Home தொழில்நுட்பம் டெக்னாலஜி உங்க பட்ஜெட் 15 ஆயிரமா...அனைத்து வசதிகளுடன் கூடிய ஸ்மார்ட்போன்கள் லிஸ்ட் இதோ.!

உங்க பட்ஜெட் 15 ஆயிரமா…அனைத்து வசதிகளுடன் கூடிய ஸ்மார்ட்போன்கள் லிஸ்ட் இதோ.!

கரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக சில தளர்வுகளுடன் ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் அனைவரும் அன்றாட தேவைகளை தவிர்த்து, வேறு காரணங்களுக்காக வெளியில் செல்லாமல் வீட்டிலேயே முடங்கியுள்ளனர்.

இதனால், அலுவலக பயன்பாடு, நெட்பிளிக்ஸ், அமேசான் உள்ளிட்ட இணையத்தளத்தில் படங்களை பார்க்க, மாணக்கர்கள் ஆன்லைன் வகுப்பில் பங்கேற்க, உறவினர்கள் அல்லது நண்பர்களுடன் வீடியோ காலில் பேச ஆகியவற்றிற்கு ஸ்மார்ட்போன் தேவையாக இருக்கும்.
இப்படி இருக்கும் சூழ்நிலையில், கடையில் நம்ம பட்ஜெட்டிற்கு ஏற்றவாறு பார்த்து வாங்குவது சாத்தியமில்லை. இதனால் ஆன்லைனில் வாங்கினால், கரோனா பரவலிலிருந்து நம்மை தற்காத்துக் கொள்ள முடியும். அப்படி ஆன்லைனில் வாங்குவதில், உங்களுடைய பட்ஜெட் 10ஆயிரம் முதல் 15ஆயிரம் இருந்தால் இந்த கரோனா காலத்தை கடக்க இந்த வகை ஸ்மார்ட்போன்கள் உறுதுணையாக இருக்கும். மேற்சொன்ன அனைத்து வகைப்பயன்பாடுகளும் இந்த ஸ்மார்ட்போன்களில் பூர்த்தியாகும் என்பதில் ஐயமில்லை.

போக்கோ M2 ப்ரோ (POCO M2 Pro):
கடந்த ஜூலை மாதம் இந்தியாவில் அறிமுகமான போக்கோ எம் 2 ப்ரோ ஸ்மார்ட்போனின் 4 ஜிபி ரேம் + 64 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் ஆனது ரூ.13,999 -ற்கும், இதன் 6 ஜிபி ரேம் + 64 ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.14,999 -க்கும் விற்பனைக்கு வந்துள்ளது.
இந்த ஸ்மார்ட்போன் அவுட் ஆஃப் தி ப்ளூ, க்ரீன் மற்றும் க்ரீனர், டூ ஷேட்ஸ் ஆஃப் பிளாக் என மூன்று வண்ணங்களில் வந்துள்ளது. மேலும், இந்த புதிய போக்கோ ஸ்மார்ட்போன் ஹோல் பஞ்ச் டிஸ்ப்ளேவுடன்வருகிறது. குவாட் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. ப்ரோ கலர் மோட், ப்ரோ வீடியோ மோட் மற்றும் ரா மோட் உள்ளிட்ட சில அட்டகாசமான கேமரா பயன்முறைகளுடன் இந்த ஸ்மார்ட்போன் உள்ளது.

ரியல்மி 6i ( Realme 6i )
இந்த ஸ்மார்ட்போன் ஆக்டா கோர் ப்ராசஸர், பின்புறத்தில் நான்கு கேமராக்கள் மற்றும் செல்பீ கேமராவிற்கான ஹோல்-பஞ்ச் வடிவமைப்பு போன்ற பிரதான அம்சங்களை கொண்டுள்ளது. ரியல்மி 6i இரண்டு ரேம் மற்றும் சேமிப்பக உள்ளமைவுகளில் வருகிறது, 4 ஜிபி + 64 ஜிபி மற்றும் 6 ஜிபி + 64 ஜிபி. இதன் அடிப்படை 4 ஜிபி வேரியண்டின் விலை ரூ.12,999 என்றும், இதன் 6 ஜிபி வேரியண்டின் விலை ரூ.14,999 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 2.05GHz மீடியாடெக் ஹீலியோ ஜி 90 டி ஆக்டா கோர் ப்ராசஸர் மூலம் 4 ஜிபி ரேம் மற்றும் ஏஆர்எம் ஜி 76 ஜி.பீ.யு உடன் இணைக்கப்பட்டுள்ளது. இதில் 64 ஜிபி அளவிலான இன்டர்னல் மெமரி உள்ளது மற்றும் ஒரு பிரத்யேக மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட்டைப் பயன்படுத்தி மேலும் விரிவாக்கக்கூடிய ஆதரவினையும் கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை ஸ்கேனர் உள்ளது.

