Home விளையாட்டு பிற விளையாட்டு 365 நாட்களும் லைவ் ஸ்ட்ரீமிங்; அமெரிக்காவில் அரங்கேறிய நிஜ பிக்பாஸ்

365 நாட்களும் லைவ் ஸ்ட்ரீமிங்; அமெரிக்காவில் அரங்கேறிய நிஜ பிக்பாஸ்

365 நாட்களும் தான் என்ன செய்கிறேன் என்பதை மக்கள் பார்வைக்காக லைவ் ஸ்ட்ரீமாக வெளியிட்டுள்ளார் அமெரிக்காவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர். இக்கதையை கேட்கும்போதே தி ட்ரூமன் ஷோ திரைப்படமும், பிக்பாஸ் நிகழ்ச்சியும் கண்முன் வந்து செல்கிறது அல்லவா? வாருங்கள் அவரது இந்த வினோத அனுபத்தை குறித்து பார்க்கலாம்.

தற்போதைய தொழில்நுட்ப உலகில் எத்தனை மாற்றங்களும் முன்னேற்றங்களும் வந்தாலும் அடுத்தவர் என்ன செய்கிறார்கள் என்பதை தெரிந்துகொள்ள நம்மில் பலரும் ஒருவிதமான க்யூரியாசட்டி இருக்கும் என்பதே நிதர்சனம்.

பொதுவாக நாம் என்ன செய்கிறோம் என்பதை அடுத்தவர் நோட்டம் பார்த்தாலே பிடிக்காது என அலட்டிக்கொள்ளும் நாம், தெரிந்தோ தெரியாமலோ மற்றவர்களை தான் நோட்டம் செய்து வருகிறோம்.

அப்படி இருக்கையில் அமெரிக்காவைச் சேர்ந்த இளைஞர் ஒருவரோ தான் ஒரு ஆண்டில் அதாவது 365 நாட்களில் 24 மணி நேரமும் என்ன செய்கிறேன் என்பதை மற்றவர்கள் பார்க்கும்படி வெட்டவெளிச்சமாக லைவ் ஸ்ட்ரீமாக வெளியிட்டுள்ளார். அட இதுதான் தி ட்ரூமன் ஷோ திரைப்படத்திலும், பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் பார்த்திருக்கிறோம் என்றுதானே கூறுகிறீர்கள்.

பிக்பாஸ் நிகழ்ச்சி என்றால் என்ன என்று குறித்து யாருக்கும் சொல்லி புரிய வேண்டியதில்லை. கிட்டத்தட்ட இந்த பிக்பாஸ் நிகழ்ச்சி பெட்ரூம் என்ற திரைப்படத்தில் இருந்து எடுத்ததுதான்.

1998இல் பிரபல அமெரிக்க நடிகர் ஜிம் கெர்ரி நடிப்பில் வெளியான திரைப்படம் தி ட்ரூமன் ஷோ. குழந்தையிலிருந்து திருமணமானப் பிறகும் ஜிம் கேரியின் வாழ்க்கையை அவருக்கே தெரியாமல் உலகிற்கு வெளிச்சம் போட்டு காட்டும் நிகழ்ச்சி தான் இந்த ட்ரூமன் ஷோ. கற்பனை கூட செய்து பார்க்க முடியாத இந்தக் கதையை தற்போது நிஜமாக்கியுள்ளார் அந்த அமெரிக்க இளைஞர்.

அமெரிக்காவை சேர்ந்த இளைஞர் மைக்கேல் ஜெர்ரி. கல்லூரி படிப்பில் இருந்து பாதியிலேயே விடுபட்ட இவர் புதிய ப்ராஜெக்ட்டில் தன்னை சோதித்து கொண்டார். கடந்த ஜனவரி 2019 ஆம் ஆண்டில் இருந்து அடுத்த ஓராண்டிற்கு தன் என்ன செய்கிறேன் என்பதை 175 நாட்களும் லைவ் ஸ்ட்ரீமாக வெளியிட்டுள்ளார்.

அதன்படி கடந்தாண்டு ஜனவரி மாதமே தனது பெண் ரூமிலும், தனது தோள்பட்டையிலும் பொருத்தியுள்ளார். வீட்டில் தான் என்ன செய்கிறேன் என்பதை மட்டும் இல்லாமல் நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்தி அடிக்கும் லூட்டிகளையும் வெளியில் தெரியாத நபருடன் வாக்குவாதத்தில் ஈடுபடுவது உள்ளிட்ட அனைத்தும் அந்த வீடியோவில் வெளியாகியுள்ளது.

