Home விளையாட்டு கால்பந்து சாம்பியன்ஸ் லீக்: ஆறாவது முறையாக கப்படித்து பேயர்ன் முனிச் சாதனை!

சாம்பியன்ஸ் லீக்: ஆறாவது முறையாக கப்படித்து பேயர்ன் முனிச் சாதனை!

யு.இ.எஃப்.ஏ. சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரின் இறுதிப் போட்டியில் பேயர்ன் முனிச் அணி 1-0 என்ற கோல் கணக்கில் பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் அணியை வீழ்த்தி ஆறாவது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

யு.இ.எஃப்.ஏ. சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரின் இறுதிப்போட்டி நேற்று (ஆக.24) நடைபெற்றது. இந்தப் போட்டியில் பேயர்ன் முனிச் அணி, பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் அணியை எதிர்த்து விளையாடியது.

விறுவிறுப்பான இந்தப் போட்டியின் தொடக்கம் முதலே இரு அணி வீரர்களும் சம பலத்துடன் மோதினர். இதனால் முதல் பாதி ஆட்டநேர முடிவில் கோலேதுமின்றி ஆட்டத்தில் சமநிலை நீடித்தது.

இதைத்தொடர்ந்து நடைபெற்ற இரண்டாம் பாதி ஆட்டத்தில் முழுத்திறமையையும் வெளிப்படுத்திய பேயர்ன் முனிச் அணியின் கிங்ஸ்லி கோமன் அட்டத்தின் 59ஆவது நிமிடத்தில் கோலடித்து, அணியின் கோல் கணக்கை தொடங்கிவைத்தார்.

பின்னர் இறுதி வரை போராடிய பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் அணி எதிரணியின் டிஃபென்ஸை கடந்து கோலடிக்க இயலவில்லை. இதனால் ஆட்டநேர முடிவில் பேயர்ன் முனிச் அணி 1-0 என்ற கோல் கணக்கில் பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

இந்த வெற்றியின் மூலம் பேயர்ன் முனிச் அணி யு.இ.எஃப்.ஏ. சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரில் ஆறாவது முறையாக சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றி அசத்தியுள்ளது.

Stay Connected

16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe

Must Read

“வெற்றிவேல்., வீரவேல்”- மோடி., “ஜல்லிக்கட்டு கதாநாயகன் மோடி”- ஓபிஎஸ்!

தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகிற 6 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான பிரச்சாரத்தில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். தாராபுரம் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் எல்.முருகன் மற்றும் கூட்டணி...

நதியில் பதுக்கிய ஆதாரங்கள் மீட்பு: முகேஷ் அம்பானி மிரட்டல் வழக்கில் அடுத்தடுத்து திருப்பங்கள்!

முகேஷ் அம்பானி வீடு அருகே வெடி பொருட்களுடன் கார் நிறுத்தப்பட்ட வழக்கில், அடுத்தடுத்து பல திருப்பங்கள் நிகழ்ந்து வருகின்றன. மும்பையில் உள்ள பிரபல தொழிலதிபர் மற்றும் ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி வீட்டின்...

சூடுபிடிக்கும் வேட்பு மனு தாக்கல்: வாக்குப்பதிவு நாளன்று விடுமுறையா?

தமிழக சட்டப் பேரவைக்கு வரும் ஏப்ரல் 6ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து, கடந்த 12ம் தேதி முதல் வேட்புமனு தாக்கல் நடைபெற்று வருகிறது. முதல் நாளில் தேர்தல் மன்னன் பத்மநாபன், துணை...

வெற்றி நடை போடுமா தமிழகம்? – அதிமுக கூட்டணியின் பலம் என்ன? பலவீனம் என்ன?

வெற்றி நடை போடுமா தமிழகம்? – அதிமுக கூட்டணியின் பலம் என்ன? பலவீனம் என்ன? தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் 6ம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தலில் ஹாட்ரிக் வெற்றி பெற வேண்டும் என...

Related News

மண்டைக்குள் ஓடிக் கொண்டே இருக்கும் “எஞ்சாய் எஞ்சாமி” பாடல்: சிந்தைனை, பிரமிப்பு, புல்லரிப்பு!

கடந்த காலத்துக்கு சென்று ஒரு அறிவை திருட வேண்டும் என்றால் அதில் இதுவும் ஒரு விஷயமாக இருக்கும். அந்த அளவிற்கு இந்த பாடலில் வீடியோவும், இசையும், வரியும் அமைந்துள்ளது என்றே கூறலாம். சமீப...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here