ரெட் நோட் ப்ரோ 9 (Redmi Note 9 Pro)
இந்தாண்டின் இடையில் இந்த ஸ்மார்ட்போன் இந்தியாவில் வெளியிடப்பட்டது. இதில் 6 ஜிபி + 128 ஜிபி வேரியண்டின் விலை ரூ.14,999 ஆக விற்பனையில் உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ஆக்டா கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 720 ஜி SoC ப்ராசஸர், குவாட் ரியர் கேமரா அமைப்பு, அதில் 64 மெகாபிக்சல் பிரதான கேமரா, ஒரு பெரிய 5,020 எம்ஏஎச் பேட்டரி, 33W பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு, செல்பீக்களுக்காக ஹோல் பஞ்ச் கட்அவுட்டுக்குள் 32 மெகாபிக்சல் கேமரா போன்ற பிரதான அம்சங்களை கொண்டுள்ளது.

சாம்சங் கேலக்ஸி எம் 21 (Samsung M2)

இந்தியாவில், சாம்சங் கேலக்ஸி எம் 21, 4 ஜிபி ரேம் + 64 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்டின் விலை ரூ.12,999-ல் இருந்து தொடங்குகிறது. 6 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷனும் உள்ளது. இரண்டு மாடல்களும் மிட்நைட் ப்ளூ மற்றும் ரேவன் பிளாக் கலர் ஆப்ஷன்களில் வருகிறது.

டூயல்-சிம் (நானோ) சாம்சங் கேலக்ஸி எம் 21, 6.4 இன்ச் முழு எச்டி + (1080×2340 பிக்சல்கள்) இன்ஃபினிட்டி-யு சூப்பர் அமோலேட் டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது. ஹூட்டின் கீழ், போனில் ஆக்டா கோர் எக்ஸினோஸ் 9611 SoC உள்ளது, மாலி-ஜி 72 எம்பி 3 ஜி.பீ.யு மற்றும் 6 ஜிபி வரை LPDDR4x ரேம் இணைக்கப்பட்டுள்ளது. 48 மெகாபிக்சல் முதன்மை சென்சார் மூலம் புகைப்படங்களைக் கைப்பற்றுவதற்கும் வீடியோக்களைப் பதிவு செய்வதற்கும் மூன்று பின்புற கேமரா அமைப்பு உள்ளது, இது 8 மெகாபிக்சல் சென்சாருடன் ஜோடியாக 123 டிகிரி அல்ட்ரா-வைட்-ஆங்கிள் லென்ஸ் மற்றும் 5 மெகாபிக்சல் டெப்த் சென்சார் கொண்டுள்ளது.

Stay Connected

16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe

Must Read

“தகவல் போதவில்லை…”: கோவாக்சின் தடுப்பூசிக்கு அமெரிக்கா அனுமதி மறுப்பு!

கோவாக்சின் தடுப்பூசிக்கு அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் அவசர கால பயன்பாட்டு ஒப்புதல் அளிக்க மறுப்பு தெரிவித்துள்ளது. கொரோனா தொற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்ள உலகம் முழுவதும் மக்களுக்கு போர்க்கால அடிப்படையில் தடுப்பூசி செலுத்தப்பட்டு...

ஜகமே தந்திரம் கதை இதுதானா?- மதுரை சுருளி Vs லண்டன் தாதா!

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனிஷ் நடிப்பில் ஜூன் 18 ஆம் தேதி வெளியாகும் படம் ஜகமே தந்திரம். இந்த படம் நேரடியாக நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது. ஜகமே தந்திரம் திரைப்படத்தை 17...

கொரோனாவின் ஆட்டம்: சாய்னாவின் ஒலிம்பிக் கனவு பறிபோனது!

கொரோனா பரவல் காரணமாக இந்திய நட்சத்திர வீராங்கனை சாய்னா நேவாலின் டோக்கியோ ஒலிம்பிக் கனவு முற்றிலும் தகர்ந்துள்ளது. 32வது ஒலிம்பிக் போட்டி ஜூலை 23ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 8ம் தேதி வரை ஜப்பான்...

ஒன்றிய அரசா? மத்திய அரசா?: அண்ணா, கருணாநிதியால் முடியாததை செய்து காட்டுவாரா ஸ்டாலின்?

மத்திய அரசை ஒன்றிய அரசு என்று திமுகவினர் குறிப்பிடுவது விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு மு.க.ஸ்டாலின் பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். திராவிடம் மற்றும் சமூக நீதி கொள்கைகளின் அடித்தளத்துடன்,...

Related News

வரிசைக் கட்டும் ஓடிடி வெளியீடு: முக்கிய நடிகர்கள் படங்கள் ஓடிடி வெளியீட்டு தேதி இதோ!

வரிசைக் கட்டும் ஓடிடி வெளியீடு: முக்கிய நடிகர்கள் படங்கள் ஓடிடி வெளியீட்டு தேதி இதோ! கொரோனா பரவல் காரணமாக திரையரங்குகள் மூடும் நிலை ஏற்பட்டுள்ளது. திரையரங்குகள் திறக்கப்பட்டாலும் மக்கள் திரையரங்கு சென்று படம் பார்ப்பதில்...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here