Home விளையாட்டு கிரிக்கெட் நா இருக்கிறவரைக்கும் மும்பைய அசைக்க முடியாது என நிரூபித்த சூர்யகுமார் யாதவ்!

நா இருக்கிறவரைக்கும் மும்பைய அசைக்க முடியாது என நிரூபித்த சூர்யகுமார் யாதவ்!

பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் சூர்யகுமார் யாதவ் 43 பந்துகளில் 10 பவுண்டரி, மூன்று சிக்சர் என 79 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு மேட்ச்சை ஃபினிஷ் செய்துள்ளார். இதன் மூலம் ஆஸி.க்கு எதிரான தொடருக்கான இந்திய அணியில் வாய்ப்பு வழங்காதத பிசிசிஐ தேர்வுக்குழுவினருக்கு தனது பேட்டிங்கால் அவர் பதில் தந்துள்ளார்.

அபுதாபியில் நடைபெற்ற 48ஆவது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. இரு அணிகளும் தலா 14 புள்ளிகளை பெற்றிருந்தால் இப்போட்டியில் வெல்லும் அணி கிட்டத்தட்ட பிளே ஆஃப் சுற்றுக்கு செல்வது உறுதி. காயம் காரணமாக ரோகித் ஷர்மா ஓய்வெடுக்க மீண்டும் மும்பை அணியின் கேப்டனாக செயல்பட்டார் பொல்லார்ட்.

அவர் டாஸ் வென்றதும் பெங்களூரு அணியை‌ பேட்டிங் செய்ய கேட்டுக்கொண்டார். பெங்களூரு அணியில் மூன்று மாற்றங்கள். ஃபின்ச், மொயின் அலி, நவ்தீப் சைனி ஆகியோருக்கு பதிலாக ஜோஷ்வா ஃபிலிப், ஸ்டெயின், ஷிவம் தூபே அணியில் மீண்டும் சேர்க்ப்பட்டனர். முதலில் பேட்டிங் செய்த ஆர்சிபி அணியின் தொடக்க வீரர்களான ஃபிலிப், தேவ்தத் படிக்கல் அதிரடியாக ஆடினர்.

முதல் விக்கெட்டுக்கு 71 ரன்கள்‌ சேர்த்த நிலையில் ஃபிலிப் 33 ரன்களில் ஆட்டமிழந்தார். மறுபக்கம் அபாரமாக ஆடிய படிக்கல் தன் 30ஆவது பந்தில் அரைசதம் அடித்து செட் பேட்ஸ்மேனாக இருந்தார். ஆனால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட கேப்டன் கோலி ஒன்பது ரன்களில் பும்ராவிடம் வீழ்ந்தார். ஐபிஎல் வில் பும்ரா கைப்பற்றும் 100ஆவது விக்கெட் இதுவாகும்.

கோலி ஆட்டமிழந்தாலும் படிக்கல் பவுண்டரி விளாசி ஸ்கோரை உயர்த்தினார். ஒருகட்டத்தில் 15.1 ஓவர்களில் இரண்டு விக்கெட்டுகள் இழப்பிற்கு 131 ரன்கள் எடுத்த ஆர்சிபி அணி 17.2 ஓவர்களில் 138 ரன்களுக்கு ஆறு விக்கெட்டுகளை இழந்தது. டி வில்லியர்ஸ் 15 ரன்களிலும், தூபே இரண்டு ரன்களிலும், படிக்கல். 74 ரன்களிலும், கிறிஸ் மோரிஸ் நான்கு ரன்களிலும் தேவையில்லாத நேரத்தில் தங்களது விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். இறுதியில் ஆர்சிபி அணி 164 ரன்களை மட்டுமே எடுத்தது. மும்பை அணியில் பும்ரா மூன்று விளையாட்டுகள் கைப்பற்றினார்.

தொடர்ந்து 166 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய மும்பை அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. 10.4 ஓவர்களில் மூன்று விக்கெட்டுகளை இழந்து 72 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. டி காக் (28), இஷான் கிஷன் (18), சவுரப் திவாரி (3) ஆகியோர் வந்த வழியில் திரும்பினார். ஆனால் இரண்டாவது விக்கெட்டுக்கு இறங்கிய சூர்யகுமார் யாதவ் அபாரமாக ஆடினார். மறுமுனையில் குருனல் பாண்டியா 10 ரன்களில் அவுட்டாக மும்பை இந்தியன்ஸ் அணி 13.5 ஓவர்களில் நான்கு விக்கெட்டுகள் இழப்பிற்கு 107 ரன்கள் எடுத்தது.

அணியின் வெற்றிக்கு 37 பந்துகளில் 58 ரன்கள் தேவை. இந்த சூழலில் 29 பந்துகளில் அரைசதம் அடித்து தான் இருக்கும்வரை மும்பை இந்தியன்ஸ் அணியை அசைக்க முடியாது என்பதை தன் ஆட்டத்தால் சொல்லிக்காட்டினார் சூர்யகுமார் யாதவ். ஸ்டெயின், மோரிஸ், சிராஜ், சஹால் என எப்படி பந்துவீசினாலும் 360 டிகிரியில் பவுண்டரி சிக்சர் அடித்து அதகளப்படுத்தினார்.

Read More Cricket News

மறுபக்கம் ஹர்திக் பாண்டியா தனது இயல்பான அதிரடி காட்டினார். அணியின் வெற்றிக்கு ஏழு ரன்கள்‌ எடுக்க வேண்டிய நிலையில் பாண்டியா 19ஆவது ஓவரில் 17 ரன்களில் ஆட்டமிழந்தார். இருப்பினும் கடைசி ஓவரில் முதல் பந்தில் பவுண்டரி அடித்து மேட்சை ஃபினிஷ் செய்தார் சூர்யகுமார் யாதவ். இதனால் மும்பை இந்தியன்ஸ் அணி ஐந்து விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பெங்களூரு அணியை வீழ்த்தி 16 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறது.

நாளைய போட்டியில் சென்னை கொல்கத்தாவை வீழ்த்தினால் மும்பை அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும். பெங்களூரு அணி தரப்பில் சாஹல், சிராஜ் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகள் எடுக்க, மோரிஸ் ஒரு விக்கெட் எடுத்தார்.

43 பந்துகளில் 10 பவுண்டரி, மூன்று சிக்சர் என 79 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு மேட்ச்சை ஃபினிஷ் செய்துதந்த சூர்யகுமார் யாதவ், ஆஸி.க்கு எதிரான தொடருக்கான இந்திய அணியில் வாய்ப்பு வழங்காததற்கு தனது பேட்டிங்கால் பதில் தந்துள்ளார்.

Stay Connected

16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe

Must Read

“வெற்றிவேல்., வீரவேல்”- மோடி., “ஜல்லிக்கட்டு கதாநாயகன் மோடி”- ஓபிஎஸ்!

தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகிற 6 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான பிரச்சாரத்தில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். தாராபுரம் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் எல்.முருகன் மற்றும் கூட்டணி...

நதியில் பதுக்கிய ஆதாரங்கள் மீட்பு: முகேஷ் அம்பானி மிரட்டல் வழக்கில் அடுத்தடுத்து திருப்பங்கள்!

முகேஷ் அம்பானி வீடு அருகே வெடி பொருட்களுடன் கார் நிறுத்தப்பட்ட வழக்கில், அடுத்தடுத்து பல திருப்பங்கள் நிகழ்ந்து வருகின்றன. மும்பையில் உள்ள பிரபல தொழிலதிபர் மற்றும் ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி வீட்டின்...

சூடுபிடிக்கும் வேட்பு மனு தாக்கல்: வாக்குப்பதிவு நாளன்று விடுமுறையா?

தமிழக சட்டப் பேரவைக்கு வரும் ஏப்ரல் 6ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து, கடந்த 12ம் தேதி முதல் வேட்புமனு தாக்கல் நடைபெற்று வருகிறது. முதல் நாளில் தேர்தல் மன்னன் பத்மநாபன், துணை...

வெற்றி நடை போடுமா தமிழகம்? – அதிமுக கூட்டணியின் பலம் என்ன? பலவீனம் என்ன?

வெற்றி நடை போடுமா தமிழகம்? – அதிமுக கூட்டணியின் பலம் என்ன? பலவீனம் என்ன? தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் 6ம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தலில் ஹாட்ரிக் வெற்றி பெற வேண்டும் என...

Related News

மண்டைக்குள் ஓடிக் கொண்டே இருக்கும் “எஞ்சாய் எஞ்சாமி” பாடல்: சிந்தைனை, பிரமிப்பு, புல்லரிப்பு!

கடந்த காலத்துக்கு சென்று ஒரு அறிவை திருட வேண்டும் என்றால் அதில் இதுவும் ஒரு விஷயமாக இருக்கும். அந்த அளவிற்கு இந்த பாடலில் வீடியோவும், இசையும், வரியும் அமைந்துள்ளது என்றே கூறலாம். சமீப...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here