ஒருவேளை ஹைதராபாத் அணி மும்பையை வீழ்த்தினால் பிளே ஆஃப் செல்ல அதிக வாய்ப்புகள் உள்ளது. ஏனெனில் மும்பைக்கு அடுத்தப்படியாக ஹைதராபாத் அணிக்கு மட்டுமே நெட் ரன்ரேட் பாசிட்டிவில் உள்ளது.

Stay Connected

16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe

Must Read

“வெற்றிவேல்., வீரவேல்”- மோடி., “ஜல்லிக்கட்டு கதாநாயகன் மோடி”- ஓபிஎஸ்!

தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகிற 6 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான பிரச்சாரத்தில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். தாராபுரம் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் எல்.முருகன் மற்றும் கூட்டணி...

நதியில் பதுக்கிய ஆதாரங்கள் மீட்பு: முகேஷ் அம்பானி மிரட்டல் வழக்கில் அடுத்தடுத்து திருப்பங்கள்!

முகேஷ் அம்பானி வீடு அருகே வெடி பொருட்களுடன் கார் நிறுத்தப்பட்ட வழக்கில், அடுத்தடுத்து பல திருப்பங்கள் நிகழ்ந்து வருகின்றன. மும்பையில் உள்ள பிரபல தொழிலதிபர் மற்றும் ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி வீட்டின்...

சூடுபிடிக்கும் வேட்பு மனு தாக்கல்: வாக்குப்பதிவு நாளன்று விடுமுறையா?

தமிழக சட்டப் பேரவைக்கு வரும் ஏப்ரல் 6ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து, கடந்த 12ம் தேதி முதல் வேட்புமனு தாக்கல் நடைபெற்று வருகிறது. முதல் நாளில் தேர்தல் மன்னன் பத்மநாபன், துணை...

வெற்றி நடை போடுமா தமிழகம்? – அதிமுக கூட்டணியின் பலம் என்ன? பலவீனம் என்ன?

வெற்றி நடை போடுமா தமிழகம்? – அதிமுக கூட்டணியின் பலம் என்ன? பலவீனம் என்ன? தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் 6ம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தலில் ஹாட்ரிக் வெற்றி பெற வேண்டும் என...

Related News

மண்டைக்குள் ஓடிக் கொண்டே இருக்கும் “எஞ்சாய் எஞ்சாமி” பாடல்: சிந்தைனை, பிரமிப்பு, புல்லரிப்பு!

கடந்த காலத்துக்கு சென்று ஒரு அறிவை திருட வேண்டும் என்றால் அதில் இதுவும் ஒரு விஷயமாக இருக்கும். அந்த அளவிற்கு இந்த பாடலில் வீடியோவும், இசையும், வரியும் அமைந்துள்ளது என்றே கூறலாம். சமீப...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here