Home விளையாட்டு பிற விளையாட்டு ரசிகைகளுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த பிரபல டென்னிஸ் வீரர்!

ரசிகைகளுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த பிரபல டென்னிஸ் வீரர்!

அண்மையில் நட்சத்திர டென்னிஸ் வீரர் ரோஜர் பெடரர் தனது ரசிகைகள் இருவரையும் நேரில் சந்தித்து சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார்.

கொரோனா நோய்த் தொற்றால் உலகம் முழுவதும் ஊரடங்க அமல்படுத்தப்பட்டு இருந்தது. இத்தாலியில் தான் முதன் முதலில் தொற்று பரவல் அதிக வேகமெடுத்துப் பல உயிர்களைப் பலி கொண்டது. இதனால் கடந்த 3 மாதங்களாக இத்தாலியில் கடும் ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு வந்தது. அங்குள்ள மக்கள் அச்சத்தில் வீட்டிற்குள்ளேயே முடங்கி இருந்த நிலையில் தான் சமூக வலைத்தளங்களில் வீடியோ ஒன்று வைரலானது. இந்த வீடியோ அனைவரது கவனத்தையும் திசை திருப்பியது.

இத்தாலியின் லிகுரியா பகுதியைச் சேர்ந்த இரண்டு பெண்கள் விக்டோரியா மற்றும் கரோலா ஆகியோர் தங்களது விளையாட்டின் மீதுள்ள ஆர்வத்தினால் புதிய வழி ஒன்றை கண்டறிந்தனர். அது தான் ரூப் டாப் டென்னிஸ். அதாவது இருவரும் தினமும் மொட்டை மாடிக்குச் சென்று டென்னிஸ் விளையாடத் தொடங்கினர்.

இவர்கள் விளையாடுவது போன்ற வீடியோ கடந்த ஏப்ரல் மாதம் சமூக வலைத்தளங்களில் பரவியது. இதையடுத்து இவர்களின் மொட்டை மாடி டென்னிஸை பின்பற்றிப் பல விளையாட்டு வீரர்கள் தங்களது பயிற்சிகளை மேற்கொண்டனர்.

இவர்களின் இந்த வீடியோ வைரலானதை அடுத்து இது குறித்து இத்தாலிய உணவு பிராண்ட் பாரிலா, விக்டோரியா மற்றும் கரோலாவை பேட்டி எடுத்தனர். அப்போது இருவரும் தங்களுக்கு பிடித்த டென்னிஸ் வீரர் பெடரர் குறித்து புகழ்ந்து பேசினார்கள். அப்போது பின் புரத்திலிருந்து நட்சத்திர வீரர் ரோஜர் பெடரரே அவர்கள் முன் வந்து சர்ப்ரைஸ் கொடுத்தார்.

அதன் பின் ஆச்சரியத்தில் துள்ளிக் குதித்த இரு சிறுமிகளும் அவருடன் செல்ஃபி எடுத்துக் கொண்டது மட்டுமின்றி டென்னிஸ் விளையாடவும் செய்தனர். அதன் பின்னர் அனைவரும் மொட்டை மாடியில் இணைந்து பாஸ்தா உண்டு மகிழ்ந்தார்.

இதற்கு பின் ரோஜர் பெடரர் அவர்களுக்கு மேலும் ஒரு சர்ப்ரைஸ் இருப்பதாக அந்த வீடியோவில் தெரிவித்திருந்தார். அதாவது ரஃபேல் நடால் சம்மர் கேம்பில் பயிற்ச்சி பெறுவதற்கான வாய்ப்பையும் வழங்கி அவர்களை சந்தோசப் படுத்தினார்.

இந்த வீடியோவை பாரில்லா இணையத்தில் வெளியிட்டதை தொடர்ந்து, 1.7 மில்லியன் பார்வையாளர்களை இதனை பார்த்துள்ளனர்.

Stay Connected

16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe

Must Read

“வெற்றிவேல்., வீரவேல்”- மோடி., “ஜல்லிக்கட்டு கதாநாயகன் மோடி”- ஓபிஎஸ்!

தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகிற 6 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான பிரச்சாரத்தில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். தாராபுரம் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் எல்.முருகன் மற்றும் கூட்டணி...

நதியில் பதுக்கிய ஆதாரங்கள் மீட்பு: முகேஷ் அம்பானி மிரட்டல் வழக்கில் அடுத்தடுத்து திருப்பங்கள்!

முகேஷ் அம்பானி வீடு அருகே வெடி பொருட்களுடன் கார் நிறுத்தப்பட்ட வழக்கில், அடுத்தடுத்து பல திருப்பங்கள் நிகழ்ந்து வருகின்றன. மும்பையில் உள்ள பிரபல தொழிலதிபர் மற்றும் ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி வீட்டின்...

சூடுபிடிக்கும் வேட்பு மனு தாக்கல்: வாக்குப்பதிவு நாளன்று விடுமுறையா?

தமிழக சட்டப் பேரவைக்கு வரும் ஏப்ரல் 6ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து, கடந்த 12ம் தேதி முதல் வேட்புமனு தாக்கல் நடைபெற்று வருகிறது. முதல் நாளில் தேர்தல் மன்னன் பத்மநாபன், துணை...

வெற்றி நடை போடுமா தமிழகம்? – அதிமுக கூட்டணியின் பலம் என்ன? பலவீனம் என்ன?

வெற்றி நடை போடுமா தமிழகம்? – அதிமுக கூட்டணியின் பலம் என்ன? பலவீனம் என்ன? தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் 6ம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தலில் ஹாட்ரிக் வெற்றி பெற வேண்டும் என...

Related News

மண்டைக்குள் ஓடிக் கொண்டே இருக்கும் “எஞ்சாய் எஞ்சாமி” பாடல்: சிந்தைனை, பிரமிப்பு, புல்லரிப்பு!

கடந்த காலத்துக்கு சென்று ஒரு அறிவை திருட வேண்டும் என்றால் அதில் இதுவும் ஒரு விஷயமாக இருக்கும். அந்த அளவிற்கு இந்த பாடலில் வீடியோவும், இசையும், வரியும் அமைந்துள்ளது என்றே கூறலாம். சமீப...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here