Home விளையாட்டு கிரிக்கெட் நாங்களும் ஆட்டத்தில இருக்கோம்; மனீஷ் பாண்டே - விஜய் சங்கர் பார்ட்னர்ஷிப்பில் ராஜஸ்தானை வீழ்த்திய...

நாங்களும் ஆட்டத்தில இருக்கோம்; மனீஷ் பாண்டே – விஜய் சங்கர் பார்ட்னர்ஷிப்பில் ராஜஸ்தானை வீழ்த்திய ஹைதராபாத்!

மனீஷ் பாண்டே, விஜய் சங்கர், ஜேசன் ஹோல்டர் ஆகியோரது சிறப்பான ஆட்டத்தால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எட்டு விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி மூன்று தொடர் தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது சன்ரைசர்ஸ் ஹைதராபாத்.

துபாயில் நடைபெற்ற ஐபிஎல் தொடரின் 40ஆவது லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் – ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. ராஜஸ்தான் ராயல்ஸ் அணி புள்ளிகள் பட்டியலில் 10 போட்டிகளில் நான்கு வெற்றிகளுடன் எட்டு புள்ளிகள் எடுத்து ஆறாவது இடத்திலும் ஹைதராபாத் அணி ஒன்பது போட்டிகளில் மூன்று வெற்றிகளுடன் ஆறு புள்ளிகளை மட்டுமே எடுத்து ஏழாவது இடத்தில் இருந்து.

பிளே ஆஃப் வாய்ப்பை தக்க வைத்துக் கொள்ள இரு அணிகளுக்குமே இப்போட்டி வாழ்வா சாவா போட்டிதான். அதுமட்டுமில்லாமல் ஹைதராபாத் அணி கடைசியாக ஆடிய மூன்று போட்டிகளிலும் தொடர் தோல்விகளை தழுவியதாலும் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இருந்தது.

இதைத்தொடர்ந்து இப்போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணியின் கேப்டன் வார்னர் சேஸிங் செய்ய விரும்பினார். அணியில் இரண்டு மாற்றங்கள். வில்லியம்சனுக்கு பதிலாக ஜேசன் ஹோல்டர் இந்த சீசனில் அறிமுகமானார். பசில் தாம்பிக்கு பதில் மீண்டும் ஷபாஸ் நதீம் அணியில் திரும்பினார். ராஜஸ்தான் ராயல்ஸ் அணி எவ்வித மாற்றமும் இன்றி களமிறங்கியது.

இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவர்களில் ஆறு விக்கெட்டுகளை இழந்து 154 ரன்களை எடுத்தது.ஹோல்டர் ஸ்டீவ் ஸ்மித், சாம்சன், ரியான் பராக் என மூன்று விக்கெட்டுகள் மற்றும் உத்தபாப்பாவை ரன் அவுட் செய்தார். ரஷீத் கான், விஜய் சங்கர் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை எடுத்தனர். ராஜஸ்தான் அணி தரப்பில் அதிகபட்சமாக சாம்சன் 36 ரன்கள் எடுத்தார்.

பின் களமிறங்கிய ஹைதராபாத் அணியின் ஓப்பனரும் கேப்டனும் வார்னரை முதல் ஓவரிலும், பேர்ஜ்டோவை மூன்றாவது ஓவரிலும் பெவிலியனுக்கு அனுப்பி வைத்தார் ஆர்ச்சர். இதனால் ‌ஹைதராபாத் அணி 2.4 ஓவர்களில் 16 ரன்களுக்கு இரண்டு விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இந்த நிலையில் விஜய் சங்கருடன் ஜோடி சேர்ந்த மனீஷ் பாண்டே அதிரடியாக ஆடி தனது 28ஆவது பந்தில் அரைசதம் விளாசி அணியின் ஸ்கோரை உயர்த்தினார். இதனால் ஹைதராபாத் அணிக்கு தேவையான ரன்ரேட் ஐ ஏழுக்கு கீழ் இருந்தது

மறுமுனையில் விஜய் சங்கர் சிங்கிள் அடித்து ஆங்கர் இன்னிங்ஸ் ஆடினார். இவர்களது பார்டனர்ஷிப் ஆட்டத்தை கொஞ்சம் கொஞ்சமாக ஹைதராபாத் அணி பக்கம் திருப்பியது. பின் 19ஆவது ஓவரின் முதல் பந்தில் பவுண்டரி அடித்து தன் அரைசதம் விளாசியது மட்டுமின்றி ஆட்டத்தையும் ஃபினிஷ் செய்தார் விஜய் சங்கர். இந்த ஜோடி 140 ரன்களை சேர்த்தால் ஹைதராபாத் அணி எட்டு விக்கெட்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வீழ்த்தி இந்த சீசனில் தனது நான்காவது வெற்றியை பதிவு செய்தது. இதுமட்டுமல்லாமல் மூன்று தொடர் தோல்விகளுக்கு முற்றுப்புள்ளியும் வைத்துள்ளது.

மனீஷ் பாண்டே 47 பந்துகளில் நான்கு பவுண்டரி, எட்டு சிக்சர் உட்பட 83 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்த வெற்றியின் மூலம் ஹைதராபாத் அணி 10 போட்டிகளில் நான்கு வெற்றி உட்பட எட்டு புள்ளிகளுடன் ஆறாவது இடத்துக்கு முன்னேறி பிளே ஆஃப் ஆட்டத்தில் நாங்களும் இருக்கிறோம் என்பதை அறிவித்துள்ளது! Thudhu Cricket News Tamil

Stay Connected

16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe

Must Read

“வெற்றிவேல்., வீரவேல்”- மோடி., “ஜல்லிக்கட்டு கதாநாயகன் மோடி”- ஓபிஎஸ்!

தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகிற 6 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான பிரச்சாரத்தில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். தாராபுரம் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் எல்.முருகன் மற்றும் கூட்டணி...

நதியில் பதுக்கிய ஆதாரங்கள் மீட்பு: முகேஷ் அம்பானி மிரட்டல் வழக்கில் அடுத்தடுத்து திருப்பங்கள்!

முகேஷ் அம்பானி வீடு அருகே வெடி பொருட்களுடன் கார் நிறுத்தப்பட்ட வழக்கில், அடுத்தடுத்து பல திருப்பங்கள் நிகழ்ந்து வருகின்றன. மும்பையில் உள்ள பிரபல தொழிலதிபர் மற்றும் ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி வீட்டின்...

சூடுபிடிக்கும் வேட்பு மனு தாக்கல்: வாக்குப்பதிவு நாளன்று விடுமுறையா?

தமிழக சட்டப் பேரவைக்கு வரும் ஏப்ரல் 6ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து, கடந்த 12ம் தேதி முதல் வேட்புமனு தாக்கல் நடைபெற்று வருகிறது. முதல் நாளில் தேர்தல் மன்னன் பத்மநாபன், துணை...

வெற்றி நடை போடுமா தமிழகம்? – அதிமுக கூட்டணியின் பலம் என்ன? பலவீனம் என்ன?

வெற்றி நடை போடுமா தமிழகம்? – அதிமுக கூட்டணியின் பலம் என்ன? பலவீனம் என்ன? தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் 6ம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தலில் ஹாட்ரிக் வெற்றி பெற வேண்டும் என...

Related News

மண்டைக்குள் ஓடிக் கொண்டே இருக்கும் “எஞ்சாய் எஞ்சாமி” பாடல்: சிந்தைனை, பிரமிப்பு, புல்லரிப்பு!

கடந்த காலத்துக்கு சென்று ஒரு அறிவை திருட வேண்டும் என்றால் அதில் இதுவும் ஒரு விஷயமாக இருக்கும். அந்த அளவிற்கு இந்த பாடலில் வீடியோவும், இசையும், வரியும் அமைந்துள்ளது என்றே கூறலாம். சமீப...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here