Home தொழில்நுட்பம் டெக்னாலஜி 11,853.75% வளர்ச்சி., ‘டாகி ஸ்டைல்’: டோஜ்காயின் ( Dogecoin ) என்றால் என்ன?

11,853.75% வளர்ச்சி., ‘டாகி ஸ்டைல்’: டோஜ்காயின் ( Dogecoin ) என்றால் என்ன?

11,853.75% வளர்ச்சி., ‘டாகி ஸ்டைல்’: டோஜ்காயின் ( Dogecoin ) என்றால் என்ன?

இணையத்தை தற்போது கலக்கி வரும் கிரிப்டோகரன்சிதான் இந்த டோஜ்காயின் ( Dogecoin ). விளையாட்டாக உருவாக்கப்பட்ட இந்த கிரிப்டோகரன்சி கடந்த ஓராண்டில் 11,853.75% வளர்ச்சியடைந்திருக்கிறது.

சமூக வலைதளங்களை அவ்வப்போது எட்டிப்பார்ப்பவர்கள் கண்களில்கூட ஒரு முறையாவது தென்பட்டிருக்கும் மீம்தான் டோஜ் மீம்கள். ஜப்பானின் ஷிபா இனு இன நாயை மையமாக கொண்டு இந்த மீம்கள் தட்டிவிடப்படுகின்றன.

dogecoin news in tamil
dogecoin news in tamil

இந்த மீம்கள் அதிகளவில் வைரலான அதே காலகட்டத்தில்தான், கிரிப்டோகரன்சிகளும் டிரெண்டிங்கில் இருந்தன. இவை இரண்டையும் கேலி செய்யும் வகையில், கடந்த 2013ம் ஆண்டில் உருவாக்கப்பட்ட கிரிப்டோகரன்சிதான் டோஜ்காயின் ( Cryptocurrency Dogecoin ). இதை உருவாக்கியவர்கள் மார்கஸ் ஜாக்சன் மற்றும் பில்லி பால்மர் ஆகிய இரு மென்பொருள் இன்ஜினியர்கள். இவர்கள்கூட, டோஜ்காயின் பின் வரும் காலங்களில் ​அசுர வளர்ச்சியடையும் என நினைத்து பார்த்திருக்க மாட்டார்கள்.

ஆனால், தற்போது பிட்காயினுடன் போட்டிபோடும் அளவிற்கு டோஜ்காயின் பிரபலமடைந்திருக்கிறது. இதற்கு முக்கிய காரணம், டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் தட்டிவிட்ட ட்வீட்கள்தான்.

dogecoin news in tamil
dogecoin news in tamil

அண்மை காலமாகவே கிரிப்டோகரன்சிகளில் எலான் மஸ்க் ஆர்வம் காட்டி வருகிறார். கடந்த பிப்ரவரி மாதம் சுமார் 1.5 பில்லியன் டாலர் முதலீடு செய்து, கிரிப்டோகரன்சிகளின் வரிசையில் முதலிடத்தில் உள்ள பிட்காயினை வாங்கினார். மேலும், டெஸ்லா கார்களை இனி பிட்காயின் மூலம் வாங்கலாம் எனவும் அறிவித்தார். இதனால், ஒரு பிட்காயினின் மதிப்பு 50 ஆயிரம் டாலரை தாண்டி உச்சம் தொட்டது.

இதைத்தொடர்ந்து, மற்றொரு கிரிப்டோகரன்சியான டோஜ்காயினுக்கும் ஆதரவாக எலான் மஸ்க் சமூக வலைதளங்களில் பேச தொடங்கினார். இதனிடையே, ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் பிட்காயின் அதிகளவில் மின்சாரம் பயன்படுத்துவதாக குற்றம்சாட்டி, டெஸ்லா கார்கள் வாங்குவதற்கான பிட்காயின் பேமெண்ட்டை நிறுத்தினார்.