இந்த சாகச சோதனையில் ஒரு படி மேலே சென்று, தான் கழிவறையில் செலவழிக்கும் நேரத்தையும் அவர் வீடியோவாக வெளியிட்டுள்ளார். முதல் 5 மாதங்களில் நான் என்ன செய்கிறேன் என்பதை நானே எனது வீடியோக்களை பார்த்து என்னை நான் மாற்றிக் கொண்டேன் என்கிறார் மைக்கேல் ஜெர்ரி.

குறிப்பாக மதுப்பழக்கத்தை விடுத்து ஆரோக்கியமான உணவு பழக்கங்களை உட்கொள்ளவேண்டும் என்பதை தெரிந்து கொண்டதாக கூறிய அவர், இந்த 365 நாட்கள் சோதனையின் மூலம் தனது சுய விழிப்புணர்வு அதிகரிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

இச்சோதனையை செய்வதற்கு அரியா என்கிற இளைஞர் தான் தனக்கு இன்ஸ்பிரேஷனாக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். அரியாவின் இந்த சோதனை ஒரு வாரத்திற்கு மட்டுமே தாக்குப் பிடித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

ஒருவர் ஏன் இதுபோன்ற சோதனையில் ஈடுபட வேண்டும் என்ற என்ற கேள்விக்கு அவர், இது அதிகமாக இருப்பதால் நான் இதை செய்தேன். அது மட்டுமல்லாது உலகம் அதைப் பார்க்க தகுதியானது என்று நான் நினைக்கிறேன் எனவும் பதிலளித்தார்.

இந்த சோதனையால் தனது வாழ்வில் பல மாற்றங்களை கண்டதாக தெரிவித்த அவர், இந்த சோதனையை எவ்வாறு நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதை விவரித்து ஒரு புத்தகமாகவும் எழுத உள்ளாராம்‌.
Attachments area

Stay Connected

16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe

Must Read

“வெற்றிவேல்., வீரவேல்”- மோடி., “ஜல்லிக்கட்டு கதாநாயகன் மோடி”- ஓபிஎஸ்!

தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகிற 6 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான பிரச்சாரத்தில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். தாராபுரம் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் எல்.முருகன் மற்றும் கூட்டணி...

நதியில் பதுக்கிய ஆதாரங்கள் மீட்பு: முகேஷ் அம்பானி மிரட்டல் வழக்கில் அடுத்தடுத்து திருப்பங்கள்!

முகேஷ் அம்பானி வீடு அருகே வெடி பொருட்களுடன் கார் நிறுத்தப்பட்ட வழக்கில், அடுத்தடுத்து பல திருப்பங்கள் நிகழ்ந்து வருகின்றன. மும்பையில் உள்ள பிரபல தொழிலதிபர் மற்றும் ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி வீட்டின்...

சூடுபிடிக்கும் வேட்பு மனு தாக்கல்: வாக்குப்பதிவு நாளன்று விடுமுறையா?

தமிழக சட்டப் பேரவைக்கு வரும் ஏப்ரல் 6ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து, கடந்த 12ம் தேதி முதல் வேட்புமனு தாக்கல் நடைபெற்று வருகிறது. முதல் நாளில் தேர்தல் மன்னன் பத்மநாபன், துணை...

வெற்றி நடை போடுமா தமிழகம்? – அதிமுக கூட்டணியின் பலம் என்ன? பலவீனம் என்ன?

வெற்றி நடை போடுமா தமிழகம்? – அதிமுக கூட்டணியின் பலம் என்ன? பலவீனம் என்ன? தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் 6ம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தலில் ஹாட்ரிக் வெற்றி பெற வேண்டும் என...

Related News

மண்டைக்குள் ஓடிக் கொண்டே இருக்கும் “எஞ்சாய் எஞ்சாமி” பாடல்: சிந்தைனை, பிரமிப்பு, புல்லரிப்பு!

கடந்த காலத்துக்கு சென்று ஒரு அறிவை திருட வேண்டும் என்றால் அதில் இதுவும் ஒரு விஷயமாக இருக்கும். அந்த அளவிற்கு இந்த பாடலில் வீடியோவும், இசையும், வரியும் அமைந்துள்ளது என்றே கூறலாம். சமீப...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here