ஹானார் நிறுவனத்தின் ஹானார் ஹன்டர் கேமிங் லேப்டாப் வரும் செப்டம்பர் 16ஆம் தேதி அறிமுகமாகவுள்ளது.
டெல், லெனோவா, அசர், ஹெச்பி போன்ற நிறுவனங்கள் வரிசையில் தற்போது ஹானார் நிறுவனமும் கேமிங் லேப்டாப்பில் களமிறங்கியுள்ளது. ஹானார் ஹண்டர் கேமிங் லேப்டாப் சீனாவில் வரும் செப்டம்பர் 16ஆம் தேதி அறிமுகமாகவுள்ளது. இத்தகவலை ஹானார் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது
இந்நிகழ்வில் கேமிங் லேப்டாப் மட்டுமின்றி இரண்டு புதிய ஸ்மார்ட்வாட்ச் மாடல்களையும் ஹானர் அறிமுகம் செய்யவுள்ளது.
அவை வாட்ச் ஜிஎஸ் ப்ரோ மற்றும் ஹானர் வாட்ச் இஎஸ் மாடல்களாக இருக்கும் என தெரிகிறது. இந்த இரண்டு ஸ்மார்ட்வாட்ச்களும் கடந்த செப்டம்பர் 4ஆம் தேதி அன்று 2020 ஐஎஃப்ஏ நிகழ்வில் அறிமுகம் செய்யப்பட்டது.
இந்த ஹண்டர் சீரிஸ் கேமிங் லேப்டாப் முதலில் சீனாவில் அறிமுகமானாப்பிறகு இந்தியாவிலும் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேசமயம் புதிய ஹானர் ஹண்டர் கேமிங் லேப்டாப்பின் அம்சங்கள் குறித்து எதுவும் அறிவிக்கப்படவில்லை
ரகசியமாக வைக்கப்பட்டுள்ள இந்த லேப்டாப் வின்டோஸ் 10 இயங்குதளத்தில் இன்டெல் 10ஆவது ஜெனரேஷன் இயங்கக்கூடியதாக இருக்கும் என தெரிகிறது. மேலும் இவை இன்டெல் i5 மற்றும் i7 பிராசசர் ஒத்துழைக்கும் என கூறப்படுகிறது.
இதற்கான விளம்பர படத்தின் படி லேப்டாப் ஸ்கிரீனின் பின்பறம் மிளிரும் படியாக லோகோ இடம்பெற்று உள்ளது.எது எப்படியோ வரும் 16ஆம் தேதி இந்த லேப்டாப் பின் சிறப்பம்சங்கள் மற்றும் விலை தெரிந்துவிடும்.