ஒருபுறம் பிட்காயினை கழட்டிவிட்ட எலான் மஸ்க், மற்றொரு புறம் டோஜ்காயினை தலையில் தூக்கி வைத்து கொண்டாட ஆரம்பித்தார். ஒரு கட்டத்தில் டோஜின் தந்தை நான் என்று அறிவித்தார்.

Elon Musk has been interested in cryptocurrencies dogecoin news lately
Elon Musk has been interested in cryptocurrencies dogecoin news lately

இதுமட்டுமின்றி, எலான் மஸ்க்கின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான ஸ்பேஸ் எக்ஸ், அடுத்த ஆண்டு DOGE 1 மிஷன் மூலம் செயற்கைக்கோளை நிலாவிற்கு அனுப்ப உள்ளதாகவும், இந்த திட்டத்திற்கான முழு பேமெண்டையும், டோஜ்காயின் மூலம் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் பெறப்போவதாகவும் தெரிவித்தார்.

இதன் காரணமாக, கடந்த ஆண்டு வரை பூஜ்ஜியத்தில் இருந்த ஒரு டோஜ்காயினின் மதிப்பு, தற்போது 0.5 டாலர் வரை உயர்ந்துள்ளது. இதனால், பலரும் டோஜ்காயின்களை வாங்கி குவித்து வருகின்றனர். இனி எல்லாம், டாகி டாகி டாகி டாகி ஸ்டைல் தான்.

Stay Connected

16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe

Must Read

“தகவல் போதவில்லை…”: கோவாக்சின் தடுப்பூசிக்கு அமெரிக்கா அனுமதி மறுப்பு!

கோவாக்சின் தடுப்பூசிக்கு அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் அவசர கால பயன்பாட்டு ஒப்புதல் அளிக்க மறுப்பு தெரிவித்துள்ளது. கொரோனா தொற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்ள உலகம் முழுவதும் மக்களுக்கு போர்க்கால அடிப்படையில் தடுப்பூசி செலுத்தப்பட்டு...

ஜகமே தந்திரம் கதை இதுதானா?- மதுரை சுருளி Vs லண்டன் தாதா!

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனிஷ் நடிப்பில் ஜூன் 18 ஆம் தேதி வெளியாகும் படம் ஜகமே தந்திரம். இந்த படம் நேரடியாக நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது. ஜகமே தந்திரம் திரைப்படத்தை 17...

கொரோனாவின் ஆட்டம்: சாய்னாவின் ஒலிம்பிக் கனவு பறிபோனது!

கொரோனா பரவல் காரணமாக இந்திய நட்சத்திர வீராங்கனை சாய்னா நேவாலின் டோக்கியோ ஒலிம்பிக் கனவு முற்றிலும் தகர்ந்துள்ளது. 32வது ஒலிம்பிக் போட்டி ஜூலை 23ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 8ம் தேதி வரை ஜப்பான்...

ஒன்றிய அரசா? மத்திய அரசா?: அண்ணா, கருணாநிதியால் முடியாததை செய்து காட்டுவாரா ஸ்டாலின்?

மத்திய அரசை ஒன்றிய அரசு என்று திமுகவினர் குறிப்பிடுவது விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு மு.க.ஸ்டாலின் பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். திராவிடம் மற்றும் சமூக நீதி கொள்கைகளின் அடித்தளத்துடன்,...

Related News

வரிசைக் கட்டும் ஓடிடி வெளியீடு: முக்கிய நடிகர்கள் படங்கள் ஓடிடி வெளியீட்டு தேதி இதோ!

வரிசைக் கட்டும் ஓடிடி வெளியீடு: முக்கிய நடிகர்கள் படங்கள் ஓடிடி வெளியீட்டு தேதி இதோ! கொரோனா பரவல் காரணமாக திரையரங்குகள் மூடும் நிலை ஏற்பட்டுள்ளது. திரையரங்குகள் திறக்கப்பட்டாலும் மக்கள் திரையரங்கு சென்று படம் பார்ப்பதில்...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here