Home விளையாட்டு கிரிக்கெட் பிளே ஆஃப் ரேஸூக்கு லேட்டா வந்தாலும் லேட்டாஸ்டா வந்தா ஹைதராபாத்!

பிளே ஆஃப் ரேஸூக்கு லேட்டா வந்தாலும் லேட்டாஸ்டா வந்தா ஹைதராபாத்!

ஐபிஎல் தொடரின் கடைசி லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி பிளே ஆஃப் சுற்றுக்கு கடைசி அணியாக முன்னேறியுள்ளது.

ஐபிஎல் தொடர் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில் ஷார்ஜாவில் நடைபெற்ற‌ கடைசி லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி எதிர்கொண்டது. ஏற்கனவே பிளே ஆஃப் சுற்றுக்கு மும்பை, டெல்லி, பெங்களூரு அணிகள் முன்னேறிய நிலையில், இப்போட்டியில் ஹைதராபாத் அணி வெல்லும் பட்சத்தில் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும். இல்லையெனில் கொல்கத்தா அணி முன்னேறும்.

காயம் காரணமாக மூன்று போட்டிகளில் விலகிய ரோகித் ஷர்மா மீண்டும் அணிக்குள் திரும்பினார். தொடர்ந்து இப்போட்டியில் டாஸ் ஹைதராபாத் அணியின் கேப்டன் வார்னர் முதலில் சேஸிங் செய்ய முடிவெடுத்தார். மும்பை அணியில் பும்ரா, போல்ட் ஆகியோருக்கு ஓய்வு வழங்கி அவர்களுக்கு பதிலாக தவால் குல்கர்னி, பேட்டின்சனுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து முதலில் பேட்டிங் செய்த மும்பை அணியில் அணி ஹைதராபாத் அணியின் பவுலிங்கை எதிர்கொள்ள முடியாமல் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தது. இறுதியில் பொல்லார்ட்டின் அதிரடியில் 20 ஓவர்களில் எட்டு விக்கெட்களை இழந்து 149 ரன்களை மட்டுமே எடுத்தது. பொல்லார்ட் 25 பந்துகளில் இரண்டு பவுண்டரி, நான்கு சிக்சர் என 41 ரன்களில் ஆட்டமிழந்தார். ஹைதராபாத் அணி தரப்பில் சந்தீப் ஷர்மா மூன்று விக்கெட்டுகளும், ஜேசன் ஹோல்டர், ஷபாஸ் நதீம் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற வேண்டும் என்ற முனைப்புடன் களமிறங்கிய ஹைதராபாத் அணியில் தொடக்க வீரர்களான வார்னர், சஹா இருவரும் மாறி மாறி அதிரடி காட்டினர். இவர்களை பிறிக்க முடியாமல் தவித்தனர். இருவரும் மாறி மாறி அரைசதம் அடித்தனர். இதன் பலனாக ஹைதராபாத் அணி 17.1 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 151 ரன்களை எட்டியது. இதனால் ஹைதராபாத் அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி பிளே ஆஃப் சுற்றுக்கு கடைசி அணியாக எண்ட்ரி தந்துள்ளது.

வார்னர் 58 பந்துகளில் 10 பவுண்டரி, ஒரு சிக்சர் என 85 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.‌ இதன் மூலம் வார்னர் தொடர்ந்து ஆறாவது முறையாக 500க்கும் அதிக ரன்களை குவித்த முதல் வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். மறுமுனையில் சஹா 45 பந்துகளில் ஏழு பவுண்டரி, ஒரு சிக்சர் என 58 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இதைத்தொடர்ந்து நாளை மறுநாள் துபாயில் நடைபெறவுள்ள முதல் குவாலிஃபையர்‌ போட்டியில் மும்பை இந்தியன்ஸ், டெல்லி கேபிட்டல்ஸ் அணியுடன் மோதுகிறது. பின் ஆறாம் தேதி அபுதாபியில் நடைபெறவுள்ள எலிமினேட்டர் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியுடன் பலப்பரீட்சை நடத்துகிறது.

Stay Connected

16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe

Must Read

11,853.75% வளர்ச்சி., ‘டாகி ஸ்டைல்’: டோஜ்காயின் ( Dogecoin ) என்றால் என்ன?

11,853.75% வளர்ச்சி., ‘டாகி ஸ்டைல்’: டோஜ்காயின் ( Dogecoin ) என்றால் என்ன? இணையத்தை தற்போது கலக்கி வரும் கிரிப்டோகரன்சிதான் இந்த டோஜ்காயின் ( Dogecoin ). விளையாட்டாக உருவாக்கப்பட்ட இந்த கிரிப்டோகரன்சி கடந்த...

இஸ்ரேல் – பாலத்தீன மோதல்: இந்திய பெண் பலி; பின்னணி என்ன?

இஸ்ரேலில் பாலத்தீன ஹமாஸ் போராளிகள் நடத்திய தாக்குதலில் இந்திய பெண் உட்பட பலர் உயிரிழந்தனர். இஸ்ரேல் – பாலத்தீனம் நாடுகளுக்கு இடையே பல ஆண்டுகளாக கசப்பான உறவு இருந்து வருகிறது. கடந்த 1885ம் ஆண்டு,...

100 நாட்களுக்குள் இது நடக்கும்: முதலமைச்சராக பதவியேற்ற மு.க.ஸ்டாலின் அதிரடி- அமைச்சர்கள் பட்டியல்!

தமிழக முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றார். சென்னை கிண்டியில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஸ்டாலினுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடன் 33 அமைச்சர்கள் பதவி ஏற்றுக் கொண்டனர். கொரோனா பெருந்தொற்றுக்கு...

கொரோனாவை பயோ வெப்பனாக்க திட்டமிட்டதா சீனா? அதிரவைக்கும் புதிய ரிபோர்ட்!

கொரோனா வைரஸை ஆயுதமாக்குவது தொடர்பாக சீன ராணுவத்தின் விஞ்ஞானிகள் 5 ஆண்டுகளுக்கு முன் ஆய்வு செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது. சீனாவின் வுஹான் நகரில் பரவ தொடங்கி கொரோனா வைரஸ், உலகம் முழுவதும் பேரழிவு ஏற்படுத்தி...

Related News

உ.பி.யில் பசுக்களுக்கு ஆக்சிமீட்டர், தெர்மல் ஸ்கேனர்கள்: வலுக்கும் எதிர்ப்பு!

உத்தரப்பிரதேச மாநிலத்தில் பசுக்கள் பாதுகாப்பு மையங்களுக்கு ஆக்சிமீட்டர்கள் மற்றும் தெர்மல் ஸ்கேனர்கள் வழங்க அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா 2ம் அலை அதிதீவிரமாக பரவி வருகிறது. இந்தநிலையில், பசுக்களை கொரோனாவில் இருந்து...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here