Home விளையாட்டு கிரிக்கெட் முதல் முறையாக மகளிர் டி20 சேலஞ்ச் கோப்பையை வென்ற ட்ரையல்ப்ளேசர்ஸ்....!

முதல் முறையாக மகளிர் டி20 சேலஞ்ச் கோப்பையை வென்ற ட்ரையல்ப்ளேசர்ஸ்….!

முதல் முறையாக மகளிர் டி20 சேலஞ்ச் கோப்பையை வென்ற ட்ரையல்ப்ளேசர்ஸ்….!

ஷார்ஜா: சூப்பர்நோவாஸ் அணிக்கு எதிரான மகளிர் டி20 சேலஞ்ச் இறுதிப் போட்டியில் 16 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று முதல்முறையாக ட்ரையல்ப்ளேசர்ஸ் அணி கோப்பையை வென்றது.

மகளிர் டி20 சேலஞ்ச் தொடரில் இறுதிப்போட்டியில் சூப்பர்நோவாஸ் – ட்ரையல்ப்ளேசர்ஸ் அணிகள் ஆடியது. இதில் டாஸ் வென்ற சூப்பர்நோவாஸ் அணியின் கேப்டன் ஹர்மன் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். பின்னர் முதலில் பேட்டிங் ஆடிய ட்ரையல்ப்ளேசர்ஸ் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 118 ரன்கள் சேர்த்தது.

trailblazers won their maiden womens t20 challenge cup

பின்னர் 119 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சூப்பர்நோவாஸ் அணி களமிறங்கியது. அதில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட சமாரி அட்டப்பட்டு 6 ரன்களில் வெளியேறி அதிர்ச்சியளித்தார். இதனால் சூப்பர்நோவாஸ் அணி நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.

ஜெமிமா ரோட்ரிக்ஸ் – டானியா பாட்டியா இணை நிதானமாக ஆடி பவர் ப்ளே ஓவர்கள் முடிவில் 28 ரன்கள் சேர்த்தது. 7ஆவது ஓவரில் டானியா 14 ரன்களில் ஆட்டமிழக்க, அதனைத்தொடர்ந்து 9ஆவது ஓவரில் ரோட்ரிக்ஸ் 13 ரன்களில் வெளியேறினார்.

இதனால் சூப்பர்நோவாஸ் அணியின் ஸ்கோர் ஆமை வேகத்தில் ஏறியது. பின்னர் சிரிவர்தனே – கேப்டன் ஹர்மன் இணை சிங்கிள்களாக அடித்து ஸ்கோரை ஏற்றினர். இதனால் 14 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 70 ரன்கள் எடுத்திருந்தது.

15ஆவது ஓவரில் சிரிவர்தனே 19 ரன்களில் ஆட்டமிழக்க, ஆட்டம் பரபரப்பானது. பின்னர் ஹர்மன் அதிரடி ஆட்டத்திற்கு மாறினார். 17 ஓவர்களில் 85 ரன்கள் எடுத்திருந்த நிலையில், கடைசி 19 பந்துகளுக்கு 34 ரன்கள் எடுக்க வேண்டிய நிலை வந்தது. அதில் 18ஆவது ஓவரில் 6 ரன்கள் மட்டுமே சேர்க்கப்பட்டது.

19ஆவது ஓவரில் அனுஜா 8 ரன்களிலும், ஹர்மன் 30 ரன்களிலும், வஸ்தேக்கர் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழக்க சூப்பர்நோவாஸ் அணியின் தோல்வி உறுதியானது. இறுதியாக கடைசி ஓவரில் 24 ரன்கள் எடுக்க வேண்டிய நிலை வந்தது. அதில் 7 ரன்கள் மட்டுமே சேர்க்க, ட்ரையல்ப்ளேசர்ஸ் அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, முதல்முறையாக மகளிர் டி20 சேலஞ்ச் கோப்பையை வென்று அசத்தியது.

Stay Connected

16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe

Must Read

“வெற்றிவேல்., வீரவேல்”- மோடி., “ஜல்லிக்கட்டு கதாநாயகன் மோடி”- ஓபிஎஸ்!

தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகிற 6 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான பிரச்சாரத்தில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். தாராபுரம் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் எல்.முருகன் மற்றும் கூட்டணி...

நதியில் பதுக்கிய ஆதாரங்கள் மீட்பு: முகேஷ் அம்பானி மிரட்டல் வழக்கில் அடுத்தடுத்து திருப்பங்கள்!

முகேஷ் அம்பானி வீடு அருகே வெடி பொருட்களுடன் கார் நிறுத்தப்பட்ட வழக்கில், அடுத்தடுத்து பல திருப்பங்கள் நிகழ்ந்து வருகின்றன. மும்பையில் உள்ள பிரபல தொழிலதிபர் மற்றும் ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி வீட்டின்...

சூடுபிடிக்கும் வேட்பு மனு தாக்கல்: வாக்குப்பதிவு நாளன்று விடுமுறையா?

தமிழக சட்டப் பேரவைக்கு வரும் ஏப்ரல் 6ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து, கடந்த 12ம் தேதி முதல் வேட்புமனு தாக்கல் நடைபெற்று வருகிறது. முதல் நாளில் தேர்தல் மன்னன் பத்மநாபன், துணை...

வெற்றி நடை போடுமா தமிழகம்? – அதிமுக கூட்டணியின் பலம் என்ன? பலவீனம் என்ன?

வெற்றி நடை போடுமா தமிழகம்? – அதிமுக கூட்டணியின் பலம் என்ன? பலவீனம் என்ன? தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் 6ம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தலில் ஹாட்ரிக் வெற்றி பெற வேண்டும் என...

Related News

மண்டைக்குள் ஓடிக் கொண்டே இருக்கும் “எஞ்சாய் எஞ்சாமி” பாடல்: சிந்தைனை, பிரமிப்பு, புல்லரிப்பு!

கடந்த காலத்துக்கு சென்று ஒரு அறிவை திருட வேண்டும் என்றால் அதில் இதுவும் ஒரு விஷயமாக இருக்கும். அந்த அளவிற்கு இந்த பாடலில் வீடியோவும், இசையும், வரியும் அமைந்துள்ளது என்றே கூறலாம். சமீப...